குப்தப் பேரரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குப்தப் பேரரசு

குப்தப் பேரரசு உலகின் மிகப்பெரிய பேரரசுகளில் ஒன்றாக விளங்கியது. கி.பி 320 தொடக்கம் 600 வரை, குப்தர் எனப்படும் அரச மரபினரால் ஆளப்பட்ட இப் பேரரசு அதன் உச்சக்கட்டத்தில், அக்கால வட இந்தியாவின் பெரும் பகுதியை உள்ளடக்கி இருந்தது. இதன் பகுதிகள் இன்று பாகிஸ்தான், இந்தியா, வங்காளதேசம் ஆகிய நாடுகளில் உள்ளன. அறிவியல், கணிதம், வானியல், சமயம், இந்திய தத்துவம் ஆகிய துறைகளில் குப்தப் பேரசுக் காலம் இந்தியாவின் பொற்காலம் எனக் குறிப்பிடப்படுவது உண்டு. குப்தர் ஆட்சியில் ஏற்பட்டிருந்த அமைதியும், வளமும் அறிவியல் மற்றும் கலைத் துறைகளில் வளர்ச்சி ஏற்படுவதை ஊக்குவித்தன. பதிற்று எண்முறை (decimal numeral system), பூச்சியம் (zero) தொடர்பான கருத்துரு என்பன குப்தப் பேரரசுக் காலத்துக் கண்டுபிடிப்புக்களே. வரலாற்றாளர்கள், செந்நெறி நாகரிகத்தின் ஒரு மாதிரியாகக் குப்தப் பேரசை, ஹான் பேரரசு, டாங் பேரரசு (Tang Empire), ரோமப் பேரரசு என்பவற்றுடன் ஒன்றாக வைத்து எண்ணுகிறார்கள். {{navbox | listclass = hlist | titlestyle = background: #EEDD82 | groupstyle = background: #EEDD82 | belowstyle = background: #EEDD82 |name = இந்திய வரலாறு |title = இந்திய வரலாறு |group1 =நாகரீகம்

|list1 =

கற்காலம்-கி.மு 2000000 • மெஹெர்கர்-கி.மு 7000–3300 • சிந்துவெளி நாகரிகம்-கி.மு 3300–1700 • வேதகாலம்-கி.மு 1500–500 •

| group2 =ஆட்சி

| list2 =

மகத நாடு-கி.மு 684–424 • பாண்டியர்-கி.மு 500–கி.பி 1610 • நந்தர்-கி.மு 424-321 • சேரர்-கி.மு 300–கி.பி 1200 • சோழர்-கி.மு 300–கி.பி 1279 • மௌரியப் பேரரசு-கி.மு 321–184 • சாதவாகனர்-கி.மு 230– கி.பி. 220 • சுங்கர்-கி.மு 185-கி.மு.75 • பல்லவர்-கி.பி 250–கி.பி–800 • குப்தப் பேரரசு-கி.பி 240–550 • தில்லி சுல்தானகம்-கி.பி 1210–1526 • பாமினி சுல்தானகம்-கி.பி 1347–1527 • தக்காணத்து சுல்தானகங்கள்-கி.பி 1490–1596 • போசளப் பேரரசு-கி.பி 1040–1346 • விஜயநகரப் பேரரசு-கி.பி 1336–1646 • முகலாயப் பேரரசு-கி.பி 1526–1707 • மராட்டியப் பேரரசு-கி.பி 1674–1818 • இந்தியத் துணைக்கண்டத்தின் அரசுகள்-கி.பி 1100–1800 • பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு மற்றும் இந்திய விடுதலை இயக்கம்-கி.பி 1757–1947 • இந்தியா--15 ஆகஸ்ட் 1947

"https://ta.wikipedia.org/w/index.php?title=குப்தப்_பேரரசு&oldid=1777773" இருந்து மீள்விக்கப்பட்டது