மூன்றாம் குமாரகுப்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மூன்றாம் குமாரகுப்தர்
13வது குப்தப் பேரரசர்
ஆட்சிக்காலம் கி பி 530 – 540
முன்னையவர் நரசிம்மகுப்தர்
பின்னையவர் விஷ்ணுகுப்தர்
தந்தை நரசிம்மகுப்தர்
மரபு குப்த வம்சம்
தாய் ஸ்ரீமித்திராதேவி
பிறப்பு {வார்ப்புரு:Place of birth
சமயம் இந்து சமயம்

மூன்றாம் குமாரகுப்தர் (Kumaragupta III) பிற்கால குப்தப் பேரரசர் ஆவார். இவரது தந்தை நரசிம்மகுப்தருக்குப் பின் கி பி 530-இல் குப்தப் பேரரசின் அரியணை ஏறிய மூன்றாம் குமாரகுப்தர், கி பி 540 முடிய ஆட்சி புரிந்தார்.

1889-இல் பிதாரியில் கிடைத்த இவரது வெள்ளி நாணயங்கள் மற்றும் செப்பு மற்றும் வெள்ளி முத்திரைகள் மூலம், இவரது தந்தை நரசிம்மகுப்தர் மற்றும் பாட்டன் புருகுப்தர் என அறிய முடிகிறது.[1][2] மேலும் நாளந்தாவில் கிடைத்த களிமண் முத்திரைகள் மூலம், முதலாம் குமாரகுப்தன் – ஆனந்ததேவிக்கும் பிறந்தவரே புருகுப்தர் எனக் குறிப்பிடுகிறது. இவருக்குப் பின் இவரது மகன் விஷ்ணுகுப்தர் அரியணை ஏறினார்.

குப்தப் பேரரசு, இவரது ஆட்சிக் காலத்தில் ஹூணர்களின் தொடர் தாக்குதல்களால் வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kumaragupta-III-of-the-Gupta-Empire".
  2. Bhitari Inscribed Copper-Silver Seal of Kumaragupta III - Journal and Proceedings of the Asiatic Society of Bengal, Calcutta. LVIII, p. 89

வெளி இணைப்புகள்[தொகு]

அரச பட்டங்கள்
முன்னர்
நரசிம்மகுப்தர்
குப்தப் பேரரசர்
கி பி 530 – 540
பின்னர்
விஷ்ணுகுப்தர்