விஷ்ணுகுந்தினப் பேரரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஷ்ணுகுண்டினப் பேரரசு
420–624
தலைநகரம்ஏலூரு, அமராவதி, ஆந்திரப் பிரதேசம்
பேசப்படும் மொழிகள்தெலுங்கு
சமயம்
இந்து சமயம்
அரசாங்கம்முடியாட்சி
வரலாற்று சகாப்தம்மத்தியகால இந்தியப் பேரரசுகள்
• தொடக்கம்
420
• முடிவு
624
முந்தையது
பின்னையது
வாகாடகப் பேரரசு
கீழைச் சாளுக்கியர்
பல்லவர்
உண்டவல்லி குகைக் கோயில்

விஷ்ணுகுண்டினப் பேரரசு (Vishnukundina Empire) இந்தியாவின் தக்காணப் பீடபூமி, ஒடிசா மற்றும் பல தென்னிந்தியப் பகுதிகளை கி. பி 420 முதல் 624 முடிய ஆண்டது. தக்கான வரலாற்றில் விஷ்ணுகுந்தினப் பேரரசு சிறப்பான பங்களித்தது. இப்பேரரசு காலத்தில் தெலுங்கு, சமசுகிருதம் மொழி இலக்கியங்கள் வளர்ந்தன. சிவபெருமானுக்கு கோயில்கள் கட்டப்பட்டது. பெஜவடா, உண்டவல்லி, பைவரகொண்டா குகைக் கோயில்கள் இப்பேரரசு காலத்தில் உருவாயின. இப்பேரரசை 420இல் நிறுவியவர் இந்திரவர்மன் ஆவார்.

கி. பி 514இல் இப்பேரரசு சுருங்கி தெலுங்கானப் பகுதியை மட்டும் ஆண்டது. இப்பேரரசின் வீழ்ச்சியின் போது, கோதாவரி ஆற்றுக்கு வடக்கே இருந்த கலிங்க நாடு தன்னாட்சி உரிமை பெற்றனர். கிருஷ்ணா ஆற்றுக்கு தெற்கே இருந்த பகுதிகள் பல்லவர்களால் கைப்பற்றப்பட்டன. சாளுக்கிய மன்னர் இரண்டாம் புலிகேசியால் விஷ்ணுகுண்டினப் பேரரசின் பிற பகுதிகள் கைப்பற்றப்பட்டு, கி. பி 624இல் விஷ்ணுகுண்டினப் பேரரசு வீழ்ச்சியுற்றது.

இரண்டாம் புலிகேசி கைப்பற்றிய விஷ்ணுகுந்தினப் பேரரசின் பகுதிகளை நிர்வாகம் செய்ய தன் உடன் பிறப்பான குப்ஜ விஷ்ணுவர்தனை ஆளுனராக்கினான். பின்னாளில் விஷ்ணுவர்தன் தான் நிர்வகித்த பகுதிகளை சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்டு, கீழைச் சாளுக்கியர் எனும் புதிய அரசை அமைத்தான்.

விஷ்ணுகுண்டினப் பேரரசின் ஆட்சியாளர்கள்[தொகு]

  1. இந்திர வர்மன்
  2. இரண்டாம் மாதவ வர்மன் கி. பி 440 - 460
  3. விக்கிரமேந்திர வர்மன் கி. பி 555 – 569
  4. இரண்டாம் கோவிந்த வர்மன் கி. பி 573 - 621

மேற்கோள்கள்[தொகு]

  • Durga Prasad, History of the Andhras up to 1565 A. D., P. G. PUBLISHERS, GUNTUR (1988)
  • South Indian Inscriptions [1]
  • Nilakanta Sastri, K.A. (1955). A History of South India, OUP, New Delhi (Reprinted 2002).
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஷ்ணுகுந்தினப்_பேரரசு&oldid=3839285" இலிருந்து மீள்விக்கப்பட்டது