ரோர் வம்சம்
ரோர் வம்சம் | |
---|---|
கி மு 450–கி பி 489 | |
தலைநகரம் | ரோக்கிரி |
சமயம் | பௌத்தம் இந்து சமயம் |
அரசாங்கம் | முடியாட்சி |
மகாராஜா | |
வரலாற்று சகாப்தம் | இந்தியாவின் இரும்புக் காலம் |
• தொடக்கம் | கி மு 450 |
• முடிவு | கி பி 489 |
தெற்காசிய வரலாற்றுக் காலக்கோடு |
---|
ரோர் வம்சம் (Ror dynasty) (ஆட்சிக் காலம்: கி மு 450 - கி பி 489) தற்கால பாகிஸ்தான் நாட்டின் சிந்துப் பகுதியை மையமாகக் கொண்டு, இந்தியத் துணைக்கண்டத்தின் பகுதிகளை 1040 ஆண்டுகள் ஆண்ட இந்து சமய மன்னர்கள் ஆவர். ரோர் வம்சத்தவர்கள் ஆண்ட நாட்டின் தலைநகராக ரோக்கிரி நகரம் (தற்கால சுக்கூர் நகரம்) விளங்கியது. ரோர் வம்சத்தவர்கள் பௌத்த சமயத்தையும் ஆதரித்தனர். ரோர் வம்சத்தவர்களுக்குப் பின்னர் இராய் வம்சத்தவர்கள் சிந்து நாட்டை ஆண்டனர்.
ரோர் வம்சத்தின் முதல் மன்னர் தாஜ், ரோர் குமார் . இறுதி மன்னர் தாத்ரோர் ஆவார். ரோர் வம்சத்து மன்னர்களைக் குறித்தான செய்திகள் மற்றும் ரோர் வம்ச மன்னர்களுக்கும் மௌரியர்களுக்கும் இருந்த தொடர்புகள் குறித்து பௌத்த ஜாதக கதைகள்[1] மற்றும் திபெத்திய நூல்கள் மூலம் தெரியவருகிறது.
ரோர் வம்ச ஆட்சியாளர்கள்[தொகு]
மன்னர் தாஜ், ரோர் குமார் முதல் தாத்ரோர் வரையிலான 41 ரோர் வம்ச மன்னர்கள் கி மு 450 முதல் கி பி 489 வரை (1039 ஆண்டுகள்) ஆண்டனர்.[2]
- தாஜ், ரோர் குமார்
- குணாக்
- ருராக்
- ஹராக்
- தேவநாக்
- அஹிநாக்
- பரிபாத்
- பால் ஷா
- விஜய் பான்
- கங்கர்
- பிருகத்திரன்
- ஹர் அன்ஸ்
- பிருகத்-தத்தா
- இஷ்மான்
- ஸ்ரீதர்
- மொக்கிரி
- பிரசன்ன கேத்
- அமிர்வான்
- மகாசேனன்
- பிருகத்-தௌல்
- ஹரிகீர்த்தி
- சோம்
- மித்திரவான்
- புஷ்யபாதன்
- சுத்தவான்
- விதீர்க்கி
- நஹாக்மன்
- மங்கலமித்திரன்
- சூரத்
- புஷ்கர் கேத்
- அந்தர் கேத்
- சுஜாதீயன்
- பிருகத்-துவாஜன்
- பாகுகன்
- காம்பேஜெயன்
- காக்னீஷ்
- கப்பீஷ்
- சுமந்திரன்
- லிங்-லாவ்
- மனஜித்
- சுந்தர் கேத்
- தாத்ரோர்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". http://www.borobudur.tv/avadana_07.htm.
- ↑ Pages 89-92, Ror Itihaas Ki Jhalak, by Dr. Raj Pal Singh, Pal Publications, Yamunanagar (1987)