மராட்டியப் பேரரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மராட்டியக் கூட்டமைப்பு
மராட்டியப் பேரரசு
Maratha Samrajya

1674–1820


கொடி

மராட்டிய சாம்ராஜ்ஜியம் 1760 மஞ்சள் நிறத்தில்.
தலைநகரம் ராய்காட், பிறகு புனே
மொழி(கள்) மராத்தி
அரசாங்கம் முடியாட்சி
சத்ரபதி
 -  1674-1680 சிவாஜி
 -  1681-1689 சம்பாஜி
 -  1689–1700 ராஜாராம்
 -  1700–1707 தாராபை
 -  1707–1747 ஷஹு
 -  1747–1777 ராஜாராம் II
வரலாறு
 -  நிறுவல் ஏப்ரல் 21 1674
 -  முடிவு செப்டம்பர் 21 1820
பரப்பளவு
28,00,000 km² (10,81,086 sq mi)
மக்கள்தொகை
 -  1700 est. 15,00,00,000 
நாணயம் ஹான், ரூபாய், பைசா, மோஹர்

மராட்டியப் பேரரசு அல்லது மராத்தியப் பேரரசு (Maratha Empire) தற்போதைய இந்தியாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்திருந்தது. இதன் காலம் 1674 முதல் 1818 வரை. இந்த சாம்ராஜ்ஜியத்தின் கீழ் தெற்கு ஆசியாவின் பல பகுதிகள் 2.8 மில்லியன் சதுர கிமீ பரப்பளவிற்கு மேல் இருந்தன. சிவாஜியால் இந்தப் பேரரசு தோற்றுவிக்கப்பட்டது. முகலாயப் பேரரசன் அவுரங்கசீப்பின் இறப்பை அடுத்து, பேரரசின் தளபதிகளான பேஷ்வாக்களால் விரிவாக்கப்பட்டது. 1761 இல் பானிப்பட் நகரில் ஆப்கானிய மன்னன் அகமது ஷா அப்தாலியுடன் இடம்பெற்ற மூன்றாம் பானிபட் போரில் மராத்தியர்கள் தோல்வியடைந்ததை அடுத்து, மராட்டிய பேரரசின் விரிவாக்கம் நிறுத்தப்பட்டது. இதன் பின்னர் இப்பேரரசு மராத்திய நாடுகளின் கூட்டமைப்பாகப் பிரிந்தது. பின்னர் 1817 – 1818 ஆண்டில் நடந்த மூன்றாம் ஆங்கிலேய மராட்டியப் போரில் மராத்திய கூட்டமைப்பு அரசுகள், பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியிடம் வீழ்ந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மராட்டியப்_பேரரசு&oldid=2223960" இருந்து மீள்விக்கப்பட்டது