தாமிரபரணி இராச்சியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாமிரபரணி
තඹපන්නි
பொ.கா.மு. 543–பொ.கா.மு. 505
தலைநகரம்தாமிரபரணி
அரசாங்கம்முடியாட்சி
அரசன் 
• பொ.கா.மு. 543 – பொ.கா.மு. 505
இலங்கையின் விஜயன்
வரலாற்று சகாப்தம்பண்டைய
• விஜயனின் வருகை
பொ.கா.மு. 543
• விஜயனின் இறப்பு
பொ.கா.மு. 505
பரப்பு
65,610 km2 (25,330 sq mi)
முந்தையது
பின்னையது
இலங்கையின் பண்டைய இனக் குழுக்கள்
உபதீசநகர் இராச்சியம்

தாமிரபரணி இராச்சியம் அல்லது தம்பபன்னி இராச்சியம் என்பது இலங்கையினதும் இராசரட்டை இராச்சியத்தினதும் பண்டைய நிருவாக மையம் ஆகும். அது பொ.கா.மு. 543 இல் தற்கால இலங்கையின் முதலாவது சிங்களக் குடியேற்றத்துடன் ஆரம்பமாகி பொ.கா.மு. 505 வரை நிலவியது. தாமிரபரணியில் பண்டைய இந்தியாவிலிருந்து தன் பெற்றோரால் துரத்தியடிக்கப்பட்ட ஓர் இளவரசனான விஜயன் மட்டுமே அரசனாக இருந்தான்.

பெயர்[தொகு]

தம்பபன்னி எனும் பெயர் தாம்ரபரணி அல்லது தாம்ரவர்ணி எனும் சமற்கிருதப் பெயரிலிருந்து ஏற்பட்டதாகும்.[1] இது விஜயனும் அவனது தோழர்களும் வந்திறங்கிய இடத்தில் அவர்கள் தொட்ட மண் செப்பு நிறத்தில் அல்லது வெண்கல நிறத்தில், அஃதாவது தாமிர நிறத்தில் காணப்பட்டதனாலாகும். இதனைத் தழுவியே தாமிரபரணி எனப் பெயரிடப்பட்டது. [2] இப்பெயரே கிரேக்க மொழியில் தப்ரபேன் என்றும் பாளி மொழியில் தம்பபன்னி என்றும் குறிப்பிடப்படுகிறது.

மேலும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. Perera, D. G. A. "Lankan place name in historical perspective". The island. 13 அக்டோபர் 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 25 August 2011 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Chapter III. Connection With Ceylon, Generally One Of Hostility". chestofbooks.com. 2009-11-06 அன்று பார்க்கப்பட்டது.

வெளித் தொடுப்புக்கள்[தொகு]