உள்ளடக்கத்துக்குச் செல்

இராசரட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராசரட்டை என்பது பொ.பி. 436-463 வரை களப்பிரர் காலத்தில் இலங்கையை ஆண்ட இராசரட்டைப் பாண்டியர்களின் ஆளுகைக்குட்பட்ட இலங்கையின் வட பகுதியாகும். இந்நாடு தெற்கே மகாவலி கங்கையாற்றையும் மற்ற மூன்று திசைகளிலும் கடலையும் எல்லையாகக் கொண்டமைந்தது.[1] இதன் தலைநகரம் அநுராதபுரம் ஆகும். முதலாம் இராசரட்டைப் பாண்டியர் மன்னனின் ஆட்சியில் மகாவலி கங்கையாற்றின் வடபகுதியில் 28 பாதுகாப்பு எல்லைக் கோட்டைகளை கொண்ட இராசராட்டிரத்தின் எல்லை ஐந்தாம் இராசராட்டிரப் பாண்டியர் மன்னனின் ஆட்சியில் ரோகன நாட்டையும் சேர்த்து மொத்த இலங்கையையும் ஆட்கொண்டிருந்தது.

மூல நூல்கள்

[தொகு]
  • களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (நூல்), நாம் ந்நதமிழர் பதிப்பகம், மயிலை. சீனி. வேங்கடசாமி, ஏப்ரல் 2006.
  • சூல வம்சம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. சூல வம்சம், 38ஆம் பரிச்சேதம், 1-38
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராசரட்டை&oldid=3916745" இலிருந்து மீள்விக்கப்பட்டது