ஜனபதங்கள்
Jump to navigation
Jump to search
குடியரசுகள் ஜனபதங்கள் | |||||
| |||||
ஜனபதங்கள் உள்ளடக்கிய வட இந்தியாவின் வரைபடம்
| |||||
தலைநகரம் | குறிக்கப்படவில்லை | ||||
மொழி(கள்) | சமசுகிருதம், பிராகிருதம், பாலி | ||||
சமயம் | வேத கால சமயம் பௌத்தம் சமணம் | ||||
அரசாங்கம் | குடியரசுகள் முடியாட்சிகள் பேரரசுகள் | ||||
வரலாற்றுக் காலம் | இந்தியாவின் வெண்கலக் காலம் இரும்புக் காலம் | ||||
- | உருவாக்கம் | கிமு 1200 | |||
- | குலைவு | கிமு 600 |
தெற்காசிய வரலாற்றுக் காலக்கோடு |
---|
ஜனபதங்கள் (Janapadas) (சமசுகிருதம்: जनपद) என்பது கி மு 1200 ஆண்டு முதல் கி மு 6வது நூற்றாண்டுகள் வரை வட இந்தியாவில் இருந்த குடியரசுகள் மற்றும் முடியரசுகள் ஆகும். வேதகால ஆரியர்களின் நூல்களின்படி, ஜனம் என்பதற்கு பெரும் சமூகக் கூட்டம் என்பர். ஜனங்களின் தலைவனை பதி என்பர். சனாதிபதி என்ற சொல் ஜனபதங்களின் தலைவரைக் குறிக்கும். பானினியின் சமசுகிருத இலக்கண நூலான அஷ்டாத்தியிலும், இதிகாசங்கள் மற்றும் புராணங்களிலும் 22 ஜனபத இராச்சியங்களை குறித்துள்ளது. அவைகளில் மிகவும் குறிப்பிடத்தக்க ஜனபதங்கள்: குரு நாடு, பாஞ்சாலம், விதேகம், கோசல நாடு ஆகும். [1] [2]ஜனபதங்களுக்கு பிந்தியது மகாஜனபதங்கள் ஆகும்.
கோசல நாட்டிற்குட்பட்ட தற்கால நேபாள நாட்டின் ரோகிணி ஆற்றின் இரு கரைகளிலும் கௌதம புத்தர் பிறந்த சாக்கிய குலத்தினரும், கோலியர்களும் ஆட்சி செலுத்தினர்.