தேவகிரி யாதவப் பேரரசு
இந்த கட்டுரையோ அல்லது பகுதியோ சௌன யாதவ அரசமரபு உடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகின்றது. (உரையாடுக) |
தேவகிரி யாதவப் பேரரசு | |
அலுவல் மொழிகள் | கன்னடம் மராத்தி, சமசுகிருதம் |
தலைநகரம் | தேவகிரி (தௌலதாபாத்), மகாராஷ்டிரம் |
அரசு | முடியாட்சி |
முன்னிருந்த அரசு | மேலைச் சாளுக்கியர் |
பின்னிருந்த அரசு | தில்லி சுல்தானகம் |
தெற்காசிய வரலாற்றுக் காலக்கோடு |
---|
தேவகிரி யாதவப் பேரரசு (Seuna or Yadavas of Devagiri) (850–1334), மைய இந்தியாவில் துங்கபத்திரைக்கும் நர்மதைக்கும் இடைப்பட்ட பகுதிகளான தற்கால மகாராஷ்டிரம், வடக்கு கர்நாடகா மற்றும் மத்தியப் பிரதேசத்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளை ஆண்ட யாதவ குலத்தினரைக் குறிக்கிறது. யாதவப் பேரரசின் தலைநகராக தேவகிரி எனும் தற்கால தௌலதாபாத் நகராகும்.
மேலைச் சாளுக்கியப் பேரரசில் சிற்றரசர்களாக வாழ்ந்த யாதவர்கள், மேலைச் சாளுக்கியப் பேரரசு 12ஆம் நூற்றாண்டில் வீழ்ச்சியடையும் தறுவாயில், இரண்டாம் சிங்கன்னன் தலைமையில் யாதவப் பேரரசு நிர்மாணிக்கப்பட்டது.
ஐந்தாம் பில்லமா
[தொகு]மல்லுகியின் மகன் ஐந்தாம் பில்லமா (1173–1192),[1] சௌன யாதவ அரசமரபை நிறுவினார். சாளுக்கியரின் தலைநகர் பசவகல்யாண் எனும் கல்யாணி நகரை 1187இல் கைப்பற்றி, பின் யாதவப் பேரரசின் தலைநகர் தேவகிரியை (தற்கால தௌலதாபாத்) நிர்மாணித்தார்.[2]
இரண்டாம் சிங்கண்ணா
[தொகு]1200 முதல் 1247 முடிய ஆட்சி யாதவப் பேரரசின் பெரும் அரசனான இரண்டாம் சிங்கண்ணன் ஆவார். தனது ஆட்சி காலத்தில் யாதவப் பேரரசை தெற்கே நர்மதை ஆறு முதல் வடக்கே துங்கபத்திரை ஆறு வரை விரிவு படுத்தினான். தெற்கில் ஹொய்சாளப் பேரரசும், கிழக்கே காக்காதியர் அரசும், வடக்கே சாளுக்கியப் பேரரசும் யாதவப் அரசின் எல்லைகளாக உள்ளது.[1][3]
இவர் சிங்கனாப்பூர் என்ற நகரை புதிதாக நிர்மானித்தார். இவர் காலத்தில் வானவியல், சமசுகிருதம், கர்நாடக இசை ஆகியவை நன்கு வளர்ச்சியடைந்தன. [4]இவர் கன்னட மொழி கவிஞர் சங்தேவ் மகராஜ் என்பவரை ஆதரித்தவர்.
இராமச்சந்திரா
[தொகு]இரண்டாம் சிங்கன்னனின் பேரன் இராமச்சந்திரா 1271 முதல் 1309 முடிய தேவகிரி யாதவப் பேரரசை ஆண்டார்.[5] 1294-இல் தில்லி சுல்தான் அலாவுதீன் கில்சி தேவகிரியை கைப்பற்றினான். அலாவுதின் கில்சிக்கு இராமச்சந்திரா பெருந்தொகையை கப்பமாக செலுத்தி மீண்டும் இராமச்சந்திரா தேவகிரியை ஆண்டார்.[6] மாலிக் கபூர் தலைமையிலான அலாவுதீன் கில்சியின் பெரும் படைகள் 1307இல் மீண்டும் தேவகிரியை தாக்க வந்த போது, இராமச்சந்திரா, சுல்தான் படைகளுடன் போரிடாது சரண் அடைந்தார். 1310-இல் மாலிக் கபூர் தேவகிரியிலிருந்து காகதீயப் பேரரசின் மீது படையெடுத்தான்.
பேரரசின் வீழ்ச்சி
[தொகு]இராமசந்திராவின் மகன் மூன்றாம் சிங்கண்ணன், அலாவூதின் கில்சியின் மேலாண்மையை ஏற்காததால், 1313-இல் மாலிக் கபூர் தலைமையில் நடந்த போரில் மூன்றாம் சிங்கண்ணன் கொல்லப்பட்டார்.[7] அலாவுதின் கில்ஜியின் படைகள் தேவகிரியை கைப்பற்றி, தில்லி சுல்தானகத்துடன் 1317-இல் இணைக்கப்பட்டது. முகமது பின் துக்ளக் காலத்தில் தேவகிரி நகரத்தின் பெயர் தௌலதாபாத் என மாற்றப்பட்டது.[3]
மேலைச் சாளுக்கியர் பேரரசின் யாதவ சிற்றரசுகள்
[தொகு]- திரிதபிரகாரா
- சௌனசந்திரா 850–874
- தாதியப்பா 874–900
- முதலாம் பில்லமா 900–925
- வட்டீகா (வடுகி) 950–974
- இரண்டாம் தாதியப்பா 974–975
- இரண்டாம் பில்லமா 975–1005
- முதலாம் வெசுகி 1005–1020
- மூன்றாம் பில்லமா 1020–1055
- இரண்டாம் வெசுகி 1055–1068
- மூன்றாம் பில்லமா 1068
- இரண்டாம் சௌனசந்திரா 1068–1085
- ஐரமாதேவா 1085–1115
- முதலாம் சிங்கண்ணன் I 1115–1145
- முதலாம் மல்லுகி 1145–1150
- அமரகெங்கையா 1150–1160
- கோவிந்தராஜா 1160
- இரண்டாம் அமர மல்லுகி 1160–1165
- கலிய பல்லாலா 1165–1173
யாதவப் பேரரசர்கள்
[தொகு]- ஐந்தாம் பில்லம்மன் 1173–1192 [1]
- முதலாம் ஜெய்டுகி 1192–1200 [1]
- இரண்டாம் சிங்கண்ணன் 1200–1247
- கன்னாரா 1247–1261
- மகாதேவா 1261–1271
- அம்மன்னா 1271
- இராமச்சந்திரா 1271–1311 [1]
- மூன்றாம் சிங்கண்ணன் 1311 - 1313
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Sen, Sailendra (2013). A Textbook of Medieval Indian History. Primus Books. pp. 55–56. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9-38060-734-4.
- ↑ Eaton, Richard M. (2019-07-25). "Chapter 2, first page". India in the Persianate Age: 1000-1765 (in ஆங்கிலம்). Penguin UK. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-196655-7.
- ↑ 3.0 3.1 "Yādava Dynasty" Encyclopædia Britannica. Encyclopædia Britannica 2007 Ultimate Reference Suite
- ↑ Mann, Gurinder Singh (2001-03-01). The Making of Sikh Scripture. Oxford University Press US. p. 1. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-513024-3.
- ↑ Eternal Garden: Mysticism, History, and Politics at a South Asian Sufi Center by Carl W. Ernst p.107
- ↑ Bennett, Mathew (2001). Dictionary of Ancient & Medieval Warfare. Stackpole Books. p. 98. ISBN 0-8117-2610-X.. The quoted pages can be read at Google Book Search
- ↑ Michell, George (1999-06-10). Architecture and Art of the Deccan Sultanates. Cambridge University Press. p. 5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-56321-6.