சுங்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுங்கப் பேரரசு शुङ्ग
[[மௌரியப் பேரரசு|]]
கி மு 185–கி மு 75 [[கண்வ குலம்|]]
கி மு 185இல் சுங்கப் பேரரசின் வரைபடம்
தலைநகரம் பாடலிபுத்திரம்
விதிசா
மொழி(கள்) சமசுகிருதம்
பிராகிருதம்
பாலி மொழி
சமயம் இந்து சமயம்
பௌத்தம்
அரசாங்கம் முடியாட்சி
பேரரசர்
 -  கி மு 185–151 புஷ்யமித்திர சுங்கன்
 -  கி மு 151–141 அக்கினிமித்திரன்
 -  கி மு 131–124 வசுமித்திரன்
 -  கி மு 83–75 தேவபூதி
வரலாற்றுக் காலம் பண்டைய வரலாறு
 -  உருவாக்கம் கி மு 185
 -  குலைவு கி மு 75
தற்போதைய பகுதிகள்  இந்தியா
 வங்காளதேசம்
 நேபாளம்
Warning: Value not specified for "common_name"

சுங்கர் எனப்படுவோர் மௌரியர் சாம்ராஜ்யத்தை முடிவுறுத்தி ஆட்சியைக் கைப்பற்றியவர்களாவர். மௌரிய பேரரசின் இறுதி மன்னனாக விளங்கிய பிரகத்திர மௌரியன் என்பவனின் அரண்மனையில் இருந்த புஷ்யமித்திர சுங்கன் என்பவன் சூழ்ச்சியால் பிருகத்ரதனை கவிழ்த்துவிட்டு ஆட்சிபீடம் ஏறிக் கொண்டான்.[1] சுங்கர்களின் ஆட்சி கி.மு 185ஆம் ஆண்டில் ஆரம்பித்து கி.மு 75 வரை 112 ஆண்டுகள் நிலவியது[2]. இக்காலத்தில் அசோகனாலும் அவன் பின் வந்த மௌரியர்களாலும் வளர்க்கப்பட்ட பௌத்தம் பெரு வீழ்ச்சி அடைந்துவிட்டது. சுங்கர்கள் பிராமண குலத்தினை சார்ந்தவர்களாக இருந்தமையும் இதற்குக் காரணம் என்பர்.

சுங்க மன்னர்களுள் புஷ்யமித்திரனை அடுத்து "அக்கினிமித்திரன்", "வசுமித்திரன்", "பாகவதன்", "தேவபூதி", "சுசசுதா" முதலான மன்னர்களின் ஆட்சி இடம்பெற்றது. இவர்கள் காலத்தில் பாடலிபுத்திரம், விதிசா முதலான இடங்கள் தலைநகராக விளங்கின. [3]

சுங்கர்களின் வீழ்ச்சி[தொகு]

சுங்கப் பேரரசின் இறுதி அரசனான தேவபூதியை, கண்வ குலப் பிராமணன் வாசுதேவ கண்வர் கி. மு 75இல் வெற்றி கொண்டு மகத நாட்டை ஆளத்துவங்கினான்.[4]

சுங்கப் பேரரசர்கள்[தொகு]

பேரரசர் ஆட்சிக் காலம்
புஷ்யமித்திர சுங்கன் கி மு 185–149
அக்கினிமித்திரன் கி மு 149–141
வசுஜெயஷ்தன் கி மு 141–131
வசுமித்திரன் கி மு 131–124
பத்திரகன் கி மு 124–122
புலிந்தகன் கி மு 122–119
கோஷான் ?
வஜ்ஜிரமித்திரன் ?
பாகபத்திரன் ?
தேவபூதி கி மு 83–73

சுங்கர் காலத்திய சிற்பங்கள்[தொகு]

மௌரியர்களுக்கு பின்னால் சிற்பக்கலையினை சுங்கர்கள் கன்வாயினர்களால் வளர்க்கப்பட்டது என்றால் மிகையில்லை. பர்குத், புத்தகயை, சாஞ்சி, கந்தகிரி, உதயகிரி ஆகிய இடங்களில் உள்ள சிற்பங்கள் மௌரியர்களுக்குப் பின் வந்த சுங்க கன்வாயினர்களால் வளர்க்கப்பட்டவையாகும். இங்கு காணப்படும் சிற்பங்கள் பெரும்பாலும் பௌத்த சமயத்தை சார்ந்தவையாகும். இச்சிற்பங்கள் காட்டும் உணர்வுள்ள தத்துவங்கள் அக்கால மக்களின் பண்பாட்டை விளக்குகின்றன.

சுங்கர் காலச் சிற்பங்கள் அதிகமாக பர்குத், சாஞ்சி ஆகிய இடங்களில் காணப்படும் துமிளிகளில் அமைந்துள்ள நூக்கிணைப்பு வேலிகள், தோரண வாயில்கள் ஆகியவற்றில் அமைந்துள்ள சிற்பங்கள் சிறப்பானவையாகும்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுங்கர்&oldid=2566044" இருந்து மீள்விக்கப்பட்டது