வடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாடு
தெற்காசிய வரலாற்றுக் காலக்கோடு |
---|
வடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாடு (Northern Black Polished Ware culture) (சுருக்கப் பெயர்: NBPW or NBP) கருப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டப் பண்பாடு மற்றும் சாம்பல் வண்ண ஓவியம் தீட்டப்பட்ட மட்பாண்டப் பண்பாடு காலத்திற்கு பின்னர் இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்கிலும், வட இந்தியா மற்றும் மத்திய இந்தியாவிலும் இரும்புக் காலத்தின் இறுதியில் கிமு 700 - 200க்கும் இடைப்பட்ட காலத்தில் செழித்திருந்த நகரப் பண்பாட்டுக் காலமாகும்.[1]
பிந்தைய வேதகாலத்தின் துவக்கத்தில் கிமு 700 முதல் துவங்கிய வடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாடு, கிமு 500 - 300 காலங்களில் உச்சத்தில் இருந்தது. இக்காலகட்டத்தில் வட இந்தியாவில் ஹரியங்கா வம்சத்தின் மகத நாடு உள்ளிட்ட 16 நகர மகாஜனபத அரசுகள் எழுச்சி கொண்டது.
மேலோட்டப் பார்வை
[தொகு]வடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாட்டுக் காலத்திய கலைப்பொருட்கள் பெயருக்கு ஏற்றவாறு கலைநயத்துடன் இருந்தது. இப்பண்பாட்டுக் காலத்தில் சிந்து சமவெளி நாகரீகத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் தெற்காசியாவில் நகர அரசுகள் தோன்றியது.
சுட்ட செங்கற்கள், கோட்டைகள் மற்றும் அரண்மனைகள் மற்றும் பொதுக் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்டது. கட்டிடப் பணி, போர்க்கருவிகள், நகையணிகள் உற்பத்தி பெருகியதால் நகரப்புறங்களில் மக்கள்தொகை பெருகியதுடன் தச்சு வேலை, கொல்லு வேலை மற்றும் கைவினைக் கலைஞர்களின் கூட்டம் நகரங்களில் பெருகியது.[2]
இப்பண்பாட்டுக் காலத்தில் விலங்குகளின் தந்தம் மற்றும் சங்குகளில் நவரத்தினக்கற்கள் பதித்த வேலைப்பாடுகளுடன் கூடிய கலைப்பொருட்கள், அளவைக் கருவிகள், கரோஷ்டி மற்றும் பிராமி எழுத்துக்களுடன் கூடிய முத்திரையிடப்பட்ட நாணயங்கள் மற்றும் அரசாங்க முத்திரைகள் வெளியிடப்பட்டது.
இப்பண்பாட்டுக் காலத்தில் அரிசி, நவதானியம், மக்காச்சோளத்தில் செய்த உணவுப்பொருட்கள் மக்களின் முக்கிய உணவானது. தொல்லியல் அறிஞர்கள் ஜியோப்பிரி சாமுவேல் மற்றும் டிம் ஹோப்கின்ஸ் ஆகியவர்களின் கூற்றின்படி, மத்திய கங்கைச் சமவெளிப் பகுதிகள், வடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாட்டின் மையமாக விளங்கியது அறியமுடிகிறது.[3]
தொல்லியல் களங்கள்
[தொகு]குறிப்பிடத்தக்க வடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாட்டுத் தொல்லியல் களங்களில் சில மகாஜனபத நகர இராச்சியங்களுடன் தொடர்புடையவைகள். அவைகள்:[4]
- சார்சதா (பண்டைய காந்தார நாட்டின் புஷ்கலாவதி மற்றும் தட்சசீலம்), பாகிஸ்தான்.
- தில்லி அல்லது பண்டைய இந்திரப்பிரஸ்தம்
- தற்கால உத்திரப் பிரதேச மாநிலத்தின் அத்தினாபுரம், மதுரா, காம்பில்யம், அயோத்தி, சிராவஸ்தி, கௌசாம்பி, வாரணாசி
- தற்கால பிகார் மாநிலத்தின் வைசாலி, ராஜகிரகம், பாடலிபுத்திரம் மற்றும் அங்க நாட்டின் தலைநகரம் சம்பா
- தற்கால மத்தியப் பிரதேச மாநிலத்தின் உஜ்ஜைன் மற்றும் விதிஷா
- தற்கால மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேசத்தில் உள்ள தொல்லியல் களங்களான மகாஸ்தான்கர், சந்திரகேதுகர், வாரி-படேஷ்வர், பன்கர் மற்றும் மங்கல்கோட்
இதனையும் காணக
[தொகு]- சிந்துவெளி நாகரிகம்
- மெஹெர்கர்
- சாம்பல் வண்ண ஓவியம் தீட்டப்பட்ட மட்பாண்டப் பண்பாடு
- காவி நிற மட்பாண்டப் பண்பாடு
- கருப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டப் பண்பாடு
- சாம்பல் வண்ண ஓவியம் தீட்டப்பட்ட மட்பாண்டப் பண்பாடு
- காந்தார கல்லறை பண்பாடு
- கல்லறை எச் கலாச்சாரம்
- செப்புக் குவியல் பண்பாடு
- சிந்துவெளி நாகரிகத்தின் தொல்லியல் களங்கள்
மேற்கோள்கள்
[தொகு]உசாத்துணை
[தொகு]Samuel, Geoffrey (2010), The Origins of Yoga and Tantra: Indic Religions to the Thirteenth Century, Cambridge University Press