கோட்டை இராச்சியம்
கோட்டே அரசு இலங்கை | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1412–1597 | |||||||||||
கொடி | |||||||||||
தலைநகரம் | கோட்டே | ||||||||||
பேசப்படும் மொழிகள் | சிங்களமொழி | ||||||||||
அரசாங்கம் | மன்னராட்சி | ||||||||||
கோட்டை அரசு | |||||||||||
• 1412-1467 | ஆறாவது பராக்கிரமபாகு மன்னன் (முதல்) | ||||||||||
• 1508-1528 | ஒன்பதாவது தர்ம பராக்கிரமபாகு மன்னன் (களனியில்) | ||||||||||
• 1551-1597 | தர்மபால அரசன் (கடைசி) | ||||||||||
வரலாறு | |||||||||||
• முழு இலங்கையையும் ஒற்றுமைப்படுத்துதல் | 1412 | ||||||||||
• முடிவு | 1597 | ||||||||||
|
ஸ்ரீ ஜயவர்த்தனபுரக் கோட்டையை மைய நிலையமாகக் கொண்டு அரசாட்சி நடைபெற்றதே கோட்டேஅரசு அல்லது கோட்டே இராசதானி (Kingdom of Kotte). இது கி.பி. 15 நூற்றாண்டுக் காலப் பகுதியில் இலங்கையில் சீராக ஆட்சி நடைபெற்ற அரசாகும். இலங்கையை ஒரு குடைக் கீழ் கொண்டு வருதற்காக ஆட்சி நடந்தேறிய கடைசி அரசும் இதுவாகும்.

கோட்டை என்பதன் பொருள்[தொகு]
சிங்களத்தில் கோட்டே என்பதன் பொருள் (பாதுகாப்பு) அரண் என்பதாகும். தமிழிலும் கோட்டை என்பது அரண்மனையையே குறிக்கின்றது. இந்த வகையில் அழகேசுவரர் மூலம் கட்டப்பட்ட முதலாவது கோட்டையையும் இது குறிப்பிடப்படுகிறது.
நிறுவல்[தொகு]
மேற்குக் கடற்பகுதியிலிருந்து வந்த படையெடுப்பாளர்களின் தாக்குதல்களை முறியடிக்க, மூன்றாவது விக்கிரமபாகு அரசனின் ஆட்சிக் காலத்தில் கம்பளை அரசின் அமைச்சர் அழகேசுவரன் (1370–1385) மூலம் கட்டப்பட்ட இந்தப் பாதுகாப்புக் கோட்டை, பின்னர் அதாவது 1412இல் ஆறாவது பராக்கிரமபாகு மன்னன் மூலம் தலைநகராகக் கொள்ளப்பட்டது. இப்பகுதியைச் சுற்றியுள்ள சதுப்பு நிலம் மூலம் இது மிகவும் பாதுகாப்பாக அமைந்துள்ளது.[1]
பின்னிணைப்பு[தொகு]
- ஏழாவது புவனேக்குபாகு மன்னனின் கடிதம் பரணிடப்பட்டது 2015-09-23 at the வந்தவழி இயந்திரம்
- இலங்கை சிங்கள இலக்கியத்தின் பொற்காலமும் கோட்டையின் ஏழாவது பராக்கிரமபாகு மன்னனும் பரணிடப்பட்டது 2015-09-23 at the வந்தவழி இயந்திரம்