வேதகாலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வேதகாலத்தில் இந்தியா

வேதகாலம் என்பது இந்தியாவில், ஆரியர்களின் மிகப் பழைய நூல்களான வேதங்கள் இயற்றப்பட்டு நடைமுறையில் இருந்த காலத்தை குறிக்கிறது. இது கி.மு இரண்டாம் ஆயிரவாண்டையும், முதலாம் ஆயிரவாண்டையும் சேர்தது என அறிஞர்கள் கூறுகின்றனர். கிமு 1500 ஆம் ஆண்டளவில் தொடங்கி கி.மு. 500ஆம் ஆண்டு வரை நீடித்தது என்பது ஐதிகம். இக் காலப்பகுதியோடு தொடர்புடைய பண்பாடு சில சமயங்களில் வேத நாகரிகம் எனக் குறிக்கப்படுவதும் உண்டு. இந் நாகரிகம், வடக்கு இந்தியாவையும், வடமேற்கு இந்தியாவையும் மையப்படுத்திச் செழித்து இருந்தது. இதன் முதற் கட்டத்தில் பழங்கால இந்தியாவில் பல்வேறு அரசுகள் தோன்றின. கிமு 600 ஆம் ஆண்டளவில் தொடங்கி மகஜனபாத என சமசுக்கிருதத்தில் குறிப்பிடப்படும் சிறிய நாடுகள் உருவாகின. தொடர்ந்து கிமு 320 ஆம் ஆண்டில் மௌரியப் பேரரசு உருவானது.

வரலாறு[தொகு]

வேதகால இந்தியாவின் வரலாறு பெரும்பாலும் அக்காலத்து நூல்களை அடிப்படையாகக் கொண்டே மீட்டுருவாக்கம் செய்யப்படுகின்றன. மொழியியல் அடிப்படையில் வேதகால நூல்கள் ஆறு காலவரிசைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

1. ரிக் வேத காலம்: ரிக் வேதமே தற்போது கிடைக்கக்கூடியதாக உள்ள மிகப் பழைய நூலாகும். அத்துடன், இதன் உள்ளடக்கமும், மொழியும் பொது இந்திய, ஈரானியக் கூறுகளை உள்ளடக்கி உள்ளது. இது பிற வேத நூல்களில் காணப்படவில்லை. ரிக் வேதம் பல நூற்றாண்டுகளாகப் படிப்படியாக உருவாகியதாகத் தெரிகிறது. இதன் பிற்காலத்துப் பகுதிகள் தவிர்ந்த பிற பகுதிகள் கிமு 1000 ஆவது ஆண்டளவில் முற்றுப் பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

2. மந்திர மொழிக் காலம்:

3. சங்கிதைக் காலம்:

4. பிராமணக் காலம்:

5. சூத்திரங்களின் காலம்:

6. இதிகாசக் காலமும், பாணினிய சமசுக்கிருதக் காலமும்:

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேதகாலம்&oldid=1384486" இருந்து மீள்விக்கப்பட்டது