பஞ்சாபின் வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வால்மீகி ஹெர்மிடேஜ், பஞ்சாப் மலைகள், காங்ரா, கி.பி. 1800-25

பஞ்சாப் வரலாறு (History of the Punjab) என்பது, ஆசியா கண்டத்தின் வட மேற்கிந்தியாவில் அமைந்திருக்கும் பஞ்சாப் மாநில பின்புலம் பற்றிய சிறு தகவல்களாகும். மேற்கில் பாகிஸ்தான் நாட்டையும், மற்ற திக்குகளில் இமாச்சலப் பிரதேசம், காசுமீர், அரியானா, இராசத்தான் போன்ற மாநிலங்களையும் எல்லைகளாக கொண்டிருக்கிறது. இந்தியாவிலுள்ள மாநிலங்களில், மிகச்சிறிய மாநிலமாக உள்ள போதிலும் வளமான மாநிலமாக இது அறியப்படுகிறது.[1]

பெயர் மரபு[தொகு]

சிந்து, சத்லஜ், பியாஸ், ராவி மற்றும் கக்கர் போன்ற ஐம்பெரும் ஆறுகள் இப்பிராந்தியத்தில் ஓடுவதால் இந்த பகுதிக்கு, பஞ்சாப் (தமிழில் ஐந்து எனும் இலக்கத்திற்கு, இந்தியில் பாஞ்ச் எனும் பொருளாகும்) என்ற பெயர்பெற்றதாக கூறப்படுகிறது. [2] மேலும், மற்றொரு மூலக் கூற்றுப்படி, மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த கல்வியாளரும் ஒரு நாடுகாண் பயணியுமான இப்னு பதூதா (Ibn Battuta-1304) என்பவர், 14 ஆம் நூற்றாண்டில் இந்தியத் துணைக் கண்டதிற்கு விஜயம் செய்தபோது, 'சேநோன்ய்ம்' அல்லது எசோன்ய்ம் (xenonym/exonym) என்றழைக்கப்படும் கிரேக்க மொழியில் பஞ்சாப் எனும் வார்த்தையை முதன்முதலில் குறிப்பிட்டுள்ளார்.[3]

மற்றொரு தொன்மை தகவல்படி, 1540 முதல் 1545] வரையில் வட இந்தியாவின் பெரும்பகுதிகளை ஆண்ட சூர் வம்சத்தை நிறுவிய முதலாவது அரசரான சேர் சா சூரி (Sher Shah Suri) என்பவர் பயன்படுத்திய 'தாரிக்-இ-ஷேர் ஷா' (Tarikh-e-Sher Shah Suri) என்ற புத்தகத்தில் ("Sher Khan of Punjab") "பஞ்சாப் ஷெர் கான்" எனும் பெயரில் ஒரு கோட்டையைக் குறிப்பிடுகிறார் அப்புத்தகம் 16 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் பரந்தளவில் பயன்பாட்டுக்கு வந்ததாகவும், மற்றும் தாரிக்-இ-ஷேர் ஷா சூரி 1580-ன் காலகட்டத்தில் பெருமளவில் பயன்படுத்தப்பட்டதாகவும் மூலாதாரத்தில் உள்ளது.[4] முதலில் 'பஞ்சாப்' சமசுகிருதத்திற் இணையானதென்று குறிப்பிட்டுள்ளது, எனினும், இந்திய பெரும் காவியமான மகாபாரதத்தில் 'பஞ்சா-நாடா' ('ஐந்து ஆறுகளின் நாடு') (pancha-nada 'country of five rivers'). என்றுள்ளது.[5] அதேபோல், அபுல் பைசல் (Abu'l-Fazl ibn Mubarak) என்பவரால் பாரசீக மொழியில் எழுதப்பட்ட 'அயினி அக்பரி' எனும் நூலின் பகுதி 1-ல், பஞ்சாபின் பகுதி, லாகூர் மற்றும் முல்தான் என இரண்டு மாகாணங்களாக பிரிக்கப்பட்டது என்று குறிப்பிடுகிறார். இதேபோல், 'அயினி அக்பரி' நூலின் இரண்டாவது தொகுதியில், ஒரு அத்தியாயத்தின் தலைப்பு 'பஞ்ச நாட் (Panj nad) என்ற வார்த்தை அடங்கியுள்ளது.[6]

பிரிவினை[தொகு]

ஒரு நெடிய வரலாற்று பின்னணி கொண்ட இந்த பஞ்சாப் வழியாகத்தான் கிரேக்கர்கள், ஆப்கானியர்கள், பாரசீகர்கள் மற்றும் நடு ஆசிய இனத்தவர்கள் போன்றோர் இந்தியாவுக்குள் நுழைந்து போர்களை நிகழ்த்தினர், பின்னாளில் கடல் வழியாக இந்தியாவின் தென்பகுதிக்கு வந்தவர்கள் இந்தியா முழுமையும் ஆண்டனர் என்பது ஒரு தனி வரலாறாக நீண்டு முடிந்தது.[2] பின்பு சிந்து சமவெளியின் ஒரு பகுதியிலிருந்தது உருவாகியுள்ள பஞ்சாப் மாகாணம், 1947-ம் ஆண்டில் ஆங்கிலேய ஆட்சியாளர்கள், இப்பிரதேசத்தை பஞ்சாப் என்றும் பாக்கித்தான் என்றும் பிரித்தனர். மீண்டும், 1966-ம் ஆண்டில் மீண்டும் ஒரு முறை இமாச்சலப் பிரதேசம் என்றும், அரியானா என்றும் புதிய மாநிலங்கள் இதிலிருந்து உருவாக்கப்பட்டன.[2] கிரேக்கர்களின் வரலாற்றுக் குறிப்புகளில் இந்த பஞ்சாப் பூமி உயர்வாகவும், பெருமையாகவும் சொல்லப்பட்டுள்ளது. ஐந்து ஆறுகள் சங்கமிக்கும் வளமான பூமியாக பஞ்சாப் தேசத்தை அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், விவசாயத்தொழில் இந்த மண்ணின் வளத்துக்கான் அடிப்படை காரணியாகவும், சீக்கிய மதத்தினர் பரவலாக வசிக்கும் பூமி எனும் தனித்துவமான அடையாளத்தையும், இந்த பஞ்சாப் மாநிலம் பெற்றிருக்கிறது. அறிவியல் முன்னேற்றங்களும் தொழில் நுட்ப வளர்ச்சிகளும் நிகழ்ந்த 20-ம் நூற்றாண்டின் பாதியிலிருந்தே இந்த பஞ்சாப் மாநிலம் பல்வேறு இயந்திர தொழில்நுட்ப கருவிகளின் தயாரிப்பு மற்றும் தொழிற்சாலைகள் போன்றவற்றின் கேந்திரமாக திகழ்ந்து வருகிறது.[7] மேலும், பலவகையான உபகரணங்கள், இயந்திரங்கள், (Machine) விளையாட்டுப்பொருட்கள், மாப்பொருள், விவசாய உரத்தயாரிப்பு, மிதிவண்டி தயாரிப்பு, சர்க்கரை மற்றும் ஆடை உற்பத்தி போன்றவற்றில் இம்மாநிலம் முன்னணியில் உள்ளது. குறிப்பாக விவசாயக்கருவிகள்,அறிவியல் உபகரணங்கள் மற்றும் மின்சாதனக்கருவிகள் போன்றவற்றுக்கு இம்மாநிலம் இந்தியா முழுவதும் புகழ் பெற்றிருக்கிறது. [8]

சான்றாதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சாபின்_வரலாறு&oldid=3219350" இருந்து மீள்விக்கப்பட்டது