நாகாலாந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நாகாலாந்து
India Nagaland locator map.svg
நாகாலாந்து அமைந்த இடம்
தலைநகரம் கொஹீமா
மிகப்பெரிய நகரம் திமாபூர்
ஆட்சி மொழி {{{ஆட்சி மொழி}}}
ஆளுனர் அஸ்வின் குமார்
முதலமைச்சர் டி. ஆர். ஜிலியாங்
ஆக்கப்பட்ட நாள் 1963-12-01
பரப்பளவு 16579 கி.மீ² (25வது)
மக்கள் தொகை (2011)
அடர்த்தி
1978502 (24வது)
119/கி.மீ²
மாவட்டங்கள் 11
நாகாலாந்து மாநிலத்தின் மாவட்டங்கள்

நாகாலாந்து (Nagaland) இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலம் ஆகும். இந்திய மாநிலங்களான அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர் மற்றும் அயல் நாடான மியன்மார் என்பன இதனோடு எல்லைகளைக் கொண்டுள்ளன. இதன் மாநிலத் தலை நகரம் கோஹிமா ஆகும். நாகாலாந்து பதினோறு நிர்வாக மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம் மாநிலத்தில் 16 முக்கிய இனக்குழுக்கள் வாழுகின்றன. இன அடிப்படையில் இவர்கள் இந்தோ-மொங்கொலொயிட் இனப்பிரிவைச் சேர்ந்த நாகா இனக் குழுக்கள் ஆவார். நாகாலாந்து டிசம்பர் 1, 1961 ல் ஒரு மாநிலமாக ஆக்கப்பட்டது.

பட்டியல் பழங்குடி மக்கள் பெரும்பான்மையினத்தவராக உள்ள இம்மாநிலத்தில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) -0.58% ஆக குறைந்துள்ளது.[1]இம்மாநிலத்தின் ஆட்சி மொழி ஆங்கிலம் ஆகும்.

மாவட்டங்கள்[தொகு]

இம்மாநிலத்தை நிர்வாக வசதிக்காக பதினோறு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவைகள்;

 1. திமாப்பூர்
 2. கிபைர்
 3. கோகிமா
 4. லோங்லெங்
 5. மோகோக்சுங்
 6. மோன்
 7. பெரேன்
 8. பேக்
 9. துவென்சங்
 10. வோக்கா
 11. சுனெபோட்டோ

அரசியல்[தொகு]

முதன்மை கட்டுரை: நாகாலாந்து அரசு
முதன்மை கட்டுரை: நாகாலாந்தின் சட்டமன்றம்

நாகாலாந்து சட்டமன்றத்தில் 60 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. ஏனைய மாநிலங்களைப் போலவே, முதல்வரே அரசின் தலைவராக இருப்பார். இந்த மாநிலம் முழுவதும் நாகாலாந்து மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[2].

மக்கள் தொகையியல்[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 16,579 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட நாகாலாந்து மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 1,978,502 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 71.14% மக்களும், நகரப்புறங்களில் 28.86% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் -0.58% ஆக குறைந்துள்ளது. மக்கள் தொகையில் 1,024,649 ஆண்களும் மற்றும் 953,853 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 931 வீதம் உள்ளனர். 16,579 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 119 வீதம் மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 79.55 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 82.75 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 76.11 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 291,071 ஆக உள்ளது. [3] நாகா இன மக்கள் இம்மாநிலத்தில் பெரும்பான்மை மக்கள் ஆவார்.

சமயம்[தொகு]

இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 173,054 (8.75 %) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை 48,963 (2.47 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 1,739,651 (87.93 %) ஆகவும்,, பௌத்த சமய மக்கள் தொகை 6,759 (0.34 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 1,890 (0.10 %) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 3,214 (0.16 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 2,316 (0.12 %) ஆகவும் உள்ளது.

மொழிகள்[தொகு]

இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான ஆங்கில மொழியுடன் பழங்குடி இன மொழியுமான நாகா மொழி மற்றும் வட்டார மொழிகளும் பேசப்படுகிறது.

போக்குவரத்து[தொகு]

நாகாலாந்து செல்லும் தேசிய நெடுஞ்சாலை

இம்மாநிலத்தில் தொடருந்து மிகக் மிகக் குறைந்த அளவில் 7.98 miles ([convert: unknown unit]) நீளத்தில் இருப்புப்பாதை கொண்டுள்ளது.

இம்மாநிலத்தில் தேசிய மற்றும் மாநில சாலைகள் 15,000 கி மீ நீளத்தில் உள்ளது.

ஹார்ன்பில் விழா[தொகு]

முதன்மை கட்டுரை: ஹார்ன்பில் திருவிழா

நாகாலாந்தின் பழங்குடிமக்களின் விழாவான ஹார்ன்பில் விழா உலகப்புகழ் பெற்றது.

வளர்ச்சித் திட்டங்கள்[தொகு]

தலைநகர் தில்லியில் இருந்து பத்து-பதினைந்து மணி நேரப்பிரயாணத் தொலைவில் நாகாலாந்து உள்ளது.[4] இயற்கை வளம் செறிந்த பகுதியாக இருப்பினும் போக்குவரத்தில் முழுமையாக இணைக்கப்படாததால், இந்தியாவின் மற்ற பகுதி மக்கள் கூட இப்பகுதியைச் சுற்றுலாவிற்குத் தேர்ந்தெடுப்பதில் முன்னுரிமை தராத சூழ்நிலை உள்ளது. எதிர்காலத்தில் வடகிழக்கு இந்திய மாணவர்களுக்கு என்று இஷான் உதய் எனும் கல்வி உதவிக்கட்டணத் திட்டமும், இந்திய நாட்டின் பிற பகுதிகளில் உள்ள ஐ.ஐ.டி போன்ற கல்வி நிலையங்களைச் சென்று பார்க்க வருடந்தோறும் அனுமதியும் ஏற்பாடும் செய்யும் இஷான் விகாஸ் எனும் திட்டமும் செயற்படுத்தப்படும் என்றும், ஐ.டி. அவுட்சவுர்சிங் வேலைவாய்ப்புகளை ஈர்க்கும் ஏற்பாடும் செய்யப்பட உள்ளன என்றும் குறிப்பிடப்படுகின்றது.[5][6]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. Nagaland Population Census data 2011
 2. மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்
 3. Nagaland Population Census data 2011
 4. http://www.makemytrip.com/routeplanner/shillong-new-delhi.html
 5. http://indiatoday.intoday.in/story/modi-nagaland-hornbill-festival-northeast-has-natural-economic-zones/1/404568.html
 6. DD News; 01.12.2014; (TV channel)

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகாலாந்து&oldid=2212503" இருந்து மீள்விக்கப்பட்டது