திரிபுரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ত্রিপুরা
—  State  —

முத்திரை
இந்தியாவில் திரிபுராவின் இருப்பிடம்
அமைவிடம் 23°50′N 91°17′E / 23.84°N 91.28°E / 23.84; 91.28ஆள்கூற்று : 23°50′N 91°17′E / 23.84°N 91.28°E / 23.84; 91.28
நாடு  இந்தியா
மாவட்டங்கள் 8
நிர்மாணிக்கப்பட்ட நாள் 21 January 1972
தலைநகரம் அகர்தலா
ஆளுனர் தேவனாந்து கொண்வர்
முதலமைச்சர் மாணிக் சர்க்கார் (சிபிஎம்)
சட்டமன்றம் (தொகுதிகள்) ஓரவை (60)
மக்களவைத் தொகுதி ত্রিপুরা
மக்களவை உறுப்பினர்

வார்ப்புரு:இந்திய மக்களவை//உறுப்பினர் (வார்ப்புரு:இந்திய மக்களவை//உறுப்பினர்/கட்சி) வார்ப்புரு:இந்திய மக்களவை//உறுப்பினர்/குறிப்புகள்

மக்கள் தொகை

அடர்த்தி

36,71,032 (21st) (2011)

350/km2 (906/sq mi)

கல்வியறிவு 80.2% (5வது)
மொழிகள் வங்காள மொழி, Kokborok
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு 10,491.69 சதுர கிலோமீற்றர்கள் (4,050.86 sq mi) (26வது)
ஐ. எசு. ஓ.3166-2 IN-TR
இணையதளம் tripura.nic.in
Tripura in India.png

திரிபுரா இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் அகர்தலாவாகும். பேசப்படும் முக்கிய மொழிகள், வங்காள மொழியும் காக்பரோக்குமாகும்.

பரப்பளவு: 10,492 கிமீ² சனத்தொகை: 36 லட்சம் (2011).

வரலாறு[தொகு]

சுதந்திரத்துக்கு முன் திரிபுரா முடியாட்சி நாடாக இருந்தது. இம் முடியாட்சிக்கு எதிராக எழுந்த கணமுக்தி பரிஷத் இயக்கம், முடியாட்சியை வீழ்த்தி, நாட்டை இந்தியாவுடன் இணைத்தது. இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது பெருமளவு வங்காள மக்கள் கிழக்குப் பாகிஸ்தான்|கிழக்குப் பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக வந்து இந்த மாநிலத்தில் குடி புகுந்துள்ளனர்.

மக்கள்[தொகு]

சமயவாரியாக மக்கள் தொகை [1]
சமயம் பின்பற்றுவோர் விழுக்காடு
மொத்தம் 3,199,203 100%
இந்துகள் 2,739,310 85.62%
இசுலாமியர் 254,442 7.95%
கிறித்தவர் 102,489 3.20%
சீக்கியர் 1,182 0.04%
பௌத்தர் 98,922 3.09%
சமணர் 477 0.01%
ஏனைய 1,277 0.04%
குறிப்பிடாதோர் 1,104 0.03%

அரசியல்[தொகு]

திரிபுரா மாநில அரசு மூன்று பிரிவுகளை உடையது. செயலாக்கப் பிரிவு, நீதிப் பிரிவு, சட்டமியற்றும் பிரிவு ஆகியவையே அவை. செயலாக்கப் பிரிவில் அமைச்சர்களும், அவர்களின் தலைவராக முதலமைச்சரும் இருப்பர். இவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் ஆவர். மாநிலத்தை 60 தொகுதிகளாகப் பிரித்து, தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தும். ஒவ்வொரு தொகுதியிலும் அதிக வாக்குகள் பெற்றவர் அந்த தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினர் ஆவார். சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவர் சபாநாயகராகவும், மற்றொருவர் துணை சபாநாயகராகவும் தேர்ந்தெடுக்கப்படுவர். சபாநாயகரின் தலைமையில் சட்டமன்றக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. சபாநாயகர் இல்லாத சமயத்தில் துணை சபாநாயகர் சட்டமன்றக் கூட்டத்தை நடத்துவார்.[2] சட்டமன்ற உறுப்பினர்கள் ஐந்தாண்டு காலம் வரை பதவியில் இருப்பர். திரிபுரா நீதித்துறையின் உயர் அமைப்பாக திரிபுரா உயர் நீதிமன்றம் செயல்படும். இதன் கீழ் பல நீதிமன்றங்கள் இயங்குகின்றன[3][4] ஆளுநரை இந்தியக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். அதிக சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட . கட்சியோ, அதன் கூட்டணியோ ஆட்சி அமைக்க அழைக்கப்படுவர்..

மாணிக் சர்க்கார், தற்போதைய முதல்வர்

இந்த மாநிலத்தில் இருந்து இரு உறுப்பினர்கள் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மாநிலங்களவைக்கு ஒரு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஊர்கள் ஊராட்சித் தலைவரின் கீழும், பழங்குடியின மக்கள் வாழும் இடங்கள் அவர்களின் தன்னாட்சிக் குழுவின் ஆட்சியின் கீழும் செயல்படுகின்றன.[5] இந்தக் குழு 527 பழங்குடியின கிராமங்களின் உள்ளாட்சிக்கு துணை புரிகிறது.[5][6]

ஆட்சிப் பிரிவுகள்[தொகு]

இந்த மாநிலம் மேற்கு திரிப்புரா, வடக்கு திரிப்புரா, தெற்கு திரிப்புரா, தலாய் மாவட்டம் ஆகிய நான்கு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[7]

தட்பவெப்ப நிலை[தொகு]

தட்பவெப்ப நிலை தகவல், அகர்த்தலா
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 25.6
(78.1)
28.3
(82.9)
32.5
(90.5)
33.7
(92.7)
32.8
(91)
31.8
(89.2)
31.4
(88.5)
31.7
(89.1)
31.7
(89.1)
31.1
(88)
29.2
(84.6)
26.4
(79.5)
30.52
(86.93)
தாழ் சராசரி °C (°F) 10
(50)
13.2
(55.8)
18.7
(65.7)
22.2
(72)
23.5
(74.3)
24.6
(76.3)
24.8
(76.6)
24.7
(76.5)
24.3
(75.7)
22
(72)
16.6
(61.9)
11.3
(52.3)
19.7
(67.4)
பொழிவு mm (inches) 27.5
(1.083)
21.5
(0.846)
60.7
(2.39)
199.7
(7.862)
329.9
(12.988)
393.4
(15.488)
363.1
(14.295)
298.7
(11.76)
232.4
(9.15)
162.5
(6.398)
46
(1.81)
10.6
(0.417)
2,146
(84.488)
ஆதாரம்: [8]

மேற்கோள்கள்[தொகு]

  1. Census of india , 2001
  2. "Tripura Legislative Assembly". Legislative Bodies in India. National Informatics Centre. பார்த்த நாள் 21 April 2007.
  3. "About us". Tripura High Court. பார்த்த நாள் 26 March 2013.
  4. Sharma, K Sarojkumar; Das, Manosh (24 March 2013). "New Chief Justices for Manipur, Meghalaya & Tripura high courts". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/city/guwahati/New-Chief-Justices-for-Manipur-Meghalaya-Tripura-high-courts/articleshow/19163853.cms. பார்த்த நாள்: 24 March 2013. 
  5. 5.0 5.1 "State and district administration: fifteenth report" (PDF). Second Administrative Reforms Commission, Government of India (2009). பார்த்த நாள் 18 May 2012.
  6. "About TTAADC". Tripura Tribal Areas Autonomous District Council. பார்த்த நாள் 5 July 2012.
  7. மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்
  8. "Monthly mean maximum & minimum temperature and total rainfall based upon 1901–2000 data" (PDF). India Meteorology Department. பார்த்த நாள் 29 January 2013.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திரிபுரா&oldid=1985493" இருந்து மீள்விக்கப்பட்டது