திப்ரா மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திப்ரா அல்லது திரிபுரி மக்கள்
திப்ரா மக்கள்
திப்ரா மக்களின் அதிகாரப்பூர்வமற்றா கொடி
பாரம்பரிய உடையில் திப்ரா பெண்
மொத்த மக்கள்தொகை
1.2 மில்லியன் (2011)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 இந்தியா1,011,294[1]
           திரிபுரா950,875[1]
           மிசோரம்32,634[1]
           அசாம்22,890[1]
           மேகாலயா2,735[1]
           நாகாலாந்து350[1]
           குஜராத்239[1]
           மணிப்பூர்208[1]
           ஜம்மு காஷ்மீர்190[1]
           இராஜஸ்தான்169[1]
           மேற்கு வங்காளம்120[1]
           மகாராட்டிரா118[1]
           கர்நாடகா114[1]
 வங்காளதேசம்156,578 (2021)[2]
 மியான்மர்அறியப்படவில்லை
மொழி(கள்)
திரிபுரி மொழி
சமயங்கள்
பெரும்பான்மை: இந்து சமயம்
சிறுபான்மை: கிறித்துவம், இசுலாம் மற்றும் பௌத்தம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
திபெத்திய-பர்மிய இனக்குழுக்கள், மணிப்புரி மக்கள், போடோ மக்கள், பர்மிய மக்கள்

திரிபுரா அல்லது திரிபுரி அல்லது திப்ரா மக்கள்[3][4]வடகிழக்கு இந்தியாவில் உள்ள திரிபுரா மாநிலத்தில் வாழும் மலைவாழ் பழங்குடி மக்கள் ஆவார். இம்மக்களின் முன்னோர்களான மாணிக்கிய வம்சத்தினர் 1400 முதல் 1949 முடிய திரிபுரா இராச்சியத்தை ஆண்டனர்.[5]

வரலாறு[தொகு]

இந்திய மொழியியல் ஆய்வுகள் நிறுவனத்தின் அறிக்கையின்படி, இந்தியாவில் 1903ல் திரிபுரி மொழி பேசும் பகுதிகள்
திரிபுரி மக்கள் நெய்த வண்ணமிகு துணி

திரிபுரா மாநிலத்தின் பூர்வகுடி மக்களான திரிபுரி மக்கள் சொந்த தனித்துவமான வளமான கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் வரலாற்றைக் கொண்டுள்ளனர். 1512ம் ஆண்டில் மாணிக்கிய வம்சத்தின் திரிபுரி இராச்சிய மக்கள், முகலாயப் படைகளை வென்றனர். பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் திரிபுரா இராச்சித்தினர் சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் இந்த இராச்சியம் திரிபுரா மாநிலமாக மாறியது.

மொழி[தொகு]

திரிபுரி மக்கள் திபெத்திய-பர்மிய குடும்பத்தைச் சேர்ந்த திரிபுரி மொழியை பேசுகின்றனர். திரிபுரா மாநிலத்தின் அலுவல் மொழி திரிபுரி மொழி ஆகும். திரிபுரி மொழி பேசுவோர் இந்தியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் உள்ளனர். திரிபுரி மொழியை எழுதுவதற்கு வங்காள மொழி எழுத்துக்களைப் பயன்படுத்துகின்றனர்.

சமயம்[தொகு]

திரிபுரி மக்களில் இந்து சமயத்தைப் பின்பற்றுபவர்கள் 93.6% ஆகவும், கிறித்துவத்தை பின்பற்றுபவர்கள் 6.4% ஆகவுள்ளனர்.





திரிபுரி மக்களின் சமயம்[6]

சமுதாயம்[தொகு]

திரிபுரி மக்களின் ரிக்நாய் பாணி புடவை

இந்திய அரசு மற்றும் திரிபரா மாநில அரசுகள் கல்வி, பொருளாதார முன்னேற்றத்திற்காக பூர்வகுடி திரிபுரி மக்களை பட்டியல் பழங்குடி வகுப்பில் வைத்து இடஒதுக்கீடு போன்ற சலுகைகள் வழங்குகிறது. இம்மக்கள் மலைப்பகுதிகளில் சிறு சிறு குழுக்களாக வாழ்கின்றனர். தங்களில் ஓருவரை தலைவராகக் கொண்டுள்ளனர்.[7]

பாரம்பரிய உடையில் திரிபுரி ஆண் மற்றும் பெண்
பாரம்பரிய உடையில் திரிபுரி பெண்கள்

நாட்காட்டி[தொகு]

திரிபுரி மக்கள் 12 மாதங்கள் மற்றும் 7 நாட்கள் கொண்ட சந்திர-சூரிய நாட்காடியான திரிபுராப்த எனும் நாட்காட்டியை பின்பற்றுகிறார்கள். திரிபுரி புத்தாண்டு இளவேனிற்காலத்தில் ஏப்ரல் 14/15 அன்று கொண்டாடுகிறார்கள். திரிபுரி மக்கள் சகாப்தம் மாணிக்கிய வம்சத்தினர் கிபி 1400ல் திரிபுரா இராச்சியம் தொடங்கியதிலிருந்து ஆரம்பிக்கிறது.

உணவு[தொகு]

திரிபுரா மக்கள் மலைகளில் கிடைக்கும் காய்கறி உணவுகளை விரும்பி உண்பர். இவர்களின் பாரம்பரிய உணவுப் பட்டியலில் இளம் மூங்கில் தண்டால் செய்த மோயா அல்லது மூயா எனும் உணவு மிகவும் பிரலபலம் ஆகும்.[8]இவர்களின் அன்றாட உணவில் மீன் கறியுடன், அரிசி சாதம் இன்றியமையாததாகும்.[9]

திருவிழாக்கள்[தொகு]

புத்தாண்டு[தொகு]

பியுசு எனும் திரிபுரி புத்தாண்டு ஆண்டு தோறும் ஏப்ரல் 14/15 நாளில் கொண்டாடப்படுகிறது.[10] festival is the two long day festival[11] [12]இத்திருவிழாவிற்குப் பின்னர் மக்கள் வேளாண்மைப் பணிகள் துவங்குகின்றனர்.

ஹங்கராய் திருவிழா[தொகு]

அறுவடைத் திருவிழாவான ஹங்கராய் திருவிழாவை திரிபுரி மக்கள் வெகு சிறப்பாக கொண்டாடுகின்றனர்.[13][14] இத்திருவிழாவின் போது மக்கள் கடவுள்களுக்கு பலி மற்றும் உணவுகள் படையலிட்டு வழிபாடுகின்றனர்.[15]

திரிபுரி மக்களின் விளையாட்டு[தொகு]

பைத் எனப்படும் விளையாட்டு

திரிபுரி மக்கள் பாரம்பரிய விளையாட்டாக பைத் எனும் விளையாட்டை விளையாடுகின்றனர். இது தமிழ்நாட்டின் ஆடு புலி ஆட்டம் போன்றதே. தற்போதைய இளம் தலைமுறையினர் கால்பந்தாட்டம் மற்றும் துடுப்பாட்டம் ஆடுகின்றனர்.

அரசியல்[தொகு]

திப்ரா பழங்குடி மக்கள் தங்களின் அரசியல் கட்சிகளாக திரிபுரா பூர்வகுடிகள் முன்னேற்ற மண்டலக் கூட்டணி மற்றும் திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணியைக் கொண்டுள்ளனர். இருப்பினும் பாரதிய ஜனதா கட்சி, பொதுவுடமைக் கட்சிகள் மற்றும் இந்திய தேசிய காங்கிரசு கட்சிகளில் உள்ளனர்.

அரசியல்வாதிகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  2. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  3. Hasan, Nur; Jahan, Rownak (2014). "A survey of medicinal plants used by the Deb barma clan of the Tripura tribe of Moulvibazar district, Bangladesh". Journal of Ethnobiology and Ethnomedicine 10: 3–19. doi:10.1186/1746-4269-10-19. பப்மெட்:24502444. 
  4. Ahmed, Sazdik; Ravhee, Shahla (2020). "A Study on the Settlement Morphology of Tipra (Tripura) ethnic group in Sreemangal, Bangladesh". Journal of Recent Activities in Architectural Sciences: 3–19. doi:10.46610/JoRAAS.2020.v05i01.003. https://www.researchgate.net/publication/343975610. 
  5. Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  6. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  7. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  8. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  9. Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  10. "Buisu Festival: Govt's emphasis on cultural development quality living of tribals". Tripura Net. https://tripuranet.com/tnet/buisu-festival%C2%A0govts-emphasis%C2%A0-on-cultural-development-quality-living-of%C2%A0-tribals-1903.html. 
  11. "CM to inaugurate 20th state-level Buisu Festival". The Rise East. https://theriseeast.com/tripura/cm-to-inaugurate-20th-statelevel-buisu-festival/. 
  12. Tripura, Boren. The Challenges and Possibilities Kokborok and Kokrabai (Kokborok literature) face in Bangladesh. https://www.researchgate.net/publication/345730460. 
  13. Debbarma, Baby; Kaipeng, Ramengzaua (2022). "A STUDY ON THE FOLK FESTIVAL OF TRIPURA TRIBALWITH SPECIAL REFERENCE TO-DEBBARMA, REANG AND JAMATIA". The International Journal of Creative Research Thoughts (IJCRT) 10. பன்னாட்டுத் தர தொடர் எண்:2320-2882. https://ijcrt.org/papers/IJCRT2205031.pdf. 
  14. "Makar Sankranti 2023: When to celebrate Makar Sankranti". The Times of India. https://timesofindia.indiatimes.com/religion/festivals/makar-sankranti-2023-when-to-celebrate-makar-sankranti-know-rituals-and-significance/articleshow/96882107.cms. 
  15. Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).



"https://ta.wikipedia.org/w/index.php?title=திப்ரா_மக்கள்&oldid=3766869" இருந்து மீள்விக்கப்பட்டது