திரிபுரா பழங்குடியின வட்டாரங்களுக்கான தன்னாட்சி மாவட்டக் குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திரிபுரா பழங்குடியின வட்டாரங்களுக்கான தன்னாட்சி மாவட்டக் குழு Tripura Tribal Areas Autonomous District Council
வகை
வகை
தன்னாட்சி மாவட்டக் குழு
(திரிபுரா பழங்குடியினர்)
உறுப்பினர்கள்30 உறுப்பினர்கள்
தேர்தல்கள்
28 பேர், வாக்கின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவோர்
2 ஆளுநரால் நியமிக்கப்படுவோர்
கூடும் இடம்
Kaunsil Nok.gif
ஆட்சிக் குழுவின் தலைமையகம், குமுலுங்
வலைத்தளம்
http://tripura.nic.in/ttaadc/

திரிபுரா பழங்குடியின வட்டாரங்களுக்கான தன்னாட்சி மாவட்டக் குழு , இந்திய மாநிலமான திரிபுராவின் பழங்குடியின வட்டாரங்களை ஆட்சி செயும் அமைப்பாகும். இதன் தலைமையகம் குமுல்வுங்கில் உள்ளது. பழங்குடியின மக்கள் தங்களை தாங்களே ஆண்டு கொள்ள, இந்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. இதன்வழி, ஆறாவது அட்டவணையின்படி, இந்த ஆட்சிக் குழு ஏற்படுத்தப்பட்டது.

இந்த ஆட்சிக் குழு 7,132.56 சதுர கி.மீ நிலப்பரப்பை நிர்வகிக்கிறது. இது திரிபுரா மாநிலத்தின் பரப்பளவில் 68% நிலப்பரப்பாகும். இந்த ஆட்சிக் குழுவுக்கு உட்பட்ட பெரும்பாலான பகுதி காடு, மலைகளால் நிரம்பியுள்ளது.

இந்த ஆட்சிக் குழுவுக்கு உட்பட்ட பகுதியில் 679,720 மக்கள் வசிக்கின்றனர்.

இந்தக் குழுவில் 30 உறுப்பினர்கள் இருப்பர். இவர்களில் 28 உறுப்பினர்கள் தேந்ர்தெடுக்கப்படுகின்றனர். இருவரை ஆளுநர் நியமிப்பார். 28 உறுப்பினர்களில் 25 உறுப்பினர்கள் பழங்குடியினராக இருக்க வேண்டும் என்பது விதி. இந்தக் குழுவுக்கு சட்டமியற்றும் அதிகாரமும், செயலாற்றும் அதிகாரமும் உண்டு.

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]