பாரியா மக்கள்
Appearance
பாரியா மக்கள் (Bharia) இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் துத்து ஆறு பாயும் பாதல்கோட் பள்ளத்தாக்கில் வாழும் பழங்குடி மக்கள் ஆவார். மூலிகைச் செடிகள், கொடிகள், மரங்கள் வளரும் இப்பகுதியில் வாழும் பாரியா மக்கள், பல்வகை நோய்களுக்கு மூலிகை மருத்துவம் பார்க்கின்ற்னர்.[1] இம்மக்கள் திராவிட மொழிக் குடும்பத்தின் கிளை மொழியான பாரியா மொழியைப் பேசுகின்றனர். இட ஒதுக்கீடு சலுகை பெற இந்திய அரசு இம்மக்களை பட்டியல் பழங்குடி வகுப்பில் சேர்த்துள்ளது.