சக்மா மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சக்மா மக்கள்
চাকমা
மொத்த மக்கள்தொகை
300,000[1][2][3] (2011)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
வங்காளதேசம்,[4] இந்தியா[4]மற்றும் மியான்மர்
மொழி(கள்)
சக்மா
சமயங்கள்
Dharma Wheel (2).svg தேரவாத பௌத்தம்

சக்மா மக்கள் (Chakma people) பெரும்பான்மையான வங்காளதேசத்தின் சிட்டகாங் மலைப்பகுதிகளிலும் மற்றும் மியான்மர் நாட்டின் மலைப்பகுதிகளிலும், கிழக்கு இந்தியாவின் அசாம், திரிபுரா, மிசோரம், அருணாச்சலப் பிரதேசம் மாநிலங்களிலும் வாழும் பழங்குடி மக்கள் ஆவார்.[5]

இம்மக்கள் தேரவாத பௌத்த சமயத்தைப் பின்பற்றுகின்றனர். இம்மக்கள் சக்மா மொழி, வங்காள மொழி மற்றும் இந்தி மொழிகளை பேசுகின்றனர். சக்மா பழங்குடி மக்கள் 31 குடிகளாக பிரிந்துள்ளனர். ஒவ்வொரு குடிக்கும் ஒரு குலத் தலைவர் உண்டு.

1971 வங்காள தேச விடுதலைப் போரின் போது ஆயிரக்கணக்கான சக்மா பழங்குடி மக்கள் சிட்டகாங் பகுதிகளிலிருந்து இந்தியாவின் திரிபுரா, மிசோரம் மாநிலங்களில் அகதிகளாக குடியேறினர். எனவே மிசோரம் மற்றும் திரிபுரா மாநில சட்டமன்றங்களில் சக்மா பழங்குடி மக்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்படுகிறது.[6]மேலும் திரிபுரா பழங்குடியின வட்டாரங்களுக்கான தன்னாட்சி மாவட்டக் குழுக்களில் சக்மா பழங்குடி மக்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது.[7]

சிட்டகாங் மலைத்தொடர் பிணக்குகள்[தொகு]

சிட்டகாங் மலைத்தொடரில் வாழும் சக்மா பழங்குடி மக்களுக்கும், வங்காளதேச இசுலாமியர்களுக்கும் 1977-ஆம் ஆண்டில் பிணக்குகள் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட வன்முறையில் பல நூற்றுக்கணக்கான சக்மா மக்கள் கொல்லப்பட்டனர். பின்னர் இரு பிரிவினருக்கும் இடையே ஒரு உடன்பாடு ஏற்பட்டது.[8][9]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Chakma (people)". Encyclopædia Britannica. The majority of Chakmas—numbering about 300,000—remained there [in the Chittagong Hills] into the 21st century. If about 300,000 was a majority, then the total population was no more than about 600,000 as of 2001.
  2. M. Ataharul Islam; Shamal Chandra Karmaker (2012). "Population". Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ). Asiatic Society of Bangladesh. http://en.banglapedia.org/index.php?title=Population. "The tribal population [of Bangladesh] in 2001 was 1.4 million, which was about 1.13% of the total population. The figure was 1.2 million in 1991, of which chakma population was 252,258"  If the Chakma population grew at the same rate as the tribal population overall, their 2001 population in Bangladesh would have been about 288,300.
  3. "Statistical Profile of Scheduled Tribes in India 2013" (PDF). Ministry of Tribal Affairs. Government of India. Mizoram: 19,554 ... Tripura: 18,014 ... Meghalaya: 44 ... Assam: 430 ... West Bengal: 211 Total population in India: 38,253.
  4. 4.0 4.1 Library of Congress Subject Headings. I (13th ). Cataloging Distribution Service, Library of Congress. 1990. பக். 709. https://books.google.com/books?id=aswHhUQG4okC&pg=PA709. 
  5. N. N. Gazi; R. Tamang; V. K. Singh; A. Ferdous; A. K. Pathak et al. (2013). "Genetic structure of Tibeto-Burman populations of Bangladesh: evaluating the gene flow along the sides of Bay-of-Bengal". PLOS ONE 8 (10): e75064. doi:10.1371/journal.pone.0075064. பப்மெட்:24130682. Bibcode: 2013PLoSO...875064G. 
  6. "Tripura State Portal". 7 December 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 19 August 2010 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Profile of CEM and EM". Tripura Tribal Area Autonomous District Council. 7 March 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 19 August 2010 அன்று பார்க்கப்பட்டது.
  8. Sharon O'Brien, (2004). "The Chittagong Hill Tracts". In Dinah Shelton (ed.). Encyclopedia of Genocide and Crimes against Humanity. Macmillan Library Reference. pp. 176–177.
  9. "Hidden Bangladesh: Violence and Brutality in the Chittagong Hill Tracts". Amnesty International UK. 21 August 2015. 22 September 2021 அன்று பார்க்கப்பட்டது.

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்மா_மக்கள்&oldid=3493225" இருந்து மீள்விக்கப்பட்டது