உள்ளடக்கத்துக்குச் செல்

வடக்கு திரிப்புரா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வடக்கு திரிப்புரா மாவட்டம், இந்திய மாவட்டங்களில் ஒன்று.[1]. இது திரிப்புரா மாநிலத்தில் அமைந்துள்ளது. இதன் தலைமையகம் தர்மநகரில் உள்ளது. இதன் பரப்பளவு 2821 சதுர கி,மீ, இங்கு ஏறத்தாழ ஆறு லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இது கஞ்சன்பூர், கைலாசாகர், தர்மநகர் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மக்களின் கல்வியறிவு தேசிய சராசரியை விடவும் அதிகம். இங்கு ரோவா வனவிலங்கு சரணாலயம் உள்ளது.

அரசியல்

[தொகு]

சட்டசபைக்கு இந்த மாவட்டத்தில் இருந்து பதினோரு பேர் தேர்ந்தெடுக்கப்படுவர். இது கிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-12-23.

இணைப்புகள்

[தொகு]