கமல்பூர், இந்தியா
- இதே பெயரில் உள்ள பிற ஊர்களுக்கு, கமல்பூர் என்ற கட்டுரையைப் பார்க்கவும்.
கமல்பூர்
কমলপুর Kamalpur | |
|---|---|
நகரம் | |
| நாடு | |
| மாநிலம் | திரிபுரா |
| மாவட்டம் | தலாய் மாவட்டம் |
| ஏற்றம் | 16 m (52 ft) |
| மக்கள்தொகை (2001) | |
| • மொத்தம் | 5,141 |
| மொழிகள் | |
| • அலுவல் | வங்காள மொழி, கொக்பரோக், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
கமல்பூர் (Kamalpur) என்பது இந்தியவின் மாநிலமான திரிபுராவின் தலாய் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமும் நகர பஞ்சாயத்துமாகும். இது மாநிலத் தலைநகரான அகர்தலாவில் இருந்து 93 கி.மீ தொலைவில் உள்ளது. தலாய் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய துணைப்பிரிவு நகரமாகக் கருதப்படுகிறது.[1].
புவியியல்
[தொகு]கமல்பூர், தலாய் மாவட்டத்தின் பழமையான மற்றும் மிகப்பெரிய நகரமாகும். தலாய் ஆற்றின் கரையில் இரண்டு மலைகளுக்கு இடையில் அமைந்துள்ளது: அதாரமுரா மலைத்தொடர் மற்றும் லாங்டோராய் மலைத்தொடர் 24.19768°N 91.83487°E என்பன அவ்விரண்டு மலைகளாகும். சராசரியாக கடல் மட்டத்திலிருந்து 16 மீட்டர் உயரத்தில் கமல்பூர் அமைந்துள்ளது. இந்த நகரம் அண்டை நாடான வங்காளதேசத்துடன் 53 கி.மீ சர்வதேச எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.
காலநிலை
[தொகு]வெப்பமான மற்றும் ஈரப்பதமான கோடைக்காலம், நீடித்த மழைக்காலம் மற்றும் வெப்பமான குளிர்காலம் கொண்ட வெப்பமண்டல காலநிலை கமல்பூரில் காணப்படுகிறது. மார்ச்சு மற்றும் ஏப்ரல் மாதங்களில் அடிக்கடி மழை பெய்யும். கோடை மற்றும் குளிர்காலங்களில் அதிகபட்ச வெப்பநிலை முறையே 36 பாகை செல்சியசு மற்றும் 28 பாகை செல்சியசு வெப்பநிலை நிலவுகிறது. கோடை மற்றும் குளிர்காலங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 17 பாகை செல்சியசு மற்றும் 5.3 பாகை செல்சியசு வெப்பநிலை வரை பதிவாகிறது.
மக்கள் தொகையியல்
[தொகு]2011ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,[2] கமல்பூரின் மக்கள் தொகை 10,872 ஆகும். இதில் 5,479 ஆண்கள் மற்றும் 5,393 பெண்கள் இருந்தனர். 0-6 வயதுடைய குழந்தைகளின் மக்கள் தொகை 988 ஆகும். இந்த எண்ணிக்கை கமல்பூரின் மொத்த மக்கள் தொகையில் 9.09% ஆகும். கமல்பூர் நகர் பஞ்சாயத்தில், ஆண்-பெண் பாலின விகிதம் 984 ஆகவும், மாநில சராசரி 960 ஆகவும் இருந்தது. கமல்பூரில் குழந்தை பாலின விகிதம் திரிபுரா மாநில சராசரியான 957 உடன் ஒப்பிடும்போது 900 ஆக இருந்தது. சராசரி கல்வியறிவு விகிதம் தேசிய சராசரியான 87.22% என்பதை விட அதிகாக 97.77 என இருந்தது. ஆண்களி கல்வியறிவு சுமார் 98.61% ஆகவும், பெண்கள் கல்வியறிவு விகிதம் 96.93% ஆகவும் அப்போது இருந்தது.
அரசியல்
[தொகு]இந்த நகரம் கமல்பூர் சட்டமன்றத் தொகுதிக்கும், கிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது[3]
பொருளாதாரம்
[தொகு]கமல்பூர் நகரம் முக்கியமாக விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். பல நுண் மற்றும் சிறு அளவிலான தொழில்துறை அலகுகள் இங்குள்ளன. ராம்துர்லப்பூர் தேயிலைத் தோட்டம் என்ற ஒரு தேயிலைத் தோட்டம் இங்கு உள்ளது. பல்வேறு பகுதிகளில் ரப்பர் தோட்டமும் பரவியுள்ளது. முக்கிய சந்தைப் பகுதி கமல்பூர் நகரம் ஆகும். பிற சிறிய சந்தை இடங்கள் புல்சாரி, கல்லூரி சௌமுகானி, கலாச்சாரி மற்றும் மாணிக்பந்தர் ஆகியனவாகும்.
சுகாதாரம்
[தொகு]பிமல் சின்கா நினைவு மருத்துவமனை என்று பெயரிடப்பட்ட ஒரே ஒரு துணைப்பிரிவு மருத்துவமனை மட்டுமே கமல்பூரில் உள்ளது.
போக்குவரத்து
[தொகு]அம்பாசா, அகர்தலா, கோவாய், குமார்காட்டு ஆகிய நகரங்களுக்கு கமல்பூருடன் சாலை இணைப்பு உள்ளது. அருகிலுள்ள இரயில் நிலையம் அம்பாசா இரயில் நிலையம் ஆகும். கமல்பூருக்கு சேவை செய்து வந்த கமல்பூர் விமான நிலையம் தற்போது செயல்படவில்லை.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-12-22.
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. Retrieved 2008-11-01.
- ↑ "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies" (PDF). Tripura. Election Commission of India. Archived from the original (PDF) on 2005-11-08. Retrieved 2008-10-08.
- ↑ "Unused Airports in India". Center For Asia Pacific Aviation. 27 November 2009. http://indiaaviation.aero/news/airline/32098/59/Unused-Airports-in-India. பார்த்த நாள்: 9 February 2012.