கேர் பூசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேர் பூசை (Ker puja) இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் கொண்டாடப்படும் ஒரு திருவிழா ஆகும். கார்ச்சி பூசை முடிந்த சில வாரங்களுக்குப் பிறகு ஆகத்து மாதத்தில் கேர் பூசை கொண்டாடப்படுகிறது.[1] வாசுத்து தேவதையை வழிபடும் பழங்குடியினர் முக்கியமாக இத்திருவிழாவாவைக் கொண்டாடுகின்றனர். பூசையில் இதில் காணிக்கைகள், பலிகள் ஆகியவையும் அடங்கும். மாநில மக்களின் பொது நலம்[2] மற்றும் நல்வாழ்வுக்காக முன்னாள் ஆட்சியாளர்கள் இந்த பூசையை செய்ததாக நம்பப்படுகிறது.[3]

பூசையை திரிபுராவின் அரசர்கள் தொடங்கி வைத்தனர். அலாம் பழங்குடியினர் பூசையில் பங்கேற்பது அவசியமாகும். திருவிழாவின் போது 2.5 நாட்களுக்கு, தலைநகரின் நுழைவாயில்கள் மூடப்படும். ஆளும் இறையாண்மை மக்கள் உட்பட பங்கேற்பாளர்கள், காலணிகள் அணியவோ, தீ மூட்டவோ, ஆடவோ, பாடவோ அனுமதிக்கப்படுவதில்லை.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ker puja". Assam Tribune. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 26 April 2013.
  2. Barthakur, Dilip Ranjan (2003). The Music And Musical Instruments Of North Eastern India. Mittal Publications. பக். 57–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7099-881-5. https://books.google.com/books?id=oP4vH-4oSEcC&pg=PA57. பார்த்த நாள்: 28 April 2013. 
  3. Sharma, A. P. (8 May 2010). Famous Festivals of India. Pinnacle Technology. பக். 188–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-61820-288-8. https://books.google.com/books?id=VRgD7cga54EC&pg=PT188. பார்த்த நாள்: 28 April 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேர்_பூசை&oldid=3408613" இலிருந்து மீள்விக்கப்பட்டது