தலாய் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலாய் மாவட்டம், இந்திய மாவட்டங்களில் ஒன்று. [1]. இது திரிபுரா மாநிலத்தின் நான்கு மாவட்டங்களிலேயே குறைந்த மக்கள் தொகையைக் கொண்டது. இதன் தலைமையகம் ஆம்பாசா நகரில் உள்ளது. இதன் பரப்பளவு 2523 சதுர கி.மீ. பொருளாதார அளவில், தங்கிய மாவட்டங்களில் இதுவும் ஒன்று. மக்கள் அடர்த்திக் கணக்கின்படி, சதுர கி.மீக்கு 157 பேர் வாழ்கின்றனர். இங்குள்ள மக்களின் கல்வியறிவு தேசிய சராசரியை விடவும் அதிகம்.

அரசியல்[தொகு]

இந்த மாவட்டம் கிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதியில் உள்ளது. இந்த மாவட்டத்தில் ரைமா வேலி, கமல்பூர், சுர்மா, ஆம்பாசா, கரம்சரா, சாவ்மனு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[1]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2015-12-22 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தலாய்_மாவட்டம்&oldid=3557408" இருந்து மீள்விக்கப்பட்டது