திரிபுராவின் வரலாறு
திரிபுரா மாநிலமானது நீண்ட வரலாற்றைக் கொண்டது. திரிபுரா இராச்சியம் அதன் உச்சத்தில் இருந்த காலகட்டமான கி.பி. 14 மற்றும் 15 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் கிழக்கு வங்காளத்தின் முழு பகுதியைக் கொண்டும், வடக்கிலும் மேற்கிலும் பிரம்மபுத்திரா நதிவரையிலும், தெற்கே வங்காள விரிகுடா மற்றும் கிழக்கில் பர்மாவையும் எல்லைகளாக கொண்டு இருந்தது.
திரிபுராவின் சுதேச மன்னர் அரசின் இறுதி மன்னர் கிரித் விக்ரம் கிஷோர் மாணிக்ய தேவ வர்மன் 1947 முதல் 1949 வரை ஆட்சி செய்தார் பின்னர் 1949, செப்டம்பர் 9 அன்று தன் இராச்சியத்தை இந்திய ஒன்றியத்துடன் இணைந்தார்.[1]
தொன்மவியல் செய்திகள்
[தொகு]திரிபுராவின் இராச்சியக் காலப்பகுதியில் எழுதப்பட்ட தொன்மங்கள், இந்து இதிகாசங்கள் மற்றும் திரிபுரி நாட்டுப்புறத் தொன்மங்களில், ராஜ்யத்தின் தோற்றம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
பண்டைய காலம்
[தொகு]திரிபுராவின் பண்டைய காலமானது 7 ஆம் நூற்றாண்டில் வட திரிபுராவிலுள்ள கைலாஷகரில் இருந்து திரிபுரா மன்னர்கள் ஆட்சி செய்த காலம்வரை சொல்கிறது. மேலும் அவர்கள் "ஃபா" என்ற பட்டத்தைப் பூண்டிருந்தனர் ''பா'' என்றால் கொக்பரோக் மொழியில் "தந்தை" அல்லது "தலை" என்று பொருள் ஆகும்.
வரலாற்றுக் காலம்
[தொகு]திரிபுரா மன்னர்கள் "மானிக்யா" என்ற பட்டத்தை ஏற்று, 14 ஆம் நூற்றாண்டில் தங்கள் தலை நகரை தென் திரிபுராவில் கோமி ஆற்றங் கரையில் உதய்பூருக்கு (முன்னர் ரங்கமாடி) மாற்றினர். இது அவர்கள் மிகவும் புகழுடன் விளங்கிய காலமாகும். மேலும் அவர்களின் அதிகாரமும் புகழும் வட இந்தியாவில் அவர்களின் சமகாலத்தவர்களாக இருந்த மொகலாயர்களால் ஒப்புக் கொள்ளப்பட்டது.
நவீன காலம்
[தொகு]
நவீன காலம் என்பது மொகலாயர் ஆட்சியை பிரித்தானியர் தோற்கடித்த பிறகு, இந்திய இராச்சியங்கள் பிரித்தானியரின் மேலாதிக்கத்தை ஏற்ற காலத்தில் இருந்து தொடங்குகிறது. 1871 இல், பிரித்தானிய இந்திய அரசாங்கம் ஆட்சி நிர்வாகத்தில் திரிபுரா மன்னருக்கு உதவ ஒரு முகவரை நியமித்தது. இந்தக் காலகட்டத்தில் ராஜ்யத்தின் தலைநகரம் மேற்கு திரிபுராவில் தற்போதைய மாநிலத் தலைநகராக உள்ள அகர்தலாவிற்கு மாற்றப்பட்டது.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, திரிபுரா சுதேச அரசானது 1949 இல் இந்திய ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது. திரிபுரா 1963 சூலை 1 அன்று ஒன்றிய ஆட்சிப்பகுதியாக ஆனது, பின்னர் 1972 சனவரி 21 அன்று முழு மாநில அந்தஸ்தை பெற்றது.
மேலும் காண்க
[தொகு]குறிப்புகள்
[தொகு]- ↑ "History". North Tripura district website. Archived from the original on 2010-02-15. Retrieved 2009-11-11.