பிரம்மபுத்திரா ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பிரம்மபுத்திரா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பிரம்மபுத்திரா இந்தியாவின் வடகிழக்கே அஸ்ஸாம் மாநிலம், வங்காள தேசம் வழியாகப் பாய்ந்து வங்காள விரிகுடாக் கடலில் கலக்கும் கழிமுக நிலப்பகுதி

பிரம்மபுத்திரா ஆறு, திபெத்திலுள்ள கயிலை மலையில் ஸாங்-போ என்ற பெயரில் புறப்பட்டு, இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளில் பாய்ந்து வங்காள விரிகுடாக் கடலில கலக்கின்றது. மொத்தம் 2800 கிமீ நீளமுள்ள இந்த ஆறு, 1700 கிமீ தூரம் திபெத்திலுள்ள 4000 மீட்டருக்கும் அதிகமான மலைகளிலேயே கிழக்கு நோக்கி பயணிக்கிறது. பிறகு நாம்சா-படுவா மலையருகே, தெற்கு தென்மேற்காக வளைந்து அருணாசல பிரதேசத்தில் சியாங் என்ற பெயரில் நுழைந்து, அதன்பின் சமவெளிப் பகுதியை அடைகிறது. சமவெளிப்பகுதியில் இந்நதி திகாங் என்று அழைக்கப்படுகிறது. சமவெளிப் பகுதியில் 35 கிமீ தொலைவு கடந்தபின், திபங் மற்றும் லோகித் என்ற ஆறுகளோடு கூடி மிகவும் அகன்ற ஆறாக ஆகி, பிரம்மபுத்திரா என்று பெயர் மாற்றமடைந்து அசாம் மாநிலத்தில் நுழைகிறது.

அசாம் மாநிலத்தின் முதன்மை ஆறான பிரம்மபுத்திரா, ஒருசில இடங்களில் 10 கிமீ வரை அகலமுடையதாயிருக்கிறது. திப்ரூகட் அருகே அது இரண்டாகப் பிரிகிறது. பிரிந்த அவ்விரு கிளைகளும் நூறு கிலோமீட்டருக்கு அப்பால் இணைகின்றன. இதனால் உருவாகியுள்ள தீவு மஜிலித்தீவு என்று அழைக்கப்படுகிறது.

வங்காளதேசத்தில் இந்த ஆறு ஜமுனா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இது கங்கையின் கிளையாகிய பத்மாவுடன் இணைந்து மிகப்பெரிய கழிமுகத்தை உருவாக்கி வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

பொதுவாக இந்தியாவில் பெண்பால் பெயரிட்டு அழைப்பது வழக்கம், ஆனால் இவ்வாறு 'புத்திரா' என்று முடிவதால், இது சிறப்பாக ஆண்பால் பெயரிட்டு வழங்கப்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரம்மபுத்திரா_ஆறு&oldid=2308206" இருந்து மீள்விக்கப்பட்டது