ஒன்றியப் பகுதி (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒன்றியப் பகுதி அல்லது யூனியன் பிரதேசம் (Union Territory) என்பது இந்தியாவில் ஒரு நிர்வாகப் பிரிவு ஆகும். இது மாநிலங்களைப் போலல்லாமல் நேரடியாக இந்திய நடுவண் அரசால் நிர்வகிக்கப்படுகிறது.[1] 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் 9 ஒன்றியப் பகுதிகள் உள்ளன.

அவைகள்:

 1. ஜம்மு காஷ்மீர் - (31 அக்டோபர் 2019 நள்ளிரவு முதல்) [2][3][4]
 2. தில்லி
 3. புதுச்சேரி
 4. லடாக் - (31 அக்டோபர் 2019 நள்ளிரவு முதல்)[5]
 5. அந்தமான் நிக்கோபார் தீவுகள்
 6. சண்டீகர்
 7. தமன் தியூ
 8. தாத்ரா மற்றும் நகர் ஹவேலி
 9. லட்சத்தீவுகள்

இவற்றில் புதுச்சேரி, தில்லி மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மூன்று ஒன்றியப் பகுதிகள் சட்டமன்றத்துடன் கூடிய தகுதி உடையனவாகும். மற்ற ஒன்றியப் பகுதிகள் சட்டமன்றங்கள் இன்றி, நேரடியாக இந்தியக் குடியரசுத் தலைவரால் நிர்வகிக்கப்படுகிறது. பிற மாநிலங்களைப் போல் தேர்தல் மூலம் அரசமைக்காமல் குடியரசுத் தலைவர் அமைத்த ஆளுனரால் நிர்வாகம் செய்யப்படுகிறது. புதுச்சேரி, தில்லி மற்றும் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதிகளுக்கு தேர்தல் மூலம் அரசமைக்க உரிமை இருப்பினும், சட்டங்கள் இயற்றுவதில் இந்தியக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் தேவையாக உள்ளது. இந்த 3 ஒன்றியப் பகுதிகளுக்கு துணைநிலை ஆளுநர் தலைமை தாங்குவார்.

மேற்கோள்கள்[தொகு]

 1. What is the difference between a state and a union territory?
 2. ஜம்மு - காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள் உதயம்: பதவியேற்றனர் துணை நிலை கவர்னர்கள்
 3. President's rule revoked in J&K, 2 Union Territories created
 4. Union Territories of Jammu and Kashmir, Ladakh come into existence
 5. ஜம்மு காஷ்மீர் 31 அக்டோபர் 2019 நள்ளிரவு முதல் 2 யூனியன் பிரதேசங்களாகிறது