இலடாக்கு
லடாக் | |
---|---|
ஒன்றியப் பகுதியாக இந்தியாவால் நிர்வகிக்கப்படும் பகுதி[1] | |
ரங்டம் கிராமத்திற்கு அருகில் ஆடு மேய்கிறது; வடக்கு லடாக்கில் சியோக் ஆறு | |
சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியின் வரைபடம், இந்திய நிர்வாகத்தில் உள்ள லடாக் யூனியன் பிரதேசத்தைக் காட்டுகிறது.[1][2][3] | |
ஆள்கூறுகள்: 34°00′N 77°30′E / 34.0°N 77.5°E | |
நிர்வாக நாடு | இந்தியா |
ஒன்றியப் பகுதி | 31 அக்டோபர் 2019[4] |
தலைநகரம் | லே,[5] கார்கில்[6] |
மாவட்டம் | 2 |
அரசு | |
• நிர்வாகம் | லடாக்கின் நிர்வாகம் |
• துணைநிலை ஆளுநர் | இராதாகிருஷ்ண மாத்தூர் |
• மக்களவை உறுப்பினர் | ஜம்யாங் செரிங் நம்கியால் (பாஜக) |
• உயர்நீதி மன்றம் | ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 59,146 km2 (22,836 sq mi) |
உயர் புள்ளி | 7,742 m (25,400 ft) |
தாழ் புள்ளி | 2,550 m (8,370 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 2,74,289 |
• அடர்த்தி | 4.6/km2 (12/sq mi) |
இனம் | Ladakhi |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | இந்தி மற்றும் ஆங்கிலம்[9] |
• பேச்சுவழக்கு | Ladakhi, Purgi, Brokskat and Balti |
நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-LA |
வாகனப் பதிவு | LA[10] |
இணையதளம் | ladakh |
லடாக் (Ladakh) என்பது ஒன்றியப் பகுதியாக இந்தியாவால் நிர்வகிக்கப்படும் ஒரு பிராந்தியமாகும். [1] இது அகன்ற காஷ்மீர் பிராந்தியத்தின் ஒரு பகுதியாகும். மேலும் 1947 முதல் இந்தியா, பாக்கித்தான், சீனா இடையே சர்ச்சைக்கு ஆளான பகுதியாகும். [2] [3] லடாக்கின் கிழக்கே திபெத் தன்னாட்சிப் பகுதி, தெற்கே இந்திய மாநிலமான இமாச்சலப் பிரதேசம் மற்றும் இந்திய ஒன்றிய ஆட்சிப் பகுதியான ஜம்மு காஷ்மீர், மேற்கில், பாக்கிதானால் நிர்வகிக்கப்படும் வடக்கு நிலங்கள், வடக்கே காரகோரம் கணவாய்க்கு குறுக்கே சிஞ்சியாங் தென்மேற்கு மூலை போன்றவை எல்லைகளாக உள்ளன. இது வடக்கே காரகோரம் மலைத்தொடரில் உள்ள சியாச்சின் பனியாறிலிருந்து தெற்கே பிரதான பெரிய இமயமலை வரை நீண்டுள்ளது. மக்கள் வசிக்காத அக்சாய் சின் சமவெளிகளைக் கொண்ட கிழக்கு முனை, லடாக்கின் ஒரு பகுதியாக இந்திய அரசாங்கத்தால் உரிமை கோரப்பட்டு, 1962 முதல் சீனக் கட்டுப்பாட்டில் உள்ளது. [11]
கடந்த காலத்தில் லடாக் முக்கியமான வணிகப் பாதைகளின் நடுவில் முக்கியமான இடத்தில் இருந்து முக்கியத்துவம் பெற்றதாக இருந்தது, [12] ஆனால் 1960 களில் சீன அதிகாரிகள் திபெத் தன்னாட்சி பிராந்தியத்திற்கும் லடாக்கிற்கும் இடையிலான எல்லைகளை மூடியதால், சர்வதேச வர்த்தகம் குறைந்தது. 1974 முதல், இந்திய அரசு லடாக்கில் சுற்றுலாவை ஊக்குவித்து வருகிறது. லடாக் கேந்திரிய முக்கியத்துவம் வாய்ந்தத இடமாக இருப்பதால், இந்திய ராணுவம் இப்பகுதியில் வலுவாக காலூன்றி உள்ளது.
லடாக்கின் மிகப்பெரிய நகரம் லே ஆகும், அதற்கடுத்து பெரிய நகரம் கார்கில் ஆகும். இவை ஒவ்வொன்றும் ஒரு மாவட்டத்துக்கு தலைமையிடமாக உள்ளன. [13] லே மாவட்டத்தில் சிந்து, சியோக், நுப்ரா ஆற்றுப் பள்ளத்தாக்குகள் உள்ளன. கார்கில் மாவட்டத்தில் சுரு, திராஸ், ஜான்ஸ்கர் ஆற்றுப் பள்ளத்தாக்குகள் உள்ளன. ஆற்றுப் பள்ளத்தாக்குகள் மக்கள்தொகை கொண்ட பகுதிகளாக உள்ளன.. மலைச் சரிவுகளில் மேய்ச்சல் தொழில் செய்யும் சாங்பா நாடோடிகள் வாழும் பகுதியாக உள்ளது. இப்பகுதியில் உள்ள முக்கிய சமயக் குழுக்களில் முசுலிம்கள் (முக்கியமாக சியா ) (46%), பௌத்தர்கள் (முக்கியமாக திபெத்திய பௌத்தர்கள் ) (40%), இந்துக்கள் (12%), பிறர் (2%) உள்ளனர். [14] லடாக் இந்தியாவில் மிகக் குறைந்த மக்கள்தொகை கொண்ட பகுதிகளில் ஒன்றாகும். இதன் கலாச்சாரம் மற்றும் வரலாறு திபெத்தின் கலாச்சாரத்துடன் நெருங்கிய தொடர்புடையது.
ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, 31 அக்டோபர் 2019 அன்று லடாக் இந்தியாவின் ஒன்றிய ஆட்சிப் பகுதியாக நிறுவப்பட்டது. அதற்கு முன், இது சம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. லடாக் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் இரண்டாவது குறைந்த மக்கள் தொகை கொண்ட ஒன்றிய ஆட்சிப் பகுதி ஆகும். [15]
வரலாறு
[தொகு]பண்டைய வரலாறு
[தொகு]லடாக்கின் பல பகுதிகளில் காணப்படும் பாறைச் சிற்பங்கள் புதிய கற்காலத்திலிருந்து இப்பகுதியில் மக்கள் வாழ்ந்ததாற்கான சான்றாக உள்ளன. [16] லடாக்கின் ஆரம்பகால மக்கள் கம்பா என அழைக்கப்படும் நாடோடிகளாவர். [17] குலுவைச் சேர்ந்த மோன்ஸ் மற்றும் கில்கித்தில் தோன்றிய பிரோக்பாஸ் ஆகியோரால் பின்னர் குடியேற்றங்கள் நிறுவப்பட்டன. [18] முதல் நூற்றாண்டில், லடாக் குசானப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது. 2ஆம் நூற்றாண்டில் காஷ்மீரில் இருந்து மேற்கு லடாக்கிற்கு பௌத்தம் பரவியது. 7 ஆம் நூற்றாண்டின் பௌத்த பயணியான சுவான்சாங் தனது குறிப்புகளில் இப்பகுதியை விவரித்துள்ளார். சுவான்சாங்கின் லடாக்கை மோ-லோ-சோ என்ற சொல்லால் குறிப்பிடுகிறார். இது கல்வியாளர்களால் *மலாசா, *மராசா அல்லது *மராசா என மீளுருவாக்கம் செய்யப்பட்டது. இது இப்பகுதியின் அசல் பெயராக நம்பப்படுகிறது. [19] [20]
முதல் ஆயிரமாண்டின் பெரும்பகுதியில், மேற்கு திபெத்தின் போன் பௌத்த சமயதத்தை கடைப்பிடித்த சாங்சூங் இராச்சியங்கள் இப்பகுதியை உள்ளடக்கியதாக இருந்தது. காஷ்மீர் மற்றும் சாங்சூங்கிற்கு இடையில் உள்ள லடாக் இந்த இரு சக்திகளில் ஒன்றின் கட்டுப்பாட்டில் இருந்ததாக நம்பப்படுகிறது. "மேல் லடாக்கில்" (சிந்து சமவெளியின் நடுப்பகுதியிலிருந்து தென்கிழக்கு வரை) சாங்சுங் மொழி மற்றும் கலாச்சாரத்தின் வலுவான தாக்கங்களை கல்வியாளர்கள் கண்டறிந்துள்ளனர். [21] சாங்சுங்கின் இறுதி மன்னர் லடாக்கைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. [22]
எட்டாம் நூற்றாண்டில் கிழக்கிலிருந்து உருவான திபெத்திய விரிவாக்கத்திற்கும், மத்திய ஆசியாவிலிருந்து உருவான சீன ஆதிக்க முயற்சிக்கும் இடையேயான பிரச்சினையில் லடாக் சிக்கிக்கொண்டது. இந்தியாவின் கார்கோடப் பேரரசு மற்றும் உமையா கலிபாவும் விரைவில் லடாக்கிற்கான போட்டியில் இணைந்தன. இந்த போராட்டங்களின் மையமாக பால்டிஸ்தான் மற்றும் லடாக் இருந்தது. இந்த நேரத்தில் லடாக் அதன் முதன்மை விசுவாசத்தை திபெத்தின்மீது கொண்டிருக்கலாம். ஆனால் அது கலாச்சாரத்தை விட அரசியல் சார்ந்ததாக இருந்தது என்று கல்வியாளர்கள் ஊகிக்கிறார்கள். [23]
ஆரம்பகால இடைக்கால வரலாறு
[தொகு]9 ஆம் நூற்றாண்டில், திபெத்தின் ஆட்சியாளர் லாங்தர்மா படுகொலை செய்யப்பட்டார். இதன் பின்னர் திபெத் துண்டு துண்டானது. லாங்தர்மாவின் கொள்ளுப் பேரன் கைடே நைமகோன் மேற்கு திபெத்துக்கு தப்பி ஓடினார்.
நைமகோனின் மூத்த மகன், லாச்சென் பால்கிகோன், லடாக் மற்றும் ருடோக் உள்ளிட்ட வடக்கே உள்ள பகுதிகளை கைப்பற்றியதாக நம்பப்படுகிறது. நைமகோனின் மரணத்திற்குப் பிறகு, அவரது இராச்சியம் அவரது மூன்று மகன்களிடையே பிரிக்கப்பட்டது. முதல் மகன் பால்கிகோன் லடாக், ருடோக், தோக் ஜலுங், டெம்சோக் கார்போ (இன்றைய டெம்சோக் கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு புனித மலை) என்று குறிப்பிடப்படும் பகுதி போன்றவற்றைப் பெற்றார். இரண்டாவது மகன் குகே-புரங்கை பெற்றார். மூன்றாவது மகன் சன்ஸ்கார் மற்றும் ஸ்பிதி (லடாக்கின் தென்மேற்கில்) ஆகியவற்றைப் பெற்றார். நைமகோனின் பேரரசின் இந்த மூன்று-வழிப் பிரிவுகள் வரலாற்று ரீதியாக அங்கீகரிக்கப்பட்டன. மேலும் மூன்று பிராந்தியங்களின் ஸ்தாபகக் கதையாக இது நினைவுகூரப்படுகிறது.
பால்கிகோனால் நிறுவப்பட்ட மேரியூலின் முதல் மேற்கு திபெத்திய வம்சம் ஐந்து நூற்றாண்டுகள் நீடித்தது, மங்கோலிய/முகலாய பிரபு மிர்சா ஹைதர் துக்லட்டின் வெற்றிகளால் இது முடிவில் பலவீனமடைந்தது. இந்த காலகட்டம் முழுவதும், இப்பகுதி "மர்யுல்" என்று அழைக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து காஷ்மீர் மற்றும் ஜான்ஸ்கர் வழியாக திபெத்துக்கு புத்த மதத்தின் இரண்டாவது பரவலின் பாதையாக இது இருந்ததால், இந்த காலகட்டத்தில் மரியுல் உறுதியான பௌத்த நாடாக இருந்தது.
-
அல்ச்சி மடாலயத்தில் சித்தரிக்கப்பட்ட, லடாக் குதிரை வீரர்கள், சுமார் கிபி 13 ஆம் நூற்றாண்டு
-
திக்சி மடாலயத்தில் உள்ள ஒன்பது தூபிகள்
-
லே மாவட்டத்தில் உள்ள லிகிர் மடாலயத்தில் மைத்ரேயரின் சிலை
இடைக்கால வரலாறு
[தொகு]1380 கள் மற்றும் 1510 களின் இடையில், பல இஸ்லாமிய சமய பரப்புநர்கள் இசுலாத்தை பரப்புரை செய்து லடாக்கி மக்களை சமயம மாற்றம் செய்தனர். சயீத் அலி அமதானி, சயீத் முகம்மது நூர் பக்ஷ், மிர் சம்சுதீன் ஈராக்கி ஆகிய மூன்று முக்கிய சூஃபி ஞானிகள் இசுலாமிய சமயத்தை உள்ளூர் மக்களிடையே பரப்பினர். லடாக்கில் முதன்முதலில் மக்களை முசுலீம்களாக மதம் மாற்றியவர் மிர் சயீத் அலி ஆவார். இவர் லடாக்கில் இசுலாத்தின் நிறுவனர் என்று அழைக்கப்படுகிறார். இந்த காலகட்டத்தில் லடாக்கில் முல்பே, படும், லடாக்கின் தலைநகரான ஷே உட்பட பல இடங்களில் பள்ளிவாசல்கள் கட்டப்பட்டன. [25] [26] அவரது முதன்மை சீடர் சயீத் முகம்மது நூர் பக்சும் இசுலாத்தை லடாக்கியர்களிடம் பரப்பினார். இதனால் பால்டி மக்கள் விரைவாக இசுலாத்திற்கு மாறினார்கள். இந்த பிரிவினர் நூர்பட்சியா இசுலாம் என அழைக்கப்படுகின்றனர் மேலும் அவரைப் பின்பற்றுபவர்கள் பால்டிஸ்தான் மற்றும் லடாக்கில் மட்டுமே காணப்படுகின்றனர். 1505 ஆம் ஆண்டில், ஷம்சுதீன் ஈராக்கி என்ற ஒரு குறிப்பிடத்தக்க சியா இசுலாமிய அறிஞர், காசுமீர் மற்றும் பால்டிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டார். அவர் காசுமீரில் சியா இசுலாத்தை பரப்பினார். பல்திஸ்தானில் உள்ள பெரும்பான்மையான முசுலிம்களை தனது சிந்தனைப் பள்ளிக்குள்ளவர்களாக ஆக்கினார். [26]
இந்த காலத்திற்குப் பிறகு இசுலாம் என்ன ஆனது என்பது தெளிவாகத் தெரியவில்லை. அது சற்று பின்னடைவைச் சந்தித்ததாகத் தெரிகிறது. 1532, 1545 மற்றும் 1548 இல் லடாக்கை ஆக்கிரமித்து கொஞ்சகாலம் கைப்பற்றி வைத்திருந்த மிர்சா முகம்மது ஐதர் துக்லத், தனது படையெடுப்பின் போது லேயில் இசுலாம் இருப்பதை பதிவு செய்யவில்லை. இருப்பினும் சியா இஸ்லாம் மற்றும் நூர்பக்ஷியா இஸ்லாம் லடாக்கின் பிற பகுதிகளில் தொடர்ந்து செழித்து வளர்ந்தன. [25] [26]
மன்னர் பாகன் லடாக்கை மீண்டும் ஒன்றிணைத்து பலப்படுத்தினார். மேலும் நாம்கால் வம்சத்தை நிறுவினார் ( நம்கால் என்பது பல திபெத்திய மொழிகளில் "வெற்றி" என்று பொருள்). நம்கியால்கள் பெரும்பாலான மத்திய ஆசிய ஆக்கிரமிப்பாளர்களை விரட்டியடித்தனர். மேலும் இராசியத்தை தற்காலிகமாக நேபாளம் வரை விரிவுபடுத்தினர். [16] ராஜா அலி ஷெர்கான் அஞ்சன் தலைமையிலான பால்டி படையெடுப்பின் போது, பல புத்த கோவில்கள் மற்றும் கலைப்பொருட்கள் சேதப்படுத்தப்பட்டன. அலி ஷேர் கான் அரசரையும் அவரது வீரர்களையும் சிறைபிடித்தார். அலி ஷேர் கானால் பின்னர் ஜம்யாங் நம்கியால் மீண்டும் அரியணையில் அமர்த்தப்பட்டு, ஒரு முஸ்லீம் இளவரசி திருமணம் செய்து வைக்கபட்டார். அவள் பெயர் கியால் கட்டூன் அல்லது அர்க்யால் கட்டூம். அவரே முதல் ராணியாகவும், அவளது மகனே அடுத்த ஆட்சியாளராகவும் இருக்க வேண்டும். அவளுடைய தந்தை யார் என்பதில் வரலாற்றுக் தகவல்கள் வேறுபடுகின்றன. சிலர் அலியின் நட்பு நாடுகளையும், கப்லு யாப்கோ ஷே கிலாசியின் ராஜாவையும் அவரது தந்தையாக அடையாளப்படுத்துகிறனர், மற்றவர்கள் அலியை தந்தையாக அடையாளப்படுத்துகின்றனர். [27] [28] [29] [30] [31] [32] 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஜம்யாங் மற்றும் கியாலின் மகனான செங்கே நம்கியால் அழிக்கப்பட்ட கலைப்பொருட்கள் மற்றும் கோன்பாக்களை மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவர் தன் இராச்சியத்தை சாங்ஸ்கார் மற்றும் ஸ்பிதி என விரிவுபடுத்தினார். ஏற்கனவே காஷ்மீர் மற்றும் பால்டிஸ்தானை தங்கள் பேரரசுடன் இணைத்துக் கொண்ட முகலாயர்களால் லடாக் தோற்கடிக்கப்பட்ட போதிலும். லடாக் தன் சுதந்திரத்தை தக்க வைத்துக் கொண்டது.
17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பால்டி படையெடுப்பு மற்றும் கியாலை ஜாம்யாங் திருமணம் செய்த பின்னர் இஸ்லாம் லே பகுதியில் வேரூன்றத் தொடங்குகிறது. முசுலீம் ஊழியர்கள் மற்றும் இசைக்கலைஞர்களின் ஒரு பெரிய குழு கியாலுடன் லடாக்கிற்கு அனுப்பப்பட்டது. மேலும் அவர்கள் தொழுகை மேற்கொள்ள தனியார் பள்ளிவாசல்கள் கட்டப்பட்டன. முஸ்லீம் இசைக்கலைஞர்கள் பின்னர் லேவில் குடியேறினர். பல நூறு பால்டியர்கள் இராச்சியத்திற்கு குடிபெயர்ந்தனர். மேலும் வாய்வழி பாரம்பரியத்தின் படி பல முஸ்லீம் வர்த்தகர்களுக்கு குடியேற நிலங்கள் வழங்கப்பட்டன. பல்வேறு நோக்கங்களுக்காக அடுத்தடுத்த ஆண்டுகளில் பல முஸ்லிம்கள் அழைக்கப்பட்டனர். [33]
17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், லடாக் திபெத்துடனான பூட்டானுக்கு இருந்த மோதலில் பூட்டானுக்கு ஆதரவாக இருந்தது. இதுபோன்ற காரணங்களுக்கிடையில் திபெத்திய மத்திய அரசின் படையெடுப்பிற்கு வழிவகுத்தது. இந்த நிகழ்வு 1679-1684 திபெத்-லடாக்-முகலாய போர் என்று அழைக்கப்படுகிறது. [34] இதற்குப் பிறகு முகலாயப் பேரரசின் உதவிக்கு ஈடாக மன்னர் இசுலாத்தைத் தழுவினார் என்று காசுமீர் வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். இருப்பினும், லடாக்கி குறிப்புகளில் அத்தகைய தகவல் குறிப்பிடவில்லை. இராச்சியத்தைக் காத்ததற்காக முகலாயர்களுக்குக் கப்பம் செலுத்த மன்னர் ஒப்புக்கொண்டார். [35] [36] சுங்கர் பேரரசின் கான், கால்டன் போசுக்து கானின் துணைப்படைகளின் உதவியுடன், திபெத்தியர்கள் 1684 இல் மீண்டும் தாக்கினர். திபெத்தியர்கள் வெற்றிபெற்று லடாக்குடன் ஒரு ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டனர். பின்னர் அவர்கள் 1684 திசம்பரில் லாசாவிற்கு பின்வாங்கினர். 1684 இல் டிங்மோஸ்காங் உடன்படிக்கை திபெத்துக்கும் லடாக்கிற்கும் இடையிலான சர்ச்சையக்கு முடிவுகட்டியது. ஆனால் அது லடாக்கின் சுதந்திரத்தை கடுமையாகக் கட்டுப்படுத்தியது.
-
லிகிர் மடாலயம், லடாக்
-
பியாங் கோம்பா, லடாக்
-
1870 களில் ஹெமிஸ் மடாலயம்
ஜம்மு காஷ்மீர் சமஸ்தானம்
[தொகு]1834 ஆம் ஆண்டில், ஜம்முவின் மன்னனர் குலாப் சிங்கின் தளபதியான சீக்கியரான ஜோராவர் சிங், சீக்கியப் பேரரசின் மேலாதிக்கத்தின் கீழ் லடாக் மீது படையெடுத்து அதை ஜம்முவுடன் இணைத்தார். முதல் ஆங்கிலோ-சீக்கியப் போரில் சீக்கியர்கள் தோற்கடிக்கப்பட்ட பிறகு, ஜம்மு காஷ்மீர் இராச்சியம் பிரித்தானிய மேலாதிக்கத்தின் கீழ் ஒரு தனி சமஸ்தானமாக நிறுவப்பட்டது. லடாக் மன்னர் நம்க்யால் குடும்பத்திற்கு ஸ்டோக்கின் சாகிர் வழங்கப்பட்டது. அது இன்றுவரை பெயரளவில் தக்கவைக்கப்பட்டுள்ளது. 1850களில் தொடங்கி லடாக்கில் ஐரோப்பிய செல்வாக்கு அதிகரித்தது. புவியியலாளர்கள், விளையாட்டு வீரர்கள், சுற்றுலாப் பயணிகள் போன்றோர் லடாக்கை ஆராயத் தொடங்கினர்.
லடாக் திபெத்தின் ஒரு பகுதி என்று திபெத்திய கம்யூனிஸ்ட் தலைவரான ஃபன்ட்சோக் வாங்யால் உரிமை கோரினார். [37]
இந்தியாவின் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம்
[தொகு]1947 இல் இந்தியப் பிரிப்பு நடந்த நேரத்தில், டோக்ரா ஆட்சியாளர் மகாராஜா ஹரி சிங், இந்தியாவுடனான இணைப்புக் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். கில்கிட்டில் இருந்து வந்த பாக்கித்தான் முரடர்கள் லடாக்கை அடைந்து ஆக்கிரமிக்க முயன்ற நிலையில், அவர்களை வெளியேற்ற இராணுவ நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. திராஸ், கார்கில், லே ஆகியவை இந்திய இரிணுவத்தால் விடுவிக்கப்பட்டன. மேலும் லடாக் ஊடுருவல்காரர்களிடமிருந்து விடுவிக்கப்பட்டது. [38]
1949 ஆம் ஆண்டில், சீனா நூப்ரா மற்றும் சிஞ்சியாங் இடையேயான எல்லையை மூடி, பழைய வணிகப் பாதையை தடுத்தது. 1955 ஆம் ஆண்டு அக்சாய் சின் பகுதி வழியாக சின்ஜியாங் மற்றும் திபெத்தை இணைக்கும் சாலைகளை சீனா அமைக்கத் தொடங்கியது. அக்சாய் சின் கட்டுப்பாட்டை தக்கவைத்துக் கொள்ள இந்தியா மேற்கொண்ட முயற்சியானது 1962 ஆம் ஆண்டு சீன-இந்திய போருக்கு வழிவகுத்தது. இருந்தாலும் அதை இந்தியா இழந்தது. சீனாவும் பாகிஸ்தானுடன் இணைந்து காரகோரம் நெடுஞ்சாலையை அமைத்தன. இந்த காலகட்டத்தில் இந்தியா ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலையை உருவாக்கியது. இது ஸ்ரீநகர் மற்றும் லே இடையேயான பயண நேரத்தை 16 நாட்களில் இருந்து இரண்டு நாளாக குறைத்தது. இருப்பினும், பனிப்பொழிவு காரணமாக குளிர்காலத்தின் மாதங்களில் இந்த பாதை மூடப்பட்டிருக்கும். சோஜி லா கணவாய்க்கு குறுக்கே 6.5 கிமீ (4.0 மைல்) சுரங்கப்பாதை அமைப்பதற்கான திட்டம் பரிசீலனையில் உள்ளது. [16] [39]
1999 ஆம் ஆண்டுமேற்கு லடாக்கின் கார்கில், திராஸ், முஷ்கோ, படலிக், சோர்பட்லா ஆகிய பகுதிகளுக்குள் பாகிஸ்தான் துருப்புக்கள் ஊடுருவின. இதனால் கார்கில் போரானது, இந்திய இராணுவத்தால் "விஜய் நடவடிக்கை" என்ற குறியீட்டுப் பெயரில் மேற்கொள்ளபட்டது. பெருமளவு பீரங்கிகள் மற்றும் விமானப்படையின் ஆதரவுடன் இந்திய இராணுவத்தால் அந்த உயரமான பகுதிகளில் விரிவான தாக்குதல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டி வந்திருந்த பாகிஸ்தான் துருப்புக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டன. [40]
லடாக் பகுதி 1979 இல் கார்கில் மற்றும் லே மாவட்டங்கள் என இரண்டாக பிரிக்கப்பட்டது. 1989 இல், பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் வன்முறைக் கலவரம் ஏற்பட்டது. காஷ்மீரிகள் அரசியல் ஆதிக்கம் செலுத்தும் மாநில அரசாங்கத்திடம் தன்னாட்சி கோரிக்கை எழுப்பபட்டதைத் தொடர்ந்து, லடாக் தன்னாட்சி மலை வளர்ச்சிக் குழு 1990 களில் உருவாக்கப்பட்டது. லே மற்றும் கார்கில் மாவட்டங்கள் ஒவ்வொன்றும் உள்ளூரில் தேர்ந்தெடுக்கப்பட்ட மலைக் கவுன்சில்களைக் கொண்டுள்ளன, அவை உள்ளூர் கொள்கை முடிவுகள் மற்றும் மேம்பாட்டு நிதிகள் போன்றவற்றில் சில கட்டுப்பாட்டுகள் கொண்டவையாக உள்ளன.
லடாக்கில் இந்திய ராணுவம் மற்றும் இந்திய - திபெத் எல்லைக் காவல்படைகள் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தன. 1962 சீன-இந்தியப் போருக்குப் பிறகு இந்தப் படைகளும், சீனாவின் மக்கள் விடுதலைப் இராணுவமும், உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டின் லடாக் பகுதியில் அடிக்கடி உரசல்கள் ஏற்படுகின்றன. லடாக்கில் உள்ள 857-கிலோமீட்டர் நீளமுள்ள (533 மைல்) எல்லையில், 368 கிமீ (229 மைல்) மட்டுமே சர்வதேச எல்லையாகும், மீதமுள்ள 489 கிமீ (304 மைல்) உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு ஆகும்.
லடாக் கோட்டம்
[தொகு]8 பிப்ரவரி 2019 அன்று, லடாக்கானது ஜம்மு மற்றும் காஷ்மீருக்குள் ஒரு தனி வருவாய் மற்றும் நிர்வாக்க் கோட்டமாக மாறியது. முன்பு இது காஷ்மீர் கோட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. ஒரு தனிக் கோட்டமாக லடாக்கிற்கு தனி கோட்ட ஆணையர் மற்றும் காவல்துறைத் தலைவர் நியமிக்கபட்டனர். [41]
தொடக்கத்தில் புதிய கோட்டத்தின் தலைமையகமாக லே தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால் அதற்கு எதிர்ப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, லே மற்றும் கார்கில் இணைந்து கோட்டத் தலைமையகமாக செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது, ஒவ்வொன்றும் கோட்ட ஆணையர் மற்றும் காவல்துறைத் தலைவருக்கு உதவியாக ஒரு கூடுதல் கோட்ட ஆணையர், கூடுதல் கால்துறைத் தலைவர் ஆகியவர்களைக் கொண்டிருக்கும். கோட்ட ஆணையர் மற்றும் காவல்துறைத் தலைவர் ஆகியோர் ஒவ்வொரு ஊரிலும் பாதி நேரத்தை செலவிடுவர். [42]
லடாக் ஒன்றிய ஆட்சிப் பகுதி
[தொகு]லடாக் மக்கள் 1930 களில் இருந்து லடாக்கை ஒரு தனி பிரதேசமாக ஆக்கவேண்டும் என்று கோரி வந்தனர். ஏனெனில் காஷ்மீர் மற்றும் லடாக்கிற்கு இடையேயான கலாச்சார வேறுபாடுகள் இருந்தது வரும் நிலையில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் காஷ்மீர் பள்ளத்தாக்கின் அதிகாரமே அரசியலில் ஆதிக்கம் செய்துவந்தது. லடாக்கிற்கு ஒன்றிய பிரதேச அந்தஸ்து வழங்குவதை கார்கில் எதிர்ப்பவர்கள் சிலரும் இருந்தனர். [43] காஷ்மீரின் "ஆதிக்கத்திற்கு" எதிராக 1964 ஆம் ஆண்டு முதல் ஒழுங்கமைக்கப்பட்ட போராட்டம் தொடங்கப்பட்டது. 1980களின் பிற்பகுதியில், யூனியன் பிரதேச அந்தஸ்துக்கான கோரிக்கையை வலியுறுத்தி மிகப் பெரிய வெகுஜனப் போராட்டம் தொடங்கப்பட்டது.
2019 ஆகத்தில், இந்திய நாடாளுமன்றத்தில் மறுசீரமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதில் லடாக்கை ஒரு ஒன்றிய ஆட்சிப் பிரதேசமாக ஆக்குவதற்காக 2019 ஆக்டோபர் 31 அன்று ஜம்மு மற்றும் காஷ்மீரின் மற்ற பகுதிகளிலிருந்து லடாக் பிரிக்கப்பட்டது. [44] [45] சட்டத்தின் விதிமுறைகளின்படி, ஒன்றிய ஆட்சிப் பிரதேசமானது இந்திய ஒன்றிய அரசின் சார்பாக செயல்படும் ஒரு துணைநிலை ஆளுநரால் நிர்வகிக்கப்படுகிறது. மேலும் இங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் அல்லது முதலமைச்சர் என யாவரும் இல்லை. ஒன்றிய ஆட்சிப் பகுதியில் உள்ள ஒவ்வொரு மாவட்டமும் முன்பு கொண்டிருந்ததைப் போல் ஒரு தன்னாட்சி மாவட்ட கவுன்சிலை தொடர்ந்து தேர்ந்தெடுத்து வருகிறது.
லடாக்கை தனி ஒன்றிய ஆட்சிப் பகுதியாக ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை முதன்முதலில் நாடாளுமன்ற உறுப்பினர் குஷோக் பகுலா ரின்போச்சேவால் 1955 இல் எழுப்பப்பட்டது. பின்னர் அது மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான துப்ஸ்டன் செவாங்காலும் முன்வைக்கப்பட்டது . [46] முன்னாள் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் லடாக் பெரிய புவியியல் பகுதியாக (மொத்த நிலப்பரப்பில் 65% கொண்டது) இருந்தது. ஆனால் லடாக்கிற்கு மாநில நிதிநிலையில் மக்கள் தொகை அடிப்படையில் 2% மட்டுமே ஒதுக்கப்பட்டது. [46] லடாக் தனி ஒன்றிய ஆட்சிப் பகுதியாக உருவான முதல் ஆண்டில், அதன் ஆண்டு பட்ஜெட் ஒதுக்கீடு ₹ 57 கோடியிலிருந்து ₹ 232 கோடியாக 4 மடங்கு அதிகரித்தது. [46]
நிலவியல்
[தொகு]லடாக் இந்தியாவின் மிக உயரமான பீடபூமியாகும், இதில் பெரும்பாலானவை 3,000 3,000 மீ (9,800 அடி) மேல் உள்ளன. இது இமயமலையில் இருந்து குன்லூன் [47] மலைத்தொடர்கள் வரை நீண்டுள்ளது மற்றும் மேல் சிந்து நதி பள்ளத்தாக்கை உள்ளடக்கியது.
வரலாற்று ரீதியாக, இப்பகுதியில் பல்திஸ்தான் ( பால்டியுல் ) பள்ளத்தாக்குகள் (இப்போது காஷ்மீரின் பாக்கித்தானின் நிர்வாகப் பகுதி), முழு மேல் சிந்து பள்ளத்தாக்கு, தொலைதூர சான்ஸ்கார், தெற்கே உள்ள லாஹௌல் மற்றும் ஸ்பிதி, கிழக்கில் ருடோக் பகுதி மற்றும் குகே உட்பட நகாரியின் பெரும்பகுதி, வடகிழக்கில் அக்சாய் சின், மற்றும் லடாக் மலைத்தொடரில் கர்தோங் லா தாண்டி வடக்கே நுப்ரா பள்ளத்தாக்கு இடம்பெற்றன. சமகால லடாக் கிழக்கில் திபெத், தெற்கே லாஹவுல் மற்றும் ஸ்பிட்டி பகுதிகள், மேற்கில் காஷ்மீர் பள்ளத்தாக்கு, ஜம்மு மற்றும் பால்டியுல் பகுதிகள், மற்றும் வடக்கே காரகோரம் கணவாய் வழியாக ஜின்ஜியாங்கின் தென்மேற்கு மூலை எல்லையாக உள்ளது. இப்போது பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள பால்டிஸ்தான், பிரிவினைக்கு முன்,லடாக்கில் ஒரு மாவட்டமாக இருந்தது. லடாக்கின் குளிர்கால தலைநகராக ஸ்கார்டு இருந்தது, கோடைகால தலைநகராக லே இருந்தது.
இப்பகுதியில் உள்ள மலைத்தொடர்கள் 45 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியப் புவித்தட்டு மிகவும் நிலையான யூரேசியப் புவித்தட்டுக்குள் மடிந்து உருவானது. இதன் உசரல் தொடர்வதால், இமயமலைப் பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. [b] [48]
சுரு மற்றும் சன்ஸ்கர் பள்ளத்தாக்குகள் இமயமலை மற்றும் சான்ஸ்கார் மலைத்தொடரால் சூழப்பட்டு உருவான ஒரு பெரிய பள்ளத்தாக்காக உள்ளன. சுரு பள்ளத்தாக்கின் மிக உயரமான மக்கள் வசிக்கும் பகுதி ரங்டம் ஆகும், அதன் பிறகு பள்ளத்தாக்கு பென்சி-லாவில் 4,400 மீ (14,400 அடி) வரை உயர்கிறது. சுரு பள்ளத்தாக்கில் உள்ள ஒரே நகரமான கார்கில், லடாக்கின் இரண்டாவது மிக முக்கியமான நகரமாகும். சிறிநகர், லே, ஸ்கார்டு, படும் ஆகியவற்றிலிருந்து சுமார் 230 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இது, 1947 க்கு முன், வர்த்தக பயணக்கூட்டங்களின் வழித்தடங்களில் இது ஒரு முக்கியமான இடமாக இருந்தது. ஜாங்ஸ்கர் பள்ளத்தாக்கு ஸ்டாட் மற்றும் லுங்னாக் ஆறுகளின் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இப்பகுதி கடுமையான பனிப்பொழிவு உள்ள பகுதியாகும். இதனால் பென்சிலா சூன் பாதைகள் மற்றும் அக்டோபர் நடுப்பகுதியில் மட்டுமே திறந்திருக்கும். திராஸ் மற்றும் முஷ்கோ பள்ளத்தாக்கு ஆகியவை லடாக்கின் மேற்கு முனையாக உள்ளன.
சிந்து ஆறு லடாக்கின் முதுகெலும்பாக உள்ளது. லாடாக்கில் உள்ள பெரும்பாலான முக்கிய வரலாற்று மற்றும் தற்போதைய நகரங்களான ஷே, லே, பாஸ்கோ, திங்மோஸ்காங் ஆகியவை சிந்து ஆற்றுக்கு அருகில் உள்ளன. இந்து சமயம் மற்றும் கலாச்சாரத்தில் பெரிதும் போற்றப்படும் ஆறான சிந்து இந்தியாவில் லடாக் வழியாக பாய்ம ஆறாக 1947 ஆண்டைய இந்திய-பாகிஸ்தான் போருக்குப் பிறகு தக்கவைக்கபட்டது.
சியாச்சின் பனியாறு, சர்ச்சைக்குரிய இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இமயமலையில் கிழக்கு காரகோரம் மலைத்தொடரில் உள்ளது. இது காரகோரம் மலைத்தொடர் ஒரு பெரிய நீர்நிலையாக உள்ளது. இது சீனாவை இந்திய துணைக்கண்டத்திலிருந்து பிரிக்கிறது. மேலும் இது சில நேரங்களில் "மூன்றாம் துருவம்" என்று அழைக்கப்படுகிறது. மேற்கில் சால்டோரோ ரிட்ஜ் மற்றும் கிழக்கே பிரதான காரகோரம் மலைத்தொடருக்கு இடையே பனியாறு அமைந்துள்ளது. 76 கிமீ (47 மைல்) நீளம் கொண்ட, இது காரகோரத்தில் உள்ள மிக நீளமான பனியாறு மற்றும் உலகின் துருவமற்ற பகுதிகளில் இரண்டாவது மிக நீளமானது ஆகும். சசர் காங்ரி என்பது இந்தியாவின் காரகோரம் மலைத்தொடரின் கிழக்குப் பகுதியான சசர் முஸ்தாக்கில் உள்ள மிக உயரமான சிகரமாகும், இது 7,672 உயரத்தில் உள்ளது.
லடாக் மலைத்தொடரில் பெரிய சிகரங்கள் இல்லை; அதன் சராசரி உயரம் 6,000 மீ (20,000 அடி) க்கும் சற்று குறைவாகவே உள்ளது. இதில் உள்ள சில கணவாய்கள் 5,000 (16,000 அடி) க்கும் குறைவான உயரத்தில் உள்ளன.
லடாக் ஒரு உயரமான பாலைவனமாகும், ஏனெனில் இமயமலையின் ஒரு மழை மறைவுப் பிரதேசமாக இது உள்ளது. இதனால இங்கு பொதுவாக பருவமழை மேகங்கள் நுழைவதில்லை. இங்கு நீரின் முக்கிய ஆதாரமாக மலைகளில் பொழியும் குளிர்கால பனிப்பொழிவே உள்ளது. இப்பகுதியில் அண்மைய வெள்ளம் (எ.கா., 2010 வெள்ளம் ) அசாதாரண மழை மற்றும் உருகும் பனிப்பாறைகள் ஆகியவையே காரணம். இவை இரண்டும் உலகளாவிய காலநிலை மாற்றத்துடன் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இமயமலையின் வடக்குப் பகுதியில் உள்ள பகுதிகளான - திராஸ், சுரு பள்ளத்தாக்கு மற்றும் ஜாங்ஸ்கர் - கடுமையான பனிப்பொழிவை கொண்டுள்ளன. இதனால் ஆண்டில் பல மாதங்கள் மற்ற பகுதிகளிலிருந்து சென்றுவர இயலாதவாறு துண்டிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் முழு பகுதியும் நாட்டின் மற்ற பகுதிகளிலிருந்து வரும் சாலைகள் பனிபொழிந்து துண்டிக்கப்பட்டுள்ளது. கோடைக் காலம் குறுகியது, இருப்பினும் அவை பயிர்களை விளைவிக்க போதுமானதாக இருக்கும். கோடை காலநிலை வறண்டதாகவும், இனிமையானதாகவும் இருக்கும். கோடையில் வெப்பநிலை 3 முதல் 35 °C (37 முதல் 95 °F) வரையிலும், குளிர்காலத்தில் −20 முதல் -35 °C (−4 முதல் -31 °F) வரையிலும் இருக்கும். [49]
சன்ஸ்கரும் அதன் துணை ஆறுகளும் இப்பகுதியின் முக்கிய ஆறுகளாகும். குளிர்காலத்தில் ஜான்ஸ்கர் உறைந்துவிடும். மேலும் புகழ்பெற்ற சதர் மலையேற்றம் இந்த அற்புதமான உறைந்த நதியில் நடைபெறுகிறது.
தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள்
[தொகு]நீரோடைகள், ஈரநிலங்கள், நீர்ப்பாசனப் பகுதிகள் தவிர லடாக்கில் தாவரங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. லடாக்கில் பயிர்கள் உட்பட சுமார் 1250 தாவர இனங்கள் பதிவாகியுள்ளன. கடல் மட்டத்திலிருந்து 6,150 மீட்டர் (20,180 அடி) உயரத்தில் வளரும் லடாகியெல்லா கிளிமேசி என்ற தாவரம் முதலில் இங்கு கண்டுபிடிக்கபட்டு விவரிக்கப்பட்டு இந்தப் பகுதியின் பெயராலேயே அதற்கு பெயரிடப்பட்டது. [50] இந்த பிராந்தியத்தின் வனவிலங்குகளை ஆய்வு செய்த முதல் ஐரோப்பியரான வில்லியம் மூர்கிராஃப்ட் 1820 இல் ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து ஆஸ்திரிய-செக் தொல்லுயிரியியலர் ஃபெர்டினாண்ட் ஸ்டோலிக்ஸ்கா, 1870 களில் இங்கு ஒரு ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டார். லடாக்கில் கியாகோ டிசோ போன்ற பல ஏரிகள் உள்ளன.
பரல் அல்லது நீல செம்மறி ஆடுகள் லடாக் பகுதியில் அதிக அளவில் காணப்படும் ஆடுகள் ஆகும், இருப்பினும் இது ஜாங்ஸ்கர் மற்றும் ஷாம் பகுதிகளின் சில பகுதிகளில் காணப்படவில்லை. ஏசியாடிக் காட்டாடு மிகவும் அழகான மலை ஆடுகள் ஆகும். இவை லடாக்கின் மேற்குப் பகுதியில் பரவியுள்ளன. இவை இந்த பிராந்தியத்தில் சுமார் 6000 என்ற எண்ணிக்கையில் காணப்படுகின்றன. இவை கரடுமுரடான பகுதிகளில் வாழும் குளம்பிகள் ஆகும். இவை அங்கு அச்சுறுத்தலுக்கு ஆளாகும்போது போது எளிதில் மலைச் சரிவுகளில் ஏறக்கூடியன. [51] லடாக்கி யூரியல் என்பது லடாக் மலைகளில் வசிக்கும் மற்றொரு தனித்துவமான மலை ஆடு ஆகும். இவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இவை லடாக்கில் 3000 உருப்படிகளுக்கு மேல் இல்லை. [52] யூரியல் லடாக்கை பிறப்பிடமாக கொண்டவை. இவை சிந்து மற்றும் ஷயோக் ஆகிய இரண்டு பெரிய ஆற்றுப் பள்ளத்தாக்குகளில் மட்டுமே பரவியுள்ளன. இந்த விலங்கு வேளாண் மக்களின் பயிர்களை சேதமாக்குவதாக கூறி பெரும்பாலும் விவசாயிகளால் துன்புறுத்தப்படுகின்றன. லே-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் வேட்டைக்காரர்கள் கண்மூடித்தனமான துப்பாக்கியால் சுட்டதால் கடந்த நூற்றாண்டில் அதன் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. திபெத்திய அர்காலி அல்லது நியான் என்பவை உலகின் மிகப்பெரிய காட்டு ஆடுகள் ஆகும். இவை 1.1 முதல் 1.2 மீட்டர்கள் (3.5 முதல் 4 அடி) வரை வளரக்கூடயவை. இவற்றின் கொம்புகள் 900–1,000 மிமீ (35–39 அங்குலம்) நீண்டுள்ளன. இவை திபெத்திய பீடபூமி மற்றும் அதன் விளிம்பு மலைகளில் 2.5 மில்லியன் சதுர கிமீ (0.97 மில்லியன் சதுர மைல்) பரப்பளவில் வாழ்கின்றன. இவை லடாக்கில் சுமார் 400 என்ற எண்ணிக்கையில் மட்டுமே உள்ளன. வேட்டையாடிகளிடமிருந்து தப்பிக்க, செங்குத்தான பாறைகளில் ஏறும் காட்டு ஆடுகளைப் போலல்லாமல், திறந்த மற்றும் உருளும் நிலப்பரப்பில் ஓட இந்த விலங்கு விரும்புகிறது. [53] இந்திய ஆங்கிலத்தில் chiru அல்லது Ladakhi tsos என அழைக்கப்படும் அழிந்து வரும் திபெத்திய இரலைகள் பாரம்பரியமாக அதன் கம்பளிக்காக வேட்டையாடப்படுகின்றதன. இதன் முடிகள் சிறந்த தரம் வாய்ந்த இயற்கை இழையாக உள்ளதாலும், குறைந்த எடை கொண்டவையாகவும், உடலுக்கு வெப்பம் தரக்கூடியவையாகவும், அந்தஸ்து குறியீடாக உள்ளதாலும் இவை மிதிப்பு வாய்ந்தவையாக உள்ளன. சிரு என்றும் அழைக்கப்படும் இந்த இரலையின் உரோமத்தை கையால் பிடுங்க வேண்டும். அதனால் விலங்கை கொன்று பின்னர் உரோமம் கைகளால் பிடுங்கப்படுகின்றன. உரோமங்கள் காஷ்மீருக்கு கடத்தப்பட்டு, காஷ்மீரி தொழிலாளர்களால் நேர்த்தியான சால்வைகளாக நெய்யப்படுகிறது. லடாக் திபெத்தின் எல்லையான கிழக்கு லடாக்கின் பரந்த மலைப்பகுதிகளில் வசிக்கும் திபெத்திய சிறுமான்களின் தாயகமாகவும் உள்ளது. [54]
கியாங், அல்லது திபெத்திய காட்டு கழுதை, சாங்தாங்கின் புல்வெளிகளில் பொதுவாக காணப்படுவன. இவை சுமார் 2,500 என்ற எண்ணிக்கையில் உள்ளன. இந்த விலங்குகள் சாங்தாங்கின் நாடோடிமக்களின் மேய்ச்சல் விலங்குகளுக்கு போட்டியாக உள்ளதாக குற்றம் சாட்டி அவற்றைத் தாக்கும் நிலை உள்ளது. [55] லடாக்கில் சுமார் 200 பனிச்சிறுத்தைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவை உலகளவில் சுமார் 7,000 உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக நடு லடாக்கில் உள்ள ஹெமிஸ் தேசியப் பூங்கா இந்த வேட்டையாடிகளுக்கு நல்ல வாழ்விடமாக உள்ளது. ஏனெனில் இங்கு அவற்றிற்கு இரைகள் உள்ளன. ஐரோவாசியச் சிவிங்கிப் பூனை, லடாக்கில் உள்ள சிறிய விலங்குகளை வேட்டையாடும் மற்றொரு அரிய பூனை இனம். இது பெரும்பாலும் நுப்ரா, சாங்தாங், ஜாங்ஸ்கர் ஆகிய இடங்களில் காணப்படுகிறது. [56] சற்றே வீட்டுப் பூனை போல தோற்றமளிக்கும் பல்லா பூனை, லடாக்கில் மிகவும் அரிதானது மேலும் இந்த இனத்தைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை. சில சமயங்களில் லடாக்கியர்களின் கால்நடைகளை வேட்டையாடும் திபெத்திய ஓநாய், வேட்டையாடிகளால் மிகவும் துன்புறுத்தப்படுகிறது. [57] சுரு பள்ளத்தாக்கு மற்றும் திராசைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சில பழுப்பு நிற கரடிகள் உள்ளன. திபெத்திய மணல் நரி இப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [58] சிறிய விலங்குகளில், மர்மோட்கள், முயல்கள் மற்றும் பல வகையான பிகா மற்றும் வோல் ஆகியவை பொதுவாக உள்ளன. [59]
தாவரங்கள்
[தொகு]மிகக் குறைந்த மழைப்பொழிவால் லடாக் ஒரு உயரமான பாலைவனமாக உள்ளது. இதன் பெரும்பாலான பகுதியில் மிகவும் அரிதான தாவரங்கள் உள்ளன. இயற்கையான தாவரங்கள் முக்கியமாக நீர்நிலைகள் மற்றும் அதிக பனி மற்றும் குளிர்ந்த கோடை வெப்பநிலையைப் பெறும் உயரமான பகுதிகளில் காணப்படுகின்றன. மனித குடியிருப்புகளில் உள்ள நீர்ப்பாசனம் காரணமாக செழிப்பான தாவரங்கள் வளர்க்கபடுகின்றன. [60] நீர்நிலைகளில் பொதுவாகக் காணப்படும் இயற்கைத் தாவரங்களில் கடற்பார்ன் ( Hippophae spp.), இளஞ்சிவப்பு அல்லது மஞ்சள் வகைகளின் காட்டு ரோஜாக்கள், தம்மரிக்ஸ்புளியமரம் ( Myricaria spp.), கரவே, ஸ்டிங்கிங் நெட்டில்ஸ், ஃபிசோக்லைனா ப்ரேல்டா மற்றும் பல்வேறு புற்கள் ஆகியவை அடங்கும். [61]
நிர்வாகம்
[தொகு]ஜம்மு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தின் விதிமுறைகளின் கீழ், லடாக் சட்டமன்றம் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் இல்லாமல் ஒன்றிய ஆட்சிப் பகுதியாக நிர்வகிக்கப்படுகிறது. அரசாங்கத்தின் தலைவர் இந்திய குடியரசு தலைவரால் நியமிக்கப்பட்ட துணைநிலை ஆளுநர் ஆவார். அவருக்கு நிர்வாகத்தில் இந்திய ஆட்சிப் பணி ஊழியர்கள் உதவியாக உள்ளனர். [63]
மாவட்டங்கள்
[தொகு]லடாக் இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது:
மாவட்டத்தின் பெயர் | தலைமையகம் | பரப்பு (km2) | மக்கள் தொகை 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு |
---|---|---|---|
கார்கில் மாவட்டம் | கார்கில் | 14,036 | 140,802 |
லே மாவட்டம் | லே | 45,110 | 133,487 |
மொத்தம் | 2 | 59,146 | 274,289 |
தன்னாட்சி மாவட்ட கவுன்சில்கள்
[தொகு]லடாக்கின் ஒவ்வொரு மாவட்டமும் ஒரு தன்னாட்சி மாவட்ட கவுன்சிலால் நிர்வகிக்கப்படுகிறன, அவை:
பொருளாதார மேம்பாடு, நலவாழ்வு, கல்வி, நில பயன்பாடு, வரிவிதிப்பு, உள்ளாட்சி நிர்வாகம் ஆகியவற்றில் முடிவுகளை எடுக்க இரண்டு தன்னாட்சி மாவட்ட கவுன்சில்கள் கிராம ஊராட்சிகளுடன் இணைந்து செயல்படுகின்றன. [64] ஜம்மு மற்றும் காஷ்மீர் அரசாங்கமானது சட்டம் ஒழுங்கு, நீதித்துறை அமைப்பு, தகவல் தொடர்பு, உயர்கல்வி ஆகியவற்றைக் கவனித்து வருகிறது.
31 அக்டோபர் 2019 [65] லடாக் யூனியன் பிரதேசம் உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து இரண்டு தன்னாட்சி மாவட்ட கவுன்சில்கள் தொடர்ந்து உள்ளன.
சட்ட அமலாக்கம் மற்றும் நீதி
[தொகு]லடாக் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. [66] லடாக் ஒன்றிய ஆட்சிப் பிரதேசமானது காவல்துறை தலைமை இயக்குனரின் தலைமையில் அது சொந்தமாக காவல்துறையைக் கொண்டுள்ளது. [67]
இந்திய நாடாளுமன்றத்தில் லடாக்
[தொகு]லடாக்கிலிருந்து ஒரு உறுப்பினர் (எம்பி) இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவையான மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார். தற்போதைய மக்களவையில் லடாக் தொகுதியின் உறுப்பினராக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஜம்யாங் செரிங் நம்கியால் உள்ளார். [68] [69]
பொருளாதாரம்
[தொகு]மலைகளின் பனியிலிருந்து வரும் நீரைக் கொண்டு செல்லும் கால்வாய்களின் அமைப்பால் நிலத்தில் பாசனம் செய்யப்படுகிறது. முக்கிய பயிர்கள் பார்லி, கோதுமை போன்றவை ஆகும். முன்பு லடாக்கி உணவில் அரிசி ஆடம்பர உணவாக இருந்தது. ஆனால், அரசாங்கத்தால் வழங்கப்படும் மானியத்தால், இப்போது மலிவானதாகவும், பிரதானமானதாகவும் மாறிவிட்டது. [70]
நேக்டி பார்லி (லடாக்கி: நாஸ், உருது: கிரிம் ) பாரம்பரியமாக லடாக் முழுவதும் முதன்மை பயிராக இருந்தது. [70]
பஞ்சாப் மற்றும் சிஞ்சியாங்கிற்கு இடையே ஜவுளி, தரைவிரிப்புகள், சாயப் பொருட்கள், போதைப்பொருள் வர்த்தகத்தை எளிதாக்கும் வகையில், சிறுபான்மை லடாக்கி மக்கள் வணிகர்களாகவும், கூண்டு வண்டி வியாபாரிகளாகவும் பணிபுரிந்தனர். ஆனால் திபெத் தன்னாட்சிப் பகுதிக்கும் லடாக்கிற்கும் இடையிலான எல்லைகளை சீன அரசு மூடியதால், இந்த சர்வதேச வர்த்தகம் முற்றிலும் இல்லாமல் போனது. [16] [71]
லடாக் பகுதியில் ஓடும் சிந்து ஆறானது கொண்டு பரந்த அளவில் புனல் மின் ஆற்றலைக் கொண்டுள்ளது. சூரிய மற்றும் காற்றாலை ஆற்றல் திறன்களும் கணிசமாக உள்ளன. இப்பகுதியின் பெரும்பகுதி சாலைகள் இல்லாத தொலைதூர மலைப்பகுதியாக இருப்பதால், பல்வேறு கட்டுமானத் தேவைகளுக்காக உள்நாட்டில் கிடைக்கும் மலிவான மின்சாரத்தில் இருந்து சீமைக்காரை தயாரிக்க ஏற்ற சுண்ணாம்பு படிவுகள் நிறைந்த பகுதியாக உள்ளது. [72]
சிக்கல் நிறைந்த காஷ்மீர் பகுதியை ஒப்பிடுகையில் ஒப்பூட்டளவில் பாதிப்பு இல்லாததாக உள்ளதாக லடாக் உள்ளதால், 1974 ஆம் ஆண்டு முதல், இந்திய அரசாங்கம் மலையேற்றம் மற்றும் பிற சுற்றுலா நடவடிக்கைகளை லடாக்கில் ஊக்குவித்தது வருகிறது. லடாக்கின் உழைக்கும் மக்களில் 4% மட்டுமே சுற்றுலாத்துறையில் பணிபுரிந்தாலும், அது இப்போது பிராந்தியத்தின் மொத்த தேசிய உற்பத்தியில் 50% ஆக உள்ளது. [16]
போக்குவரத்து
[தொகு]லடாக்கில் சுமார் 1,800 கிமீ (1,100 மைல்) சாலைகள் உள்ளன. [73] லடாக்கின் பெரும்பாலான சாலைகள் எல்லைச் சாலைகள் அமைப்பால் பராமரிக்கப்படுகின்றன . லடாக்கை நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் இரண்டு முக்கிய சாலைகளாக தேநெ எண் 1 ஸ்ரீநகரை கார்கில் மற்றும் லேவுடன் இணைக்கிறது, தேநெ எண் 3 மணாலியை லேவுடன் இணைக்கிறது. லடாக்கிற்கான மூன்றாவது சாலை நிம்மு-பாதம்-தர்ச்சா சாலை ஆகும், இது கட்டுமானத்தில் உள்ளது.
லேவில் குசோக் பகூலா ரிம்போச்செ வானூர்தி நிலையம் உள்ளது. இதிலிருந்து தில்லிக்கு நாள்தோறும் வானூர்திகளும், ஸ்ரீநகர் மற்றும் ஜம்முவிற்கு வாராந்திர வானூர்திகளும் உள்ளன. இராணுவப் போக்குவரத்திற்காக தவுலத் பெக் ஓல்டி மற்றும் ஃபுக்சே ஆகிய இரண்டு வானூர்தி ஓடுதளங்கள் உள்ளன. [74] கார்கிலில் உள்ள வானூர்தி நிலையமான, கார்கில் வானூர்தி நிலையம், குடிமை வானூர்திகளுக்காக வடிவமைக்கப்பட்டது ஆனால் தற்போது இந்திய இராணுவத்தால் பயன்படுத்தப்படுகிறது. வானூர்தி நிலையம் அதன் அசல் நோக்கத்துக்காக பயன்படவேண்டும், அதாவது பொதுமக்களுக்காக வானூர்திகள் செலுத்தப்பட வேண்டும் என்று வாதிடும் உள்ளூர் மக்களுக்கு வானூர்தி நிலையம் ஒரு அரசியல் பிரச்சினையாக உள்ளது. ஜம்மு, சிறிநகர் மற்றும் சண்டிகருக்கு குளிர்காலத்தில் உள்ளூர் மக்களை கொண்டு செல்வதற்காக இந்திய வான்படையானது கடந்த சில ஆண்டுகளாக AN-32 விமான தூதஞ்சல் சேவையை இயக்கி வருகிறது. [75] [76] தனியார் வானூர்தி நிறுவனமான ஏர் மந்த்ரா 17 இருக்கைகள் கொண்ட வானூர்தியை வானூர்தி நிலையத்தில் தரையிறக்கியது. முதல்வர் உமர் அப்துல்லா மற்றும் உயரதிகாரிகள் முன்னிலையில், கார்கில் வானூர் நிலையத்தில் குடிமை வானூர்தி நிறுவனம் ஒன்று தரையிறங்கியது. [77] [78]
மக்கள்தொகையியல்
[தொகு]ஆண்டு [c] | லே மாவட்டம் | கார்கில் மாவட்டம் | ||||
---|---|---|---|---|---|---|
மக்கள் தொகை | சதவீத மாற்றம் | 1000 ஆண்களுக்கு பெண்கள் | மக்கள் தொகை | சதவீத மாற்றம் | 1000 ஆண்களுக்கு பெண்கள் | |
1951 | 40,484 | — | 1011 | 41,856 | — | 970 |
1961 | 43,587 | 0.74 | 1010 | 45,064 | 0.74 | 935 |
1971 | 51,891 | 1.76 | 1002 | 53,400 | 1.71 | 949 |
1981 | 68,380 | 2.80 | 886 | 65,992 | 2.14 | 853 |
2001 | 117,637 | 2.75 | 805 | 115,287 | 2.83 | 901 |
2011 | 133,487 | 690 | 140,802 | 810 |
லே மாவட்டத்திற்கான பாலின விகிதம் 1951 இல் 1000 ஆண்களுக்கு 1011 பெண்கள் என்று இருந்து. இது 2001 இல் 805 ஆக குறைந்துள்ளது. அதே சமயம் கார்கில் மாவட்டத்தில் 970 லிருந்து 901 ஆகவும் குறைந்துள்ளது. [79] இரு மாவட்டங்களிலும் நகர்ப்புற பாலின விகிதம் சுமார் 640 ஆக உள்ளது. வயது வந்தோர் பாலின விகிதத்தில் பெரும்பாலும் பருவ காலத்தில் அதிக எண்ணிக்கையில் புலம்பெயரும் ஆண் தொழிலாளர்கள் மற்றும் வணிகர்களின் எண்ணிக்கை இதில் பிரதிபலிக்கிறது. லடாக்கின் மக்கள் தொகையில் 84% பேர் கிராமங்களில் வாழ்கின்றனர். [80] 1981 முதல் 2001 வரையிலான சராசரி ஆண்டு மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் லே மாவட்டத்தில் 2.75% ஆகவும், கார்கில் மாவட்டத்தில் 2.83% ஆகவும் இருந்தது. [79]
சமயம்
[தொகு]திராஸ் மற்றும் தா-ஹானு பகுதிகளில் பிரோக்பாசுகள் வாழ்கின்றனர். அவர்கள் முக்கியமாக இஸ்லாத்தை பின்பற்றுபவர்கள், சிறு சிறுபான்மையினர் திபெத்திய பௌத்தம் மற்றும் இந்து சமயத்தை பின்பற்றுகிறார்கள். [81] இப்பகுதியின் மக்கள் தொகை லே மற்றும் கார்கில் மாவட்டங்களுக்கு இடையில் பாதியாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கார்கிலில் 76.87% மக்கள் முஸ்லிம்கள் (பெரும்பாலும் சியா ), மொத்த மக்கள் தொகை 140,802. அதே சமயம் லேயில் 66.40% பௌத்தர்கள், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகை 133,487 ஆகும். [82] [83]
லடாக்கில் பௌத்த ஆண்களின் தொகை குறைந்ததைத் தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான முஸ்லீம் ஆண்களும் லடாக்கி பௌத்த பெண்களும் ஒருவரையொருவர் திருமணம் செய்துகொள்கின்றனர். மேலும் அதிகமான பௌத்த பெண்கள் வாழ்க்கைத் துணை இல்லாமல் உள்ளனர்.
மொழி
[தொகு]லே மாவட்டத்தில் முதன்மையான தாய்மொழி லடாக்கி (பௌதி என்றும் அழைக்கப்படுகிறது). இது ஒரு திபெத்திய மொழி ஆகும். பால்டியின் பேச்சுவழக்காகக் கருதப்படும், புர்க்கி கார்கில் மாவட்டத்தின் முதன்மையான தாய்மொழியாகும். [84] படித்த லடாக்கியர்களுக்கு பொதுவாக இந்தி, உருது மற்றும் பெரும்பாலும் ஆங்கிலம் தெரியும். லடாக்கிற்குள், பலவிதமான பேச்சுவழக்குகள் உள்ளன, இதனால் சாங்-பா மக்களின் மொழி கார்கில் அல்லது ஜாங்ஸ்காரிகளில் உள்ள பூரிக்-பா மொழியிலிருந்து குறிப்பிடத்தக்க அளவில் வேறுபடலாம், ஆனால் அவை அனைத்தும் பரஸ்பரம் புரிந்துகொள்ளக்கூடியவை. பெரும்பாலான லடாக்கி மக்கள் (குறிப்பாக இளைய தலைமுறையினர்) பள்ளியில் மொழிக் கல்வியின் காரணமாக ஆங்கிலம் மற்றும் இந்தியிலும் சரளமாகப் பேசுகிறார்கள். [85] நிர்வாக வேலை மற்றும் கல்வி ஆங்கிலத்தில் மேற்கொள்ளப்படுகிறது. [86]
காட்சியகம்
[தொகு]-
பென்சி லா
-
ஷிங்கோ லா
-
சாந்தி ஸ்தூபா, லே
-
திக்சே மடாலயத்தின் முன்
-
லிகிர் மடாலயம்
-
லே அருகே இமயமலைக்கு முன்னால் மரங்கள் கூடுகட்டி நிற்கின்றன
-
பிரதிபலிப்புடன் நுப்ரா பள்ளத்தாக்கு காட்சி
-
செதுக்கப்பட்ட கல் பலகைகள், ஒவ்வொன்றும் " ஓம் மணி பத்மே ஹூம் " என்ற கல்வெட்டுடன் ஜான்ஸ்கர் பாதையில்
குறிப்புகள்
[தொகு]- ↑ Ladakh is a எல்லைத் தகராறு between இந்தியா, பாக்கித்தான் and சீனா. Ladakh has 59,146 km2 (22,836 sq mi) of area controlled by India and 72,971 km2 (28,174 sq mi) of area controlled by Pakistan under வடக்கு நிலங்கள், which is claimed by India as part of Ladakh. Additionally, it has 5,180 km2 (2,000 sq mi) of area controlled by China under Trans-Karakoram Tract and 37,555 km2 (14,500 sq mi) of area controlled by China under அக்சாய் சின், both of which are claimed by India as part of Ladakh.
- ↑ All of Indian Ladakh is placed in high risk Zone VIII, while areas from Kargil and Zanskar southwestward are in lower risk zones on the earthquake hazard scale.
- ↑ Census was not carried out in Jammu and Kashmir in 1991 due to militancy
அடிக் குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Ladakh", Encyclopaedia Britannica, Encyclopædia Britannica, 1 March 2021, பார்க்கப்பட்ட நாள் 2 April 2022,
Ladakh, large area of the northern and eastern Kashmir region, northwestern Indian subcontinent. Administratively, Ladakh is divided between Pakistan (northwest), as part of Gilgit-Baltistan, and India (southeast), as part of Ladakh union territory (until October 31, 2019, part of Jammu and Kashmir state); in addition, China administers portions of northeastern Ladakh.
- ↑ 2.0 2.1 Akhtar, Rais; Kirk, William, "Jammu and Kashmir, State, India", Encyclopædia Britannica, பார்க்கப்பட்ட நாள் 7 August 2019 (subscription required) Quote: "Jammu and Kashmir, state of India, located in the northern part of the Indian subcontinent in the vicinity of the Karakoram and westernmost Himalayan mountain ranges. From 1947 to 2019, Ladakh was part of the Indian state of Jammu and Kashmir, which has been the subject of dispute between India, Pakistan, and China since the partition of the subcontinent in 1947."
- ↑ 3.0 3.1 Jan·Osma鈔czyk, Edmund; Osmańczyk, Edmund Jan (2003), Encyclopedia of the United Nations and International Agreements: G to M, Taylor & Francis, pp. 1191–, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-93922-5 Quote: "Jammu and Kashmir: Territory in northwestern India, subject to a dispute between India and Pakistan. It has borders with Pakistan and China."
- ↑ "The Gazette of India" (PDF). egazette.nic.in. பார்க்கப்பட்ட நாள் 3 January 2021.
- ↑ "Ladakh Gets Civil Secretariat". 17 October 2019.
- ↑ "LG, UT Hqrs, Head of Police to have Sectts at both Leh, Kargil: Mathur". Daily Excelsior. 12 November 2019. https://www.dailyexcelsior.com/lg-ut-hqrs-head-of-police-to-have-sectts-at-both-leh-kargil-mathur/.
- ↑ "MHA.nic.in". MHA.nic.in. Archived from the original on 8 December 2008. பார்க்கப்பட்ட நாள் 21 June 2012.
- ↑ "Saltoro Kangri, India/Pakistan". peakbagger.com. பார்க்கப்பட்ட நாள் 9 August 2019.
- ↑ Ganai, Naseer (19 January 2022). "Urdu No More Official Language Of Ladakh". அவுட்லுக் (இதழ்). https://www.outlookindia.com/national/urdu-is-dogra-legacy-to-j-k-and-ladakh-not-kashmiri-imposition-news-38816.
- ↑ "Part II—Section 3—Sub-section (ii)" (PDF), Gazette of India, Extraordinary, Controller of Publications, Delhi-110054, p. 2, 25 November 2019
- ↑ "India-China Border Dispute". GlobalSecurity.org.
- ↑ Rizvi, Janet (2001). Trans-Himalayan Caravans – Merchant Princes and Peasant Traders in Ladakh. Oxford India Paperbacks.
- ↑ Osada et al. (2000), p. 298.
- ↑ Sandhu, Kamaljit Kaur (4 June 2019). "Government planning to redraw Jammu and Kashmir assembly constituency borders: Sources". India Today.
- ↑ "Ladakh". IBEF.
- ↑ 16.0 16.1 16.2 16.3 16.4 Loram, Charlie (2004). Trekking in Ladakh (2nd ed.). Trailblazer Publications.
- ↑ Zutshi, Rattan. My Journey of Discovery. Partridge Publishing.
- ↑ Zutshi, Rattan. My Journey of Discovery. Partridge Publishing.
- ↑ Petech, The Kingdom of Ladakh (1977).
- ↑ Howard & Howard, Historic Ruins in the Gya Valley (2014).
- ↑ Zeisler, Bettina (2011), "Kenhat, The Dialects of Upper Ladakh and Zanskari", Himalayan Languages and Linguistics: Studies in Phonology, Semantics, Morphology and Syntax, BRILL, p. 293, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-21653-2: "While the whole of Ladakh and adjacent regions were originally populated by speakers of Eastern Iranian (Scythian), Lower Ladakh (as well as Baltistan) was also subject to several immigration waves of Indoaryan (Dardic) speakers and other groups from Central Asia. Upper Ladakh and the neighbouring regions to the east, by contrast, seem to have been populated additionally by speakers of a non-Tibetan Tibeto-Burman language, namely West Himalayan (Old Zhangzhung;...)."
- ↑ Bellezza, John Vincent (2014), The Dawn of Tibet: The Ancient Civilization on the Roof of the World, Rowman & Littlefield Publishers, p. 101, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4422-3462-8
- ↑ Fisher, Rose & Huttenback, Himalayan Battleground (1963).
- ↑ Flood, Finbarr Barry (2017). "A Turk in the Dukhang? Comparative Perspectives on Elite Dress in Medieval Ladakh and the Caucasus". Interaction in the Himalayas and Central Asia (Austrian Academy of Science Press): 231–243. https://www.academia.edu/35061254.
- ↑ 25.0 25.1 Howard, Neil (1997), "History of Ladakh", Recent Research on Ladakh 6, Motilal Banarsidass, p. 122, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120814325
- ↑ 26.0 26.1 26.2 Sheikh, Abdul Ghani (1995), "A Brief History of Muslims in Ladakh", Recent Research on Ladakh 4 & 5, Motilal Banarsidass, p. 189, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120814042
- ↑ Buddhist Western Himalaya: A politico-religious history. Indus Publishing.
- ↑ Kaul, Shridhar (1992). Ladakh Through the Ages, Towards a New Identity.
- ↑ Jina, Prem Singh (1996). Ladakh.
- ↑ Osmaston, Henry (1995). Recent Research on Ladakh 4 & 5.
- ↑ Bora, Nirmala (2004). Ladakh.
- ↑ Kaul, H. N. (1998). Rediscovery of Ladakh.
- ↑ Osmaston, Henry; Denwood, Philip (1995). Recent Research on Ladakh 4 & 5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120814042.
- ↑ See the following studies (1) Halkias, T. Georgios(2009) "Until the Feathers of the Winged Black Raven Turn White: Sources for the Tibet-Bashahr Treaty of 1679–1684," in Mountains, Monasteries and Mosques, ed. John Bray. Supplement to Rivista Orientali, pp. 59–79; (2) Emmer, Gerhard(2007) "Dga' ldan tshe dbang dpal bzang po and the Tibet-Ladakh-Mughal War of 1679–84," in The Mongolia-Tibet Interface. Opening new Research Terrains in Inner Asia, eds. Uradyn Bulag, Hildegard Diemberger, Leiden, Brill, pp. 81–107; (3) Ahmad, Zahiruddin (1968) "New Light on the Tibet-Ladakh-Mughal War of 1679–84." East and West, XVIII, 3, pp. 340–361; (4) Petech, Luciano(1947) "The Tibet-Ladakhi Moghul War of 1681–83." The Indian Historical Quarterly, XXIII, 3, pp. 169–199.
- ↑ Sali, M. L. (1998). India-China Border Dispute. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170249641.
- ↑ Kaul, H. N. (1998). Rediscovery of Ladakh. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788173870866.
- ↑ Gray Tuttle; Kurtis R. Schaeffer (12 March 2013). The Tibetan History Reader. Columbia University Press. pp. 603–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-231-14468-1.
- ↑ Menon, P.M & Proudfoot, C.L., The Madras Sappers, 1947–1980, 1989, Thomson Press, Faridabad, India.
- ↑ Dash, Dipak K.. "Government may clear all weather tunnel to Leh today".
- ↑ Bammi, Y.M., Kargil 1999 – the impregnable conquered. (2002) Natraj Publishers, Dehradun.
- ↑ Notification, Jammu, 8 February 2019 பரணிடப்பட்டது 26 சூன் 2019 at the வந்தவழி இயந்திரம், Government of Jammu and Kashmir
- ↑ "Ladakh division headquarters to shuttle between Leh and Kargil: Governor Malik". 15 February 2019.
- ↑ "Kargil Council For Greater Ladakh". The Statesman, 9 August 2003. 2003. Archived from the original on 19 அக்டோபர் 2006. பார்க்கப்பட்ட நாள் 22 August 2006.
- ↑ Already, Rajya Sabha Clears J&K As Union Territory Instead Of State பரணிடப்பட்டது 6 ஆகத்து 2019 at the வந்தவழி இயந்திரம், NDTV, 5 August 2019.
- ↑ "The Jammu and Kashmir Reorganisation Bill, 2019" (PDF), Ministry of Home Affairs, 2019, archived from the original (PDF) on 2021-05-06, பார்க்கப்பட்ட நாள் 2022-10-31
- ↑ 46.0 46.1 46.2 One year of union territory status: Ladakh brims with hope பரணிடப்பட்டது 3 ஆகத்து 2020 at the வந்தவழி இயந்திரம், Times of India, 3 August 2020.
- ↑ The Gazetteer of Kashmir and Ladák published in 1890 Compiled under the direction of the Quarter Master General in India in the Intelligence Branch in fact unequivocally states inter alia in pages 520 and 364 that Khotán is "a province in the Chinese Empire lying to the north of the Eastern Kuenlun (Kun Lun) range, which here forms the boundary of Ladák" and "The eastern range forms the southern boundary of Khotán, and is crossed by two passes, the Yangi or Elchi Díwan, crossed in 1865 by Johnson and the Hindútak Díwan, crossed by Robert Schlagentweit in 1857".
- ↑ "Multi-hazard Map of India" (PDF). United Nations Development Program. 2007. Archived from the original (PDF) on 31 October 2014. பார்க்கப்பட்ட நாள் 31 October 2014.
- ↑ "Climate in Ladakh". LehLadakhIndia.com. பார்க்கப்பட்ட நாள் 3 March 2008.
- ↑ German, Dmitry A.; Al-Shehbaz, Ihsan A. (1 December 2010). "Nomenclatural novelties in miscellaneous Asian Brassicaceae (Cruciferae)". Nordic Journal of Botany 28 (6): 646–651. doi:10.1111/j.1756-1051.2010.00983.x. பன்னாட்டுத் தர தொடர் எண்:1756-1051.
- ↑ Namgail, T (2006). "Winter Habitat Partitioning between Asiatic Ibex and Blue Sheep in Ladakh, Northern India". Journal of Mountain Ecology 8: 7–13. http://www.reg.wur.nl/NR/rdonlyres/CF6DD450-51CA-46E7-950A-5655E5E00336/69532/NamgailIbexBlusSheep.pdf.
- ↑ Namgail, T. (2006). Trans-Himalayan large herbivores: status, conservation, and niche relationships. Report submitted to the Wildlife Conservation Society, Bronx Zoo, New York.
- ↑ Namgail, T.; Fox, J.L.; Bhatnagar, Y.V. (2007). "Habitat shift and time budget of the Tibetan argali: the influence of livestock grazing". Ecological Research 22: 25–31. doi:10.1007/s11284-006-0015-y. http://www.reg.wur.nl/NR/rdonlyres/CF6DD450-51CA-46E7-950A-5655E5E00336/69531/NamgailetalHabitatShift.pdf.
- ↑ Namgail, T.; Bagchi, S.; Mishra, C.; Bhatnagar, Y.V. (2008). "Distributional correlates of the Tibetan gazelle in northern India: Towards a recovery programme". Oryx 42: 107–112. doi:10.1017/s0030605308000768. http://www.reg.wur.nl/NR/rdonlyres/CF6DD450-51CA-46E7-950A-5655E5E00336/69527/NamgailetalOryx2008Gazelle.pdf.
- ↑ Bhatnagar, Y. V.; Wangchuk, R.; Prins, H. H.; van Wieren, S. E.; Mishra, C. (2006). "Perceived conflicts between pastoralism and conservation of the Kiang Equus kiang in the Ladakh Trans- Himalaya". Environmental Management 38 (6): 934–941. doi:10.1007/s00267-005-0356-2. பப்மெட்:16955231.
- ↑ Namgail, T (2004). "Eurasian lynx in Ladakh". Cat News 40: 21–22.
- ↑ Namgail, T.; Fox, J.L.; Bhatnagar, Y.V. (2007). "Carnivore-caused livestock mortality in Trans-Himalaya". Environmental Management 39 (4): 490–496. doi:10.1007/s00267-005-0178-2. பப்மெட்:17318699. http://www.reg.wur.nl/NR/rdonlyres/CF6DD450-51CA-46E7-950A-5655E5E00336/69528/NamgailetalLivestockMortality.pdf.
- ↑ Namgail, T.; Bagchi, S.; Bhatnagar, Y.V.; Wangchuk, R. (2005). "Occurrence of the Tibetan sand fox Vulpes ferrilata Hodgson in Ladakh: A new record for the Indian sub-Continent". Journal of the Bombay Natural History Society 102: 217–219.
- ↑ Bagchi, S.; Namgail, T.; Ritchie, M.E. (2006). "Small mammalian herbivores as mediators of plant community dynamics in the high-altitude arid rangelands of Trans-Himalayas". Biological Conservation 127 (4): 438–442. doi:10.1016/j.biocon.2005.09.003. http://www.reg.wur.nl/NR/rdonlyres/CF6DD450-51CA-46E7-950A-5655E5E00336/69524/BagchietalPika.pdfreg.wur.nl.
- ↑ Vishwas S. Kale (23 May 2014). Landscapes and Landforms of India. Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789401780292.
- ↑ Satish K. Sharma. Temperate Horticulture: Current Scenario. New India Publisher. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788189422363.
- ↑ "Ladakh mountaineer successfully summits Mt Everest | the Administration of Union Territory of Ladakh | India".
- ↑ "New J&K to be like Puducherry: Here is how India's new Union territory J&K will function". The Economic Times. 5 August 2019. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/new-jk-to-be-like-puducherry-here-is-how-indias-new-union-territory-jk-will-function/articleshow/70532687.cms.
- ↑ "India". Allrefer country study guide. Archived from the original on 21 May 2011. பார்க்கப்பட்ட நாள் 21 August 2006.
- ↑ .
- ↑ "Kashmir updates: Rajya Sabha passes bill that divides J&K, Ladakh with 125 votes in favour, 61 against". Business Today. 5 October 2019. https://www.businesstoday.in/current/economy-politics/kashmir-turmoil-live-updates-schools-colleges-closed-mobile-service-suspended-section-144-imposed-in-jk/story/370544.html.
- ↑ "लद्दाख की अपनी होगी खाकी, जम्मू-कश्मीर पुलिस भी दिल्ली की तरह उप राज्यपाल को करेगी रिपोर्ट". Amar Ujala. 6 August 2019. https://www.amarujala.com/jammu/ladakh-will-have-its-own-state-police-jammu-kashmir-police-will-report-to-lieutenant-governor.
- ↑ "Khan, Shri Hassan: Member's Bioprofile". Lok Sabha. Archived from the original on 13 May 2013.
- ↑ "Members of Parliament, MPs of India 2014, Sixteenth Lok Sabha Members". elections.in. பார்க்கப்பட்ட நாள் 28 September 2016.
- ↑ 70.0 70.1 Rizvi, Janet (1996). Ladakh – Crossroads of High Asia. Oxford University Press.Rizvi, Janet (1996). Ladakh – Crossroads of High Asia. Oxford University Press.
- ↑ Weare, Garry (2002). Trekking in the Indian Himalaya. Lonely Planet.
- ↑ "Distribution of Rocks and Minerals in J&K state". பார்க்கப்பட்ட நாள் 30 November 2017.
- ↑ "State Development Report—Jammu and Kashmir, Chapter 3A" (PDF). Planning Commission of India. 2001. Archived from the original (PDF) on 30 November 2012. பார்க்கப்பட்ட நாள் 21 August 2006.
- ↑ IAF craft makes successful landing near China border (4 November 2008). "NDTV.com". NDTV.com. Archived from the original on 5 September 2012. பார்க்கப்பட்ட நாள் 21 June 2012.
- ↑ "Air Courier Service From Kargil Begins Operation". news.outlookindia.com. Archived from the original on 17 May 2014. பார்க்கப்பட்ட நாள் 6 June 2013.
- ↑ "IAF to start air services to Kargil during winter from December 6". NDTV.com. 3 December 2010. பார்க்கப்பட்ட நாள் 6 June 2013.
- ↑ Fayyaz (7 January 2013). "Kargil gets first civil air connectivity". http://www.thehindu.com/news/national/other-states/kargil-gets-first-civil-air-connectivity/article4283179.ece.
- ↑ GK News Network (2 January 2013). "Air Mantra to operate flights to Kargil". http://www.greaterkashmir.com/news/2013/Jan/2/-air-mantra-to-operate-flights-to-kargil--69.asp.
- ↑ 79.0 79.1 "State Development Report—Jammu and Kashmir, Chapter 2 – Demographics" (PDF). Planning Commission of India. 1999. Archived from the original (PDF) on 13 December 2011. பார்க்கப்பட்ட நாள் 21 August 2006.
- ↑ "Rural population". Education for all in India. 1999. Archived from the original on 10 July 2011. பார்க்கப்பட்ட நாள் 21 August 2006.
- ↑ "Religion Data of Census 2011: XXXIII JK-HP-ST" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 1 நவம்பர் 2021. பார்க்கப்பட்ட நாள் 18 May 2020.
- ↑ "Kargil District Population Census 2011-2020, Jammu and Kashmir literacy sex ratio and density". www.census2011.co.in.
- ↑ "Leh District Population Census 2011-2020, Jammu and Kashmir literacy sex ratio and density". www.census2011.co.in.
- ↑ Rather, Ali Mohammad (September 1999), "Kargil: The Post-War Scenario", Journal of Peace Studies, International Center for Peace Studies, archived from the original on 1 December 2014
- ↑ "Ladakhi Language & Phrasebook". Leh-Ladakh Taxi Booking.
- ↑ "About Ladakh". BIRDING IN LADAKH. Archived from the original on 2018-08-16. பார்க்கப்பட்ட நாள் 2022-10-31.