நூப்ரா பள்ளத்தாக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நூப்ரா பள்ளத்தாக்கு இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பள்ளத்தாக்கின் வட கிழக்கில் அமைந்துள்ளது. இது லே மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான லே நகரத்திலிருந்து 150 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இந்த பள்ளத்தாக்கின் சராசரி உயரம் ஏறத்தாழ 10,000 அடி (3048 மீ). இந்த பள்ளத்தாக்கிற்கு செல்ல லே நகரத்தில் இருந்து கார்டுங் லா கணவாயின் வழியாக பயணம் செய்ய வேண்டும்.[1]

இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதிச்சீட்டு தேவையில்லை. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதிச்சீட்டு தேவைப்படுகிறது.

புவியியல்[தொகு]

நூப்ரா பள்ளத்தாக்கின் மணற்திட்டுகள்

இது உயரமான குளிர் பாலைவனமாக காணப்படுகிறது. இங்கு மிகக்குறைவான தாவர வகைகளே உள்ளன. இங்குள்ள கிராமங்களில் கோதுமை, பார்லி, பட்டாணி, கடுகு, ஆப்பிள்கள், அக்ரூட் பருப்புகள், ஆப்ரிகாட் ஆகியன விளைகின்றன. இங்கு பெரும்பாலான மக்கள் புத்த மதத்தினர்.

நூப்ரா பள்ளத்தாக்கின் மேற்கில் குறைந்த உயரத்தில் உள்ள பகுதிகள் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளன. இதன் வடக்கில் சியாச்சின் பனிமலை அமைந்துள்ளது. சஸ்ஸேர் கணவாயும் கரகோரம் கணவாயும் வடமேற்கில் அமைந்துள்ளன. முற்காலத்தில் இப்பகுதி மேற்கு சீனாவின் ஜின்ஜியாங், மத்திய ஆசியா ஆகிய பகுதிகளுக்கு வர்த்தக வழியாக இருந்தது.

நூப்ரா பள்ளத்தாக்கிற்குள் நுழைய ஆண்டு முழுவதும் அனுமதிக்கப்படுகிறது. இங்கு உலகின் மிக அதிக உயரத்திலுள்ள சாலை உள்ளது.

சியாச்சின் பனிமலையில் நூப்ரா பள்ளத்தாக்கின் அமைவிடம்

கல்வி[தொகு]

இங்குள்ள மக்களுக்கு நல்ல, தரமான கல்வி கிடைக்கவில்லை. இங்குள்ள மோசமான வானிலை காரணமாக அரசாங்கத்தால் நிலையான பள்ளிகளை அமைக்க முடியவில்லை. நூப்ரா பிராந்தியத்தில் மிக சில அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

கர்மபூமி எனும் அரசு சாரா தொண்டு நிறுவனம், கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு உதவும் பணியில் இறங்கியுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Nubra Valley

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நூப்ரா_பள்ளத்தாக்கு&oldid=2788737" இருந்து மீள்விக்கப்பட்டது