சியாச்சின் பனியாறு
சியாச்சின் பனியாறு (Siachen Glacier) இமாலய மலைகளில் காரகோரம் மலைத்தொடரின் கிழக்குப் பகுதியில் (35°25′16″N 77°06′34″E / 35.421226°N 77.109540°E) உள்ளது. இது இந்திய-பாக்கித்தான் எல்லைக்கோடு முடியும் என்.ஜெ.9842 என்ற இடத்துக்கு வடகிழக்கில் அமைந்துள்ளது. 70 km (43 mi) தொலைவிற்கு அமைந்துள்ள இந்தப் பனியாறு காரகோரம் பகுதியிலேயே மிக நீண்டதும் உலகின் வட-தென் முனைகளில் அல்லாதவற்றில் நீளமான பனியாறுகளில் இரண்டாவதும் ஆகும்.[1] பனியாற்றின் உச்சிப்பகுதியான சீன எல்லையில் உள்ள இந்திரா கணவாயில் இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 5,753 மீ (18,875 அடி) ஆகும், பனியாற்றின் அடிவாரத்தில் இதன் உயரம் 3,620 மீ (11,875 அடி) ஆகும்.
சியாச்சின் பனியாறானது ஆசிய ஐரோப்பிய நிலத்தட்டையும் இந்திய துணைக்கண்டத்தையும் பிரிக்கும் காரகோர மலைத்தொடரின் தெற்குப்பகுதியிலுள்ள சிறப்பு வாய்ந்த பனியாற்றின் பெரும் வடிகால் பரப்பில் அமைந்துள்ளது. இப்பகுதி சில சமயம் உலகின் மூன்றாவது முனை என்றும் அழைக்கப்படுகிறது.
சியாச்சின் பிணக்கு
[தொகு]சியாச்சின் பனிமலை உரிமை தொடர்பாக இந்திய-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே மார்ச் 1984 முடிய சியாச்சின் பிணக்கு நீடித்து வநதது. 1984ல் மேகதூது நடவடிக்கை மூலம் இந்திய இராணுவம் சியாச்சின் கொடுமுடியைக் கைப்பற்றி லடாக்குடன் இணைத்தது.
இதனையும் காண்க
[தொகு]- தவுலத் பெக் ஓல்டி
- துர்புக்-சியோக்-தவுலத் பெக் ஓல்டி சாலை
- சியோக் ஆறு
- கல்வான் நதி
- பாங்காங் ஏரி
- உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு
- திஸ்கித்
- துர்புக்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ சியாச்சென் பனியாறு 70 km (43 mi) நீளமானது; தஜிக்கித்தானின் ஃபெட்ச்சென்கோ பனியாறு 77 km (48 mi) நீளமானது. காரக்கோரம் மலைத்தொடரில் இரண்டாவது நீளமானது பியாஃபோ பனியாறு (63 km (39 mi) நீளம்). Measurements are from recent imagery, supplemented with Russian 1:200,000 scale topographic mapping as well as the 1990 "Orographic Sketch Map: Karakoram: Sheet 2", Swiss Foundation for Alpine Research, Zurich.
வெளி இணைப்புகள்
[தொகு]
- Video about the Conflict in the Siachen area and its consequences
- Siachen Peace Park Initiative
- Blankonthemap The Northern Kashmir WebSite
- Outside magazine article about Siachen battleground பரணிடப்பட்டது 2011-04-11 at the வந்தவழி இயந்திரம்
- பிபிசி செய்தி: Nuclear rivals in Siachen talks; May 26, 2005
- Siachen - A War for ice - An awarded documentary on the Siachen War பரணிடப்பட்டது 2005-06-11 at the வந்தவழி இயந்திரம்
- Bharat Rakshak பரணிடப்பட்டது 2014-02-24 at the வந்தவழி இயந்திரம்