லே மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லடாக் தன்னாட்சி மலை வளர்ச்சியவை, லே
வகை
வகைதன்னாட்சி மலை மன்றம் லே மாவட்டம் இன்
தலைமை
தலைமை நிருவாக மன்ற உறுப்பினர்செரிங் டோர்ஜே
உறுப்பினர்கள்30 மன்றத்தினர்
Voting system26 plurality voting
Voting system4 நியமன உறுப்பினர்கள்
கூடும் இடம்
லே
வலைத்தளம்
http://leh.nic.in/

லே மாவட்டம் சம்மு காசுமீர் மாநிலத்தில் லடாக் பகுதியில் அமைந்துள்ள இரு மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் லே நகராகும். மற்றொரு மாவட்டமான கார்கில் லடாக் பகுதியின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இது இந்தியாவில் பரப்பளவில் குசராத்தின் கட்ச் மாவட்டதுக்கு அடுத்து இரண்டாவது பெரிய மாவட்டமாகும் .[1]. இதன் வட பகுதியில் பாக்கித்தான் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு நிலங்களும் தென்பகுதியில் இமாச்சலப் பிரதேசத்தின் லாஹவுல் மற்றும் ஸ்பிதி மாவட்டமும், மேற்கில் கார்கில் மாவட்டமும், கிழக்கு பகுதியில் அக்சாய் சின் மற்றும் திபெத்தும் எல்லைகளாக உள்ளன.

1979ம் ஆண்டு வரை லடாக் பகுதி முழுவதும் லேவை தலைமையிடமாக கொண்டு நிருவகிக்கப்பட்டது. [2] 1979ல் லடாக் கார்கில், லே என இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. [3]

திபெத்திலிருந்து வரும் சிந்து ஆறு லே மாவட்டத்தில் கிழக்குமேற்காக பயணித்து, சிறிது தூரம் கார்கில் மாவட்டத்தில் பயணித்து பின் பாக்கித்தான் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு நிலங்களுக்கு செல்கிறது.

இதனையும் காண்க[தொகு]

சான்று[தொகு]

  1. http://www.census2011.co.in/questions/182/district-area/total-square-kilometer-area-of-kachchh-district-2011.html
  2. http://kargil.nic.in/profile/profile.htm
  3. http://leh.nic.in/pages/leh.pdf
"https://ta.wikipedia.org/w/index.php?title=லே_மாவட்டம்&oldid=2788643" இருந்து மீள்விக்கப்பட்டது