லடாக் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

லடாக் மக்களவைத் தொகுதி (Ladakh Lok Sabha constituency), இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின், கார்கில் மாவட்டம் மற்றும் லே மாவட்டங்களைக் கொண்டது.

173266 சகிமீ பரப்பளவு கொண்ட லடாக் மக்களவைத் தொகுதி, இந்தியாவின் இரண்டாவது பெரிய மக்களவைத் தொகுதியாகும். [1][2] லடாக் மக்களவைத் தொகுதியின் வாக்களர்கள் எண்ணிக்கை 1.59 இலட்சம் ஆகும்.

லடாக் மக்களவைத் தொகுதியில் உள்ள சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

லடாக் மக்களவைத் தொகுதியில் கீழ் கண்ட நான்கு சட்டமன்றத் தொகுதிகள் கொண்டது:[3]

  1. நூப்ரா சட்டமன்றத் தொகுதி
  2. லே சட்டமன்றத் தொகுதி
  3. கார்கில் சட்டமன்றத் தொகுதி
  4. சங்ஸ்கர் சட்டமன்றத் தொகுதி

லடாக் மக்களவைத் தொகுதி உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு வெற்றியாளர் கட்சி
1 967 கே. ஜி. பக்குலா இந்திய தேசிய காங்கிரசு
1971 கே. ஜி. பக்குலா இந்திய தேசிய காங்கிரசு
1977 பார்வதி தேவி இந்திய தேசிய காங்கிரசு
1980 பூந்சோக் நம்கியால் இந்திய தேசிய காங்கிரஸ்
1984 பூந்சோக் நம்கியால் இந்திய தேசிய காங்கிரஸ்
1989 முகமது அசன் கமாண்டர் சுயேட்சை
1991 காஷ்மீர் கலவரம் காரணமான தேர்தல் நடைபெறவில்லை
1996 பூந்சோக் நம்கியால் இந்திய தேசிய காங்கிரசு
1998 சையது உசைன் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
1999 ஹசன் கான் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
2004 தப்ஸ்டன் செகாவாங் சுயேட்சை
2009 ஹசன் கான் சுயேட்சை
2014 தப்ஸ்டன் செகாவாங் பாரதிய ஜனதா கட்சி
2019 ஜம்யாங் செரிங் நம்கியால் பாரதிய ஜனதா கட்சி

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]