காரகோரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காரகோரம்
பால்டோரோ பனியாறு
மிக உயர்ந்த புள்ளி
கொடுமுடி K2
உயரம் 8,611 மீ (28 அடி)
ஆள்கூறுகள் 35°52′57″N 76°30′48″E / 35.88250°N 76.51333°E / 35.88250; 76.51333
புவியியல்
Baltoro region from space annotated.png
அனைத்துலக விண்வெளி நிலையத்தில் இருந்து தெரியும் காரகோரத்தின் கொடுமுடி
நாடுகள் பாக்கித்தான், இந்தியா and சீனா
மாநிலங்கள்/மாகாணங்கள் லடாக் and சிஞ்சியாங்
தொடரின் ஆள்கூறுகள் 36°N 76°E / 36°N 76°E / 36; 76ஆள்கூற்று: 36°N 76°E / 36°N 76°E / 36; 76

காரகோரம் (Karakoram) பாகிஸ்தான், சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மலைத்தொடர். இது இமாலயத்தின் வடக்கே அமைந்துள்ளது. இமயமலையின் தொடர்ச்சி போல் காணப்பட்டாலும் உண்மையில் இது இமாலயத்தின் ஒரு பகுதி அன்று.

உலகில் எவரெஸ்டுக்கு அடுத்தபடியாக அதிக உயரமுள்ள கே2 கொடுமுடி இம்மலைத் தொடரில் தான் அமைந்துள்ளது. இது மட்டுமின்றி பல கொடுமுடிகள் இங்கே உள்ளன. கே2 வின் உயரம் எவரெஸ்டை விட 237 மீட்டர்கள் மட்டுமே குறைவு.

இம்மலைத் தொடர் ஏறக்குறைய 500 கிமீ (300 மைல்) நீளமுடையது. இப்புவியில் வடமுனை, தென்முனை தவிர்த்து மிகுந்த அளவில் பனி மூடிக் கிடக்குமிடம் காரகோரம். 70 கிமீ நீளமுள்ள சியாச்சென் பனியாறும் 63 கிமீ நீளமுள்ள ஃபியாஃபோ பனியாறும் இங்கு அமைந்துள்ளன. புவி வெப்பமாதலால் இமாலயப் பனியாறுகள் உருகி வரும் நிலையில் காரகோரத்துப் பனியோ இறுகி வருவதாக அறியப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காரகோரம்&oldid=1370575" இருந்து மீள்விக்கப்பட்டது