படாக்சான் மாகாணம்
படாக்சான் மாகாணம் | |
---|---|
மாகாணம் | |
![]() | |
நாடு | ![]() |
அரசு | |
• வகை | மாகாண அரசு |
• ஆளுநர் | ஷா வலியுல்லா அதீப்[1] |
பரப்பளவு | |
• மொத்தம் | 44,059 km2 (17,011 sq mi) |
மக்கள்தொகை [2] | |
• Estimate (2011-2012) | 8,89,700 |
மக்கள் தொகையியல் | |
• இனக் குழுக்கள் | தாஜிக் மக்கள், கிர்க்குகள், உஸ்பெக்குகள், பஷ்தூன் மக்கள் |
• மொழிகள் | பாரசீகம், பாமிரி, பஷ்தூ மொழி, கிர்க் மொழி, உஸ்பெக் மொழி |
நேர வலயம் | UTC+4:30 |
படாக்சான் மாகாணம் (Badakhshan) (பாரசீகம்: بدخشان ), ஆப்கானித்தான் நாட்டின் 34 மாகாணங்களில் ஒன்று. இம்மாகாணம் 28 மாவட்டங்கள் கொண்டது. இதன் தலைநகரம் பைசாபாத் நகரம் ஆகும். இம்மாகாணம், ஆப்கானித்தானின் வடகிழக்கில் இந்து குஷ் மற்றும் ஆமூ தாரியா பகுதிகளுக்கிடையே அமைந்துள்ளது.
புவியியல்[தொகு]
படாக்சான் மாகாணத்தின் வடக்கிலும் கிழக்கிலும் தாஜிகிஸ்தான் நாட்டின் கோர்னோ-படாக்சான் தன்னாட்சிப் பகுதி மற்றும் காட்லான் மாகாணத்தை எல்லையாகக் கொண்டது. இதன் மொத்தப் பரப்பளவு 44,059 சதுர கிலோ மீட்டராகும். இம்மாகாணத்தின் பெரும்பகுதிகள் இந்து குஷ் மற்றும் பாமிர் மலைத்தொடர்களுக்கிடையே அமைந்துள்ளது.
பொருளாதாரம்[தொகு]
படாக்சான் மாகாணம், உலகப் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் ஒன்றாகும். அபினி பயிரிடுவதன் மூலம் கிடைக்கும் வருவாயையே இம்மாகாணத்தின் ஒரே பொருளாதாரமாகும். இம்மாகாணத்தின் சுரங்கங்களில் சிறிதளவு நீல நிற நவரத்தினக் கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறது.
மக்கள் தொகையியல்[தொகு]
படாக்சான் மாகாணத்தின் மொத்த மக்கள் தொகை 8,89,700 என மதிப்பிடப்பட்டுள்ளது.[2] இங்கு பேசப்படும் முக்கிய மொழிகள் பஷ்தூ மொழி, பாரசீக தாரி மொழி மற்றும் தாஜிக் மொழிகளாகும். சன்னி இசுலாமியர் அதிகம் வாழ்கின்றனர்.
படாக்சான் மாகாணத்தின் மாவட்டங்கள்[தொகு]
- அர்காஞ்ச் குவா மாவட்டம்
- ஆர்கோ மாவட்டம்
- பாஹாராக் மாவட்டம்
- தாரயீயும் மாவட்டம்
- தர்வாசு மாவட்டம்
- தர்வாசி பாலா மாவட்டம்
- பைசாபாத் மாவட்டம்
- இஷ்காசிம் மாவட்டம்
- ஜுரும் மாவட்டம்
- காஷ் மாவட்டம்
- கவான் மாவட்டம்
- கிஷிம் மாவட்டம்’
- கோகிஸ்தான் மாவட்டம்
- கப் அப் மாவட்டம்
- குரான் வா முஞ்சன் மாவட்டம்
- ராக் மாவட்டம்
- ஷாக்ரி புசூர்க் மாவட்டம்
- சிக்னான் மாவட்டம்
- சீக்கி மாவட்டம்
- சுஹதா மாவட்டம்
- தாகாப் மாவட்டம்
- திஷ்கான் மாவட்டம்
- வாக்ஹான் மாவட்டம்
- உர்தூஜ் மாவட்டம்
- யாப்தாலி சுப்லா மாவட்டம்
- யாம்கான் மாவட்டம்
- யவான் மாவட்டம்
- சிபாக் மாவட்டம்
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
![]() |
கோர்னோ-படாக்சான் தன்னாட்சி மாகாணம், ![]() |
![]() | ||
தக்கார் மாகாணம் | ![]() |
![]() | ||
| ||||
![]() | ||||
பாஞ்ச்சிர் மாகாணம் | நூரிஸ்தான் மாகாணம் | சில்ஜிட்-பால்டிஸ்தான் வடமேற்கு எல்லைப்புற மாகாணம், ![]() |