மெஸ் ஐநாக்

ஆள்கூறுகள்: 34°24′N 69°22′E / 34.400°N 69.367°E / 34.400; 69.367
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெஸ் ஐநாக்
مس عينک
மெஸ் ஐநாக் விகாரைகளின் சிதிலமடைந்த காட்சிகள்
மெஸ் ஐநாக் விகாரைகளின் சிதிலமடைந்த காட்சிகள்
மெஸ் ஐநாக் is located in ஆப்கானித்தான்
மெஸ் ஐநாக்
மெஸ் ஐநாக்
மெஸ் ஐநாக்
ஆள்கூறுகள்: 34°24′N 69°22′E / 34.400°N 69.367°E / 34.400; 69.367
நாடுஆப்கானித்தான்
மாகாணம்லோகார் மாகாணம்
மாவட்டம்முகமது ஆகா மாவட்டம்
ஏற்றம்2,120 மீ m (6,958 அடி ft)

மெஸ் ஐநாக் (Mes Aynak), ஆப்கானித்தான் நாட்டின் தலைநகர் காபூல் நகரத்தின் தென்கிழக்கில் 40 கிமீ தொலைவில் மலைப் பள்ளத்தாக்கில் உள்ளது. இப்பகுதி லோகார் மாகாணத்தின் முகமது ஆகா மாவட்ட மலைப்பகுதியில் 2120 மீட்டர் உயரத்தில் உள்ளது.

இப்பகுதியில் பெருமளவில் செப்பு கனிம வளம் நிறைந்துள்ளது. மேலும் பட்டுப் பாதையில் அமைந்த மெஸ் ஐநாக், குசான் பேரரசு (கிபி 30 – 375) காலத்தில், பௌத்தம் இப்பகுதியில் நன்கு பரவியிருந்தது. மெஸ் ஐநாக் மலைப்பகுதியில் 400க்கும் மேற்பட்ட பௌத்த தொல்பொருட்களும், கௌதம புத்தர் சிலையும், தூபிகளும், 100 ஏக்கர் பரப்பளவில் பௌத்த விகாரை வளாகம் ஒன்றைச் சிதைந்த நிலையில் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [1]

கிபி 5 - 7ம் நூற்றாண்டு வரை செழிப்பின் உச்சத்தில் இருந்த மெஸ் ஐநாக் பகுதி, சிறிது சிறிதாகச் செழிப்பு குன்றியது. எட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மெஸ் ஐநாக் பகுதியில் பௌத்தம் அழிக்கப்பட்டு, இசுலாம் வளர்க்கப்பட்டது. [2]

செப்புச் சுரங்கங்கள்[தொகு]

நவம்பர், 2007ல் இப்பகுதியின் செப்புச் சுரங்கங்களை, சீனா நாட்டிற்கு 30 ஆண்டு குத்தகைக்கு விட்டதில், 3 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஆப்கானிய அரசு ஈட்டியது.[3]

பௌத்த தொல்லியல் களங்கள்[தொகு]

புதிதாக அகழாய்வு செய்த பௌத்த தூபி
பௌத்த விகாரையின் அடியில் தொல்லியல் ஆய்வாளர்களின் முகாம்

பட்டுப் பாதையில் அமைந்த மெஸ் ஐநாக் பகுதி, பண்டைய பௌத்த சமயத்தின் முக்கியத்துவம் வாய்ந்த பாரம்பரிய தொல்லியல் களம் என தொல்லியல் ஆய்வாளர் பிலிப்ஸ் மார்க்கியுஸ் கருதுகிறார். [4]

மெஸ் ஐநாக் பள்ளத்தாக்கில் உள்ள 19 தொல்லியல் களங்களை அகழாய்வு செய்த போது இரண்டு சிறிய கோட்டைகளும், ஒரு அரண்மனையும், நான்கு விகாரைகளும், பல தூபிகளும் மற்றும் ஒரு சொராட்டிரிய தீக்கோயிலும், செப்பு உலோகத்தில் செய்த கலைப்பொருட்கள், செப்பு நாணயங்கள், செப்புப் பட்டறைகள் மற்றும் செப்புச் சுரங்கத் தொழிலாளர்களின் குடியிருப்புகள் கண்டுபிடிக்கப்பட்டது. [2]

தொல்பொருட்கள் மீட்பு[தொகு]

2010 மற்றும் 2011 ஆண்டுகளில் மெஸ் ஐநாக் பகுதியில் 400,000 சதுர மீட்டர்கள் (4,300,000 sq ft) பரப்பளவில் அகழாய்வு செய்த போது கிடைத்த 400க்கும் மேற்பட்ட பௌத்த தொல்பொருட்களில் பல ஆப்கானிஸ்தான் தேசிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மெஸ் ஐநாக் பகுதியில் பௌத்தம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பரவியிருந்தமைக்கு, அப்பகுதியில் கிடைத்த செப்புப் பொருட்கள் சான்று பகர்கிறது. [5] 2010ல் இப்பகுதியில் 2010ல் கௌதம புத்தர் கருங்கல் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. [6]

இப்பகுதியில் செப்பு சுரங்கத் தொழிலை மேம்படுத்தவும், தாலிபான் தீவிரவாதிகளிடமிருந்து தொல்லியலாளர்களை காக்கவும், மெஸ் ஐநாக் பௌத்த தொல்லியல் களத்தை, சனவரி 2013ல் மூட ஆப்கானிய அரசு திட்டமிட்டது.[7][8]

அன்மைய வளர்ச்சிகள்[தொகு]

கடும் போராட்டங்களுக்கிடையே சூன், 2014 வரை மெஸ் ஐநாக் பௌத்த தொல்லியல் களத்தை பாதுகாக்க ஆப்கானிய அரசு நடவடிக்கைகள் எடுத்தது. [9]

தற்போது இத்தொல்லியல் களத்தில் பத்து பன்னாட்டு தொல்லியலாளர்களும், ஏழு பேர் கொண்ட தாஜிக்கிஸ்தான் தொல்லியல் ஆய்வுக் குழுவினரும் மற்றும் இருபது ஆப்கானிய தொல்லியலாளர்கள் மட்டும் கள ஆய்வுப் பணி மேற்கொண்டு வருகின்றனர். [10]

மெஸ் ஐநாக் பௌத்த தொல்லியல் களக் காட்சிகள்[தொகு]

ஆவணப் படம்[தொகு]

இத்தொல்லியல் களத்தின் முக்கியத்துவத்தை கருதி, பெரண்ட் இ. ஹப்மேன் எனும் இயக்குநர், (Brent E. Huffman) மெஸ் ஐநாக்கை பாதுகாப்போம் எனும் தலைப்பில் ஒரு ஆவணப் படம் வெளியிடப்பட்டுள்ளது. [11].[12] [13] [14]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Rescuing Mes Aynak - Photo Gallery". National Geographic. பார்க்கப்பட்ட நாள் 2015-08-19.
  2. 2.0 2.1 Dalrymple, William (31 May 2013) Mes Aynak: Afghanistan's Buddhist buried treasure faces destruction guardian.co.uk
  3. Bailey, Martin (April 2010) Race to save Buddhist relics in former Bin Laden camp பரணிடப்பட்டது 28 பெப்பிரவரி 2012 at the வந்தவழி இயந்திரம் theartnewspaper.com
  4. (15 November 2010) Copper load of this! Company digging mine in Afghanistan unearths 2,600-year-old Buddhist monastery Dailymail.co.uk
  5. Baker, Aryn (17 November 2011), "Deciding Between Heritage and Hard Cash in Afghanistan", Time, archived from the original on 23 ஆகஸ்ட் 2013, பார்க்கப்பட்ட நாள் 20 August 2012 {{citation}}: Check date values in: |archive-date= (help)
  6. Jarus, Owen (6 June 2012) Ancient Statue Reveals Prince Who Would Become Buddha livescience.com
  7. Experts Show How to Preserve Ancient Mes Aynak Ruins While Safely Mining Copper Near Kabul, Afghanistan பரணிடப்பட்டது 29 சூன் 2012 at the வந்தவழி இயந்திரம் ARCH International, archinternational.org
  8. Huffman, Brent (24 September 2012). "Ancient site needs saving not destroying". CNN. http://www.cnn.com/2012/09/22/opinion/afghanistan-buddha-site-mine/index.html. பார்த்த நாள்: 3 November 2012. 
  9. Bloch, Hannah. "Rescuing Mes Aynak". பார்க்கப்பட்ட நாள் 2015-08-19.
  10. 24 June 2014, Saving Buddhist statues: Afghanistan’s big dig america.aljazeera.com
  11. Ward, Olivia (14 December 2012). "Afghanistan archeological site in a race for survival". Toronto Star. https://www.thestar.com/news/world/article/1302159--afghanistan-archeological-site-in-a-race-for-survival. பார்த்த நாள்: 2012-12-14. 
  12. "Saving Mes Aynak comes to Kartemquin". Kartemquin Films. 1 July 2014. http://kartemquin.com/news/saving-mes-aynak-comes-to-kartemquin. பார்த்த நாள்: 2014-07-07. 
  13. "Filmmakers Launch ‘Saving Mes Aynak’ Campaign for Afghan Archaeological Site". Variety. 26 April 2015. https://variety.com/2015/film/news/saving-mes-aynak-documentary-campaign-indiegogo-1201480311/. பார்த்த நாள்: 2015-04-26. 
  14. Corey, Joe (June 25, 2015). "Saving Mes Aynak is free to watch in Afghanistan". Inside Pulse. பார்க்கப்பட்ட நாள் July 2, 2015. Kartemquin Films announced today that they will make director Brent E. Huffman's film Saving Mes Aynak available for free to the people of Afghanistan.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mes Aynak
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெஸ்_ஐநாக்&oldid=3388285" இலிருந்து மீள்விக்கப்பட்டது