உள்ளடக்கத்துக்குச் செல்

லக்மான் மாகாணம்

ஆள்கூறுகள்: 34°40′N 70°12′E / 34.66°N 70.20°E / 34.66; 70.20
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லக்மான்
Laghman
لغمان
லக்மன் மாகாணத்தில் உள்ள சுற்றியுள்ள பாலைவனத்துக்கு மையத்தில் மிகுந்த பசுமையான நிலப்பகுதி அமைந்துள்ள காட்சி
லக்மன் மாகாணத்தில் உள்ள சுற்றியுள்ள பாலைவனத்துக்கு மையத்தில் மிகுந்த பசுமையான நிலப்பகுதி அமைந்துள்ள காட்சி
ஆப்கானித்தான் வரைபடத்தில் லக்மான் மாகாண உயர் நிலங்கள் அமைந்துள்ள இடம்
ஆப்கானித்தான் வரைபடத்தில் லக்மான் மாகாண உயர் நிலங்கள் அமைந்துள்ள இடம்
ஆள்கூறுகள் (தலைநகரம்): 34°40′N 70°12′E / 34.66°N 70.20°E / 34.66; 70.20
நாடு ஆப்கானித்தான்
தலைநகரம்மிக்டார்லம்
அரசு
 • ஆளுநர்முகமது ஆசிஃப் நங்
பரப்பளவு
 • மொத்தம்3,842.6 km2 (1,483.6 sq mi)
மக்கள்தொகை
 (2015)[1]
 • மொத்தம்4,45,588
 • அடர்த்தி120/km2 (300/sq mi)
நேர வலயம் ஒ. ச. நே.+4:30
ஐஎசுஓ 3166 குறியீடுAF-LAG
மொழிகள்பஷ்தூ
தாரி
பாஷாய மொழிகள்

லக்மான் (Laghman (பஷ்தூ/பாரசீகம்: لغمان) என்பது ஆப்கானிஸ்தானின் முப்பத்து நான்கு மாகாணங்களில் ஒன்றாகும். இது நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. மாகாணத்தின் மக்கள் தொகையானது சுமார் 445,600, ஆகும். இது பல்லின மக்களைக் கொண்ட, பெரும்பாலும் கிராமப்புற மக்களைக் கொண்ட மாகாணமாகும். மாகாணத்தின் தலைநகராக மிகுத்தர்லாம் நகரம் செயற்படுகிறது.

வரலாறு

[தொகு]
லக்மான் மாகாணத்தில் இந்து குஷ் மலைப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஒரு கிராமம்

தற்பொழுது காபூல் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் அரமேயக் கல்வெட்டஆனது, லக்மானில் கண்டெடுக்கப்பட்டது ஆகும், இது இந்தியாவுக்கும் பல்மைராவுக்கும் இடையில் இருந்த பழங்கால வணிகப்பாதை என்பதைக் குறிக்கின்றது.[2] அரமேய மொழியானது அகாமனிசியப் பேரரசின் அதிகாரபூர்வ மொழியாகும், இதன் செல்வாக்கு லாக்மான்வரை பரவியுள்ளது.[3] அலெக்சாந்தரின் படையெடுப்பின் போது, இந்த பகுதி லம்பகா எனப்பட்டது.[4]

மௌரியப் பேரரசு கால அரமேயக் கல்வெட்டுகள் லக்மானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, அவை அசோகர் பௌத்த சமயத்துக்கு மாறியதைப் பற்றி விவரிக்கின்றன.[5] இக்கல்வெட்டு பல்மைராவுக்கு 300 தனுஷா அல்லது யோசனை தொலைவு உள்ளதாக குறிப்பிடுகிறது.

1-3 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்திய மகாமயூரி தந்திரமானது பிரபலமான யக்ஷா ஆலயங்களைக் குறிப்பிடுகிறது. லக்மானில் யக்ஷ காளஹப்பிரியா வணங்கப்பட்டு வந்த‍தாக குறிப்பிடுகிறது.[6]

ஏழாம் நூற்றாண்டில், சீனப் பயணியான யுவாங்சுவாங் லக்மானுக்கு விஜயம் செய்தார், அவர் இப்பகுதியை "லேன்-பாயோ" என்றும் இதை இந்தியாவின் ஒரு பகுதியாகவும் கருதியுள்ளார். அவர் இப்பகுதியில் மகாயான பௌத்தர்கள் மற்றும் பல இந்துக்கள் இருந்த‍தை குறிப்பிட்டுள்ளார்.

பத்தாம் நூற்றாண்டிலும்கூட, லக்மன் பெரிய இந்தியாவுடன் (இந்தியப் பண்பாடு) இணைந்திருந்தது. கி.பி. 982இல் இந்தப் பகுதியில் சில உருவ வழிபாட்டு கோயில்கள் பயன்பாட்டில் இருந்துள்ளன.[7]

அண்மைய வரலாறு

[தொகு]
2011இல் ஆளுநர் இக்பால் அஸிஸி உடன் அமெரிக்க இராணுவத் தளபதி டேவிட் பெட்ரீயஸ் நடைபயிற்சி மேற்கொள்ளுதல்.

ஆப்கான் சோவியத் போரின்போதும் மற்றும் போராளிக் குழுக்களுக்கு இடையே நடந்த சண்டையின்போதும், மாகாணத்தில் பல வீடுகளும் வர்த்தக நிறுவனங்களும் அழிக்கப்பட்டன. மேலும் சோவியத்து படைகள் லக்மானின் வேளாண் உள்கட்டமைப்பு வசதிகளை இலக்காகக் கொண்டு அழித்ததை ஒரு உத்தியாக பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.[8]

2007 ஆம் ஆண்டு அமெரிக்கா தலைமையிலான சர்வதேச பாதுகாப்பு உதவிப் படையின் மாகாண மறுசீரமைப்பு குழுவானது மிஹ்தரம்லத்தில் அமைக்கப்பட்டது.

அரசியலும், நிர்வாகமும்

[தொகு]

மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் பாஸ்லுல்லா முஜாதிடி ஆவார். மாகாணத்தின் தலைநகராக மிக்டார்லம் நகரம் உள்ளது. மாகாணத்தின் அனைத்து சட்ட அமலாக்க நடவடிக்கைகளும் ஆப்கானிய தேசிய காவல்துறை (ஏஎன்பி) மூலம் கையாளப்படுகிறது. ஆப்கான் உள்துறை அமைச்சகத்தின் பிரதிநிதியாக மாகாணத்துக்கு காவல் தலைவர் நியமிக்கப்படுகிறார. ஏஎன்பி உட்பட, மற்ற ஆப்கான் தேசிய பாதுகாப்பு படை (ஏஎன்எஸ்எப்) போன்றவற்றிற்கு நேட்டோ தலைமையிலான படைகளின் ஆதரவு உள்ளது.

நலவாழ்வு பராமரிப்பு

[தொகு]

இந்த மாகாணத்தில் தூய்மையான குடிநீர் கிடைக்கக்கூடிய மக்களின் எண்ணிக்கை 2005 ஆம் ஆண்டு 39% என்ற விகிதத்தில் இருந்தது, இது 2011 ஆண்டு 34% என குறைந்துள்ளது.[9] திறமையான பிரசவ உதவியாளர் மூலமாக பிரசவம் பார்க்கும் மக்களின் விழுக்காடு 2005 ஆண்டில் 3 % என்ற எண்ணிக்கையில் இருந்து 2011 ஆண்டு 36 % என உயர்ந்தது.

கல்வி

[தொகு]

மொத்த கல்வியறிவு விகிதம் (6+ வயதுக்கு மேற்பட்டவர்களில்) 2005 ஆண்டு 14% என்று இருந்தது. 2011 இல் இது 26% என உயர்ந்துள்ளது.

மக்கள்வகைப்பாடு

[தொகு]
ஆப்கானித்தானின் இனக்குழுக்கள்.
லக்மான் மாகாண மாவட்டங்கள்

இந்த மாகாணத்தின் மக்கள் தொகையானது சுமார் 424,100 ஆகும். இவர்கள் பல இனமாக்களாகவும், கிராமப்புறப் பகுதிகளைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர்.[1] கடற்படை முதுநிலை பட்டப்படிப்பு பள்ளியின் 2010 ஆண்டு ஆய்வின்படி மாகாணத்தில் உள்ள இனக்குழுக்கள் பின்வருமாறு: 51% பஷ்டூன், 21% தாஜிக், 27% பசாய் மற்றும் நர்சிணி (காடா).[10][11] லக்மான் மாகாண மக்களில் பெரும்பான்மையோர் சுன்னி முஸ்லீம்கள் ஆவர்.

உள்கட்டமைப்பும், பொருளாதாரமும்

[தொகு]
அமெரிக்க விமானப்படையைச் சேர்ந்த உறுப்பினர்கள் மிஸ்ரர்லாமில் உள்ள குறுகலான சாலை வழியாக வாகனம் கடக்கும் ஒரு பாலத்தை கீழே ஆய்வு செய்கின்றனர்.

லக்மான் மாகாணத்தின் வழியாக அலிங்கார் மற்றும் அலின்ஷா ஆகிய ஆறுகள் பாய்கின்றன. இதனால் இது நீர்வளம் மிக்கதாக உள்ளது. லக்மானில் இருந்து பலவகையான பழங்கள் மற்றும் காய்கறிகளை காபூலுக்கு அனுப்பப்படுகின்றன. லாகமனில் விளையும் மற்ற முக்கிய பயிர்களாக அரிசி, கோதுமை, பருத்தி ஆகியவை ஆகும். மாகாணத்தில் உள்ளபெரும்பாலான மக்கள் விவசாயம் வணிகம் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளனர்.

லக்மான் மாகாணத்தில் விலைமதிப்பற்ற கற்களும், தாதுப்பொருட்களும் உள்ளன.[12] இது மாகாணத்தின் வடக்கு பகுதிகளில் ஏராளமாக இருக்கும் என தெரியவருகிறது.[13]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Settled Population of Laghman province by Civil Division, Urban, Rural and Sex-2012-13" (PDF). Islamic Republic of Afghanistan, Central Statistics Organization. Archived from the original (PDF) on 2014-02-26. பார்க்கப்பட்ட நாள் 2013-06-17.
  2. Cultural policy in Afghanistan; Studies and documents on cultural policies; 1975
  3. "AŚOKA". iranicaonline.org.
  4. Henning, W. B. (2 April 2018). "The Aramaic Inscription of Asoka Found in Lampāka". Bulletin of the School of Oriental and African Studies, University of London 13 (1): 80–88. 
  5. Kurt A. Behrend. Handbuch Der Orientalistik: India. The Buddhist Architecture of Gandhara, Part 2, Volume 1. p. 39.
  6. THE MAHAMAYURI VIDYARAJNI SUTRA 佛母大孔雀明王經, Translated into English by Cheng Yew Chung based on Amoghavajra’s Chinese Translation (Taisho Volume 19, Number 982)
  7. Schimmel, Annemarie. "Islam in India and Pakistan". In Bosworth, CE; van Donzel, E; Lewis, B; Pellet, Ch. (eds.). The Encyclopaedia of Islam, Volume V. p. 649. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-07819-3.
  8. How the Weak Win Wars: A Theory of Asymmetric Conflict, Arreguin-Toft, pg. 186
  9. Archive, Civil Military Fusion Centre பரணிடப்பட்டது 2014-05-31 at the வந்தவழி இயந்திரம்
  10. "Welcome - Naval Postgraduate School" (PDF). www.nps.edu. பார்க்கப்பட்ட நாள் 2 April 2018.
  11. "Laghman Province". Program for Culture & Conflict Studies. Naval Postgraduate School. பார்க்கப்பட்ட நாள் 2013-06-16.
  12. "Pegmatites of Laghman, Nuristan, Afghanistan". palagems.com.
  13. Gemstones of Afghanistan, Chamberline, pg. 146

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=லக்மான்_மாகாணம்&oldid=3570064" இலிருந்து மீள்விக்கப்பட்டது