பாக்ராம்
பாக்ராம்
Bagram | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 34°58′N 69°18′E / 34.967°N 69.300°E | |
நாடு | ஆப்கானித்தான் |
மாகாணம் | பர்வான் |
மாவட்டம் | பாக்ராம் |
ஏற்றம் | 4,895 ft (1,492 m) |
நேர வலயம் | + 4.30 |
பாக்ராம் (Bagram) (بگرام Bagrām) ஆப்கானிஸ்தான் நாட்டின் பர்வான் மாகாணத்தில் [1]உள்ள பாக்ராம் மாவட்டத்தின் தலைமையிட நகரம் ஆகும். [2]இந்நகரத்தில் கிரேக்கம் மற்றும் அரமேய மொழிகளில் எழுதப்பட்ட அசோகர் கல்வெட்டுக்கள் உள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் நகரத்திலிருந்து வடக்கே 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பண்டைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பக்ராம் நகரம் பட்டுப் பாதையில் உள்ளது. [3] இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 4,895 அடி (1,492 மீ) உயரத்தில் உள்ளது.
வரலாறு
[தொகு]பண்டைய வரலாறு
[தொகு]இதிகாசம் மற்றும் புராணங்களின் பக்ராம் பகுதியை காம்போஜர்கள் ஆண்டதாக குறிப்பிடுகிறது. சமசுகிருத மொழியில் பாக்ராம் என்பதற்கு ராமனின் தோட்டம் எனப்பொருளாகும். [4]
தியாடோச்சி ஆட்சிக் காலத்தில், கிரேக்கப் படைத்தலைவர்கள் தங்களுக்குள் போரிட்டுக் கொண்டிருந்த நேரத்தில், மௌரிய வம்சத்தை நிறுவிய சந்திரகுப்த மௌரியர், தனது ஆட்சியை பாரத நாட்டை வடக்கிலும், வட மேற்கிலும் விரிவு படுத்தினார்.
கிபி 305ல் கிரேக்க செலூக்கியப் பேரரசர், செலூக்கஸ் நிக்காத்தர் - சந்திரகுப்த மௌரியரும் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, தற்கால தெற்கு ஆப்கானிஸ்தானின் அரசோசியா, காந்தாரம் மற்றும் பாக்ராம் பகுதிகள் மௌரியர்களின் கட்டுப்பாட்டில் வந்தன. 120 ஆண்டு கால மௌரிய ஆட்சியில் பாக்ராம் நகரப் பகுதிகளில் பௌத்தம் அறிமுகப்படுத்தப்பட்டது.
கங்கைச் சமவெளி முதல் காபூல் வரை சாலை அமைக்கப்பட்டது. அசோகர் காலத்தில் இப்பகுதிகளில் வணிகம், கலை, இலக்கியம், தொழில் மற்றும் பௌத்த தூபிகள் நிறுவுதல் சொழித்தோங்கியது.
அசோகரது அவையில் பிராகிருதத்துடன் கிரேக்கம் மற்றும் அரமேய மொழிகளும் பயிலப்பட்டது.
பாக்ராம் பகுதியில் கிரேக்கம் மற்றும் அரமேய மொழிகளில் எழுதப்பட்டிருந்த அசோகர் கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளது.
கிபி முதல் நூற்றாண்டில் பாக்ராம் நகரம் குசானர்களின் தலைநகரமாக இருந்தது. பின்னர் தற்கால பாகிஸ்தானின் பெஷாவர் நகரத்தை கனிஷ்கர் கைப்பற்றினார்.
இப்பகுதிகளின் பண்டைய தொல்பொருட்கள் கிரேக்க, உரோமானிய, சீன மற்றும் இந்தியக் கலைநயத்துடன் கூடியிருந்தது.
இசுலாமிய படையெடுப்புகள்
[தொகு]கிபி ஏழாம் நூற்றாண்டில் இசுலாமியர்கள் பாரசீகம் மற்றும் ஆப்கானிஸ்தானை கைப்பற்றினர்.
இருப்பினும் கஜினி முகமது காலத்தில் தான் பாக்ராம் முழுமையாக இசுலாமிய மயமானது.
மொகலாய மன்னர் பாபர் தான் தற்கால பாக்ராம் நிறுவியதாக கருதுகின்றனர்.[5]
தற்கால வரலாறு
[தொகு]பாக்ராம் நகரம், அமெரிக்காவின் போர் விமான தளமாகப் பயன்படுகிறது.
மேலும் அமெரிக்கர்கள் பாக்ராம் பகுதியில் ஒரு காவல் தடுப்பு மையத்தை பராமரித்துக் கொண்டிருந்தனர். 25 மார்ச் 2013ல் இதனை ஆப்கானிஸ்தான் அரசிடம் கொடுத்து விட்டனர்.[6]
படக்காட்சிகள்
[தொகு]பாக்ராம் நகரத்தில் கிடைத்த, கிபி ஒன்றாம் நூற்றாண்டு காலத்திய கலைப் பொருட்கள்
-
யானை தந்தத்தில் செய்த பண்டைய இந்தியப் பெண்களின் சிற்பங்கள்
-
யானை தந்தத்தில் செய்த குதிரை வீரன் சிற்பம்
-
வண்ண நிற கண்ணாடி பாட்டில்
-
மீன் வடிவில் செய்யப்பட்ட நீர் பாத்திரம்
-
யானை தந்தத்தில், கிரேக்க கலைநயத்தில் வடிக்கப்பட்ட பெண் சிற்பம்
அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑ Parwan Province
- ↑ Bagram
- ↑ Cunningham (1871), pp. 16-27
- ↑ Bhattacharya, Avijeet. Journeys on the Silk Road Through Ages. Zorba. p. 192. பார்க்கப்பட்ட நாள் 19 January 2018.
- ↑ Bhattacharya, Avijeet. Journeys on the Silk Road Through Ages. Zorba. p. 192. பார்க்கப்பட்ட நாள் 19 January 2018.
- ↑ Aljazeera news: US hands over Bagram prison to Afghanistan, 25 March 2013
மேற்கோள்கள்
[தொகு]- The Ancient Geography of India. I. The Buddhist Period, Including the Campaigns of Alexander, and the Travels of Hwen-Thsang. Alexander Cunningham. Trübner and Co., London. Complete and unabridged reprint (2006): Low Price Publications, Delhi.
- Afghanistan: Hidden Treasures from the National Museum, Kabul (2008). Eds., Friedrik Hiebert and Pierre Cambon. National Geographic, Washington, D.C. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4262-0374-9.
வெளி இணைப்புகள்
[தொகு]- Map of Bagram and the surrounding area பரணிடப்பட்டது 2011-06-15 at the வந்தவழி இயந்திரம், Afghanistan Information Management Service (AIMS)
- Human Rights First; Undue Process: An Examination of Detention and Trials of Bagram Detainees in Afghanistan in April 2009 (2009) பரணிடப்பட்டது 2010-12-24 at the வந்தவழி இயந்திரம்
- Human Rights First; Arbitrary Justice: Trial of Guantánamo and Bagram Detainees in Afghanistan (2008)