நங்கர்கார் மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நங்கர்கார்
Nangarhar
மாகாணம்
நங்கார்கர் மாகாணத்தில் ஒரு அமெரிக்க இராணுவ உலங்கு வானூர்தி (2013 திசம்பர்)
நங்கார்கர் மாகாணத்தில் ஒரு அமெரிக்க இராணுவ உலங்கு வானூர்தி (2013 திசம்பர்)
ஆப்கானிஸ்தானில் நங்கர்கார் மாகாண உயர்நிலத்தைக் காட்டும் வரைபடம்
ஆப்கானிஸ்தானில் நங்கர்கார் மாகாண உயர்நிலத்தைக் காட்டும் வரைபடம்
ஆள்கூறுகள் (Capital): 34°15′N 70°30′E / 34.25°N 70.50°E / 34.25; 70.50ஆள்கூறுகள்: 34°15′N 70°30′E / 34.25°N 70.50°E / 34.25; 70.50
நாடு ஆப்கானித்தான்
தலைநகரம்ஜலாலாபாத்
அரசு
 • ஆளுநர்ஹயட்டல்லா ஹயத்[1]
பரப்பளவு
 • மொத்தம்7,727 km2 (2,983 sq mi)
மக்கள்தொகை (2013)[2]
 • மொத்தம்14,36,000
 • அடர்த்தி190/km2 (480/sq mi)
நேர வலயம்GMT+4:30
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுAF-NAN
முதன்மை மொழிகள்பஷ்தூ, பாரசீகம்

நங்கர்கார் (Nangarhār (பஷ்தூ: ننګرهار; Persian: ننگرهار‎) என்பது ஆப்கானிஸ்தானின் முப்பத்தி நான்கு மாகாணங்களில் ஒன்றாகும். இது நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மாகாணமானது, இருபத்து இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மாகாணத்தின் மக்கள் தொகை 1,436,000. ஆகும். நங்கர்கார் மாகாணத்தின் தலைநகராக ஜலாலாபாத் நகரம் உள்ளது.

வரலாறு[தொகு]

நங்கர்கார் மாகாணமானது முதலில் அகாமனிசியப் பேரரசுக்கு உட்பட்ட, காந்தாரதேச மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. நங்கர்கார் மாகாணப் பகுதியைம், கிழக்கு ஈரானிய பகுதியும் சந்திரகுப்த மவுரியின் தலைமையிலான மௌரிய பேரரசால் கைப்பற்றப்பட்டது. மௌரியர்களால் இப்பிரதேசத்தில் இந்து, பௌத்த சமயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும் மௌரியர்கள் மத்திய ஆசியாவில் இன்னும் பல பிரதேசங்களை உள்ளூர் பாக்டிரியன் படைகளிடம் இருந்து கைப்பற்றும் நோக்கத்துடன் திட்டமிட்டு இருந்தனர் இதனால் செலியூஷியா சந்திரகுப்த மௌரியருடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டு, இந்துகுஷ் மலைகளுக்கு தெற்குப் பிரதேசத்தை மௌரியர்கள் கட்டுப்பாட்டில் விடுத்து, 500 யானைகளை பரிசாக அளித்தான்.

வடமேற்கில் தங்களை வலுப்படுத்திக் கொண்ட, சந்திரகுப்தர் நந்த பேரரசை கிழக்கு நோக்கி நகர்த்தினார். ஆப்கானிஸ்தான் நாட்டில் குறிப்பிடத்தக்க அளவில் பண்டைய புத்த மத பாரம்பரிய மற்றும் கலை மிச்சங்கள் பரந்த அளவிலான தொல்லியல் கண்டுபிடிப்புகள் மூலம் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன. வரலாற்றில் கௌதம புத்தர் (கி.மு 563 முதல் 483) தன் வாழ்நாளில் பால்க் பகுதிக்கு வரவில்லை என, தன் பதிவுகளில் கூறுகிறார் சுவான்சாங்.

கி.பி. 520இல் நங்கர்கார் பகுதிக்கு வந்த சாங் யூன் என்ற ஒரு சீன துறவி இந்தப் பகுதி மக்கள் பெளத்தர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் சாங் யூன் புத்தரின் புனித தோள்பட்டை எலும்பு கொண்ட ஒரு விகாரையானது நங்கர்கார் (நா-ல்கா-லோ-ஹு) பகுதியில் இருந்த‍தையும், க‍க்லாம் (லக்மான் மாகாணத்தில் உள்ள மிக்டார்லம்) என்ற இடத்தில் புத்தரின் 18 அடி உடைய மேலாடையின் 13 துண்டுகள் பாதுகாக்கப்படுவதையும், நாக்கி நகரில், புத்தர் ஒரு பல் மற்றும் முடி பாதுகாக்கப்பட்டுவருவதையும் குறிப்பிட்டுள்ளார்.[3]

10 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஜெயபாலன் தோற்கடிக்கப்பட்ட பின்னர் இந்த பிரதேசம் கஜினி பேரரசின் வசமானது.[4][5][6] பின்னர் இப்பகுதியை கில்ஜி வம்சம், லௌதி வம்சம், முகலாயப் பேரரசு போன்றவை ஆண்டன. இதன்பிறகு 1747 இல் துராணிப் பேரரசின், அகமது ஷா துரானியால் கைப்பற்றப்பட்டது.

முதல் ஆங்கிலோ-ஆப்கானிய போரின் போது, பிரித்தானியர் தலைமையிலான இந்தியப் படைகள் 1842 இல் ராவல்பிண்டிக்கு செல்லும் வழியில் தோற்கடிக்கப்பட்டன. பிரித்தானியர் தலைமையிலான இந்தியப் படைகள் 1878 ஆம் ஆண்டில் மீண்டும் வந்தன, ஆனால் சில ஆண்டுகளுக்கு பின்னர் அவை பின்வாங்கின. 1919 ஆம் ஆண்டு மூன்றாம் ஆங்கிலோ-ஆப்கானியப் போரின்போது அரசர் அமனுல்லாகான் தலைமையிலான ஆப்கான் படைகளுக்கும், பிரித்தானிய இந்தியப் படைகளுக்கும் இடையில் துராந்து எல்லைப் பகுதியில் சில சண்டைகள் நடந்தன.

1980 களில் ஆப்கான் சோவியத் போர் வரை இந்த மாகாணம் ஒப்பீட்டளவில் அமைதியாக இருந்தது. இப்போர் நடந்த காலத்தில் சோவியத் ஆதவு பெற்ற, ஆப்கானிஸ்தான் ஜனநாயக குடியரசுக்கு எதிராக பாக்கித்தான் ஆதரவு முஜாகிதின்கள் (கிளர்ச்சிப் படைகள்) நங்கர்கார் பகுதியைப் பயன்படுத்திக் கொண்டன. பாக்கித்தானில் பயிற்சி பெற்ற முஜாகிதீன்களுக்கு அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியாவிலிருந்து நிதியுதவி கிடைத்த‍து. அரேபு நாடுகளில் இருந்து வந்த பல அரபு போராளிகள் முகமது நஜிபுல்லாவின் அரசு படைகளுக்கு எதிராக போராடினர், இறுதியாக முஜாகிதீன்கள் ஜலாலாபாத்திற்கு அருகே அவர்களை தோற்கடித்தனர். 1992 ஏப்ரலில், சனாதிபதி நஜிபுல்லா பதவி விலகினார். இதன்பிறகு பல்வேறு முஜாஹிதீன் குழுக்கள் நாட்டை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தன. 1992 இல் பெஷாவர் உடன்படிக்கை தோல்வியடைந்த பிறகு, முஜாகிதீன்கள் தங்களுக்குள் துப்பாக்கிகளை ஏந்தினர். இதனால் நாடு முழுவதும் உள்நாட்டுப் போர் துவங்கியது. இப்பகுதியை 1996 இல் தலிபான்கள் கைப்பற்றினர். அதன்பிறகு நங்கர்கார் மாகாணத்தில் அல் கொய்தா பயிற்சி முகாம்கள் நிறுவப்பட்டன.[சான்று தேவை]

அண்மைய வரலாறு[தொகு]

குனார் ஆற்றின் கிளையாறு நங்கர்காரில் காபூல் ஆற்றுடன் கலக்கிறது.

1990களின் பிற்பகுதியில் நங்கர்காரில் ஒசாமா பின் லேடன் வலுவாக இருந்தார். 2001 டோரா போரா போர்த் தொடரில் அமெரிக்க தலைமையிலான படைகளுக்கு எதிராக இவர் போரை நடத்தினார். இறுதியில் இவர் பாக்கித்தானின் அபோதாபாத்துக்கு, தப்பிச் சென்றார், அங்கு அவர் 2011இல் ஒரு இரவுத் தாக்குதலில், சீல் குழுவைச் சேர்ந்த ஆறு வீர‍ர்களால் கொல்லப்பட்டார்.

2001 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தலிபான்கள் அகற்றப்பட்டு, கர்சாய் தலைமையிலான நிர்வாகம் உருவான பின்னர், அமெரிக்காவின் தலைமையிலான சர்வதேச பாதுகாப்பு உதவிப் படை (ISAF) மற்றும் ஆப்கானிய தேசிய பாதுகாப்பு படைகள் (ANSF) படிப்படியாக இப்பகுதியின் பாதுகாப்பை தங்கள் வசம் எடுத்துக்கொண்டன. இருந்த போதிலும், தலிபான் கிளர்ச்சியாளர்கள் ஆப்கானிய அரசாங்கப் படைகளுக்கு எதிரான தாக்குதலை தொடர்கின்றனர். ஹக்கானி வலைப்பின்னல் மற்றும் ஈராக் இஸ்லாமிய அரசு மற்றும் லெவந்த்-கொராசான் மாகாண போராளிகள் (ISIL-KP) போன்ற தீவிரவாதிகள் போன்றோர் இந்த தாக்குதல்களுக்கு காரணம் என்று குற்றம் சாட்டுகின்றனர், சில சமயங்களில் பெரும் தற்கொலை குண்டு வெடிப்புகளும் நிகழ்த்தப்படுகின்றன. துராந்து எல்லைப் பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் பாகிஸ்தானிய இராணுவப் படைகளால் பல அத்துமீறல்கள் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டப்படுகிறது. மோதல் மையமாக காபுல் மற்றும் குனார் ஆற்றுப் பகுதிகள் உள்ளன, இந்த ஆறுகள் நங்கர்காரின் வழியாக பாய்கின்றன.

அரசியலும், நிர்வாகமும்[தொகு]

அமெரிக்க மற்றும் ஆப்கானிய தேசிய பாதுகாப்பு படைகள்.

மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் ஹயத்துல்லா ஹயாத் ஆவார்.பிழை காட்டு: Invalid <ref> tag; invalid names, e.g. too many அவருக்கு முன்பிருந்த சாலிம் கான் குன்டுசி, 2016 அக்டோபர் 22 அன்று பதவி விலகினார். குல் அகா ஷெர்சே 2004 முதல் ஆளுநராகப் பணியாற்றினார், ஆனால் 2014 ஆப்கானிய ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக விலகினார். மாகாணத்தின் தலைநகராக ஜலாலாபாத் நகரம் மாநிலத்தின் தலைநகரமாக விளங்குகிறது.

மாகாணத்தின் அனைத்து சட்ட அமலாக்க நடவடிக்கைகளும் ஆப்கானிய தேசிய காவல்துறையும் (ஏஎன்பி) ஆப்கான் உள்ளூர் காவல் துறையும் இணைந்து கையாள்கின்றன. அண்டை நாடான பாக்கிஸ்தானுடனான எல்லைப் பகுதிகளை ஆப்கான் எல்லைக் காவல் துறையால் (ஏபிபீ) கண்காணிக்கப்படுகிறது. ஆப்கானிய எல்லை பொலிசு மற்றும் ஆப்கானிய தேசிய பொலிசு போன்றவற்றை மாகாண காவல்துறைத் தலைவர் வழிநடத்துகிறார். இவர் காபூல் உள்துறை அமைச்சகத்தின் பிரதிநிதியாக உள்ளார். ஏஎன்பி உட்பட, மற்ற ஆப்கான் தேசிய பாதுகாப்பு படை (ஏஎன்எஸ்எப்) போன்றவற்றிற்கு நேட்டோ தலைமையிலான படைகளின் ஆதரவு உள்ளது.

நங்கர்காரி மாகாணத்தின் எல்லைகளானது பாக்கித்தானின் நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள் மற்றும் கைபர் மாகாண எல்லைகளை ஒட்டி உள்ளது. இந்த மூன்று பகுதிகளும் மிக நெருக்கமாக உறவு கொண்டுள்ளன, குறிப்பிடத்தக்க அளவு பயணமும் வர்த்தகமும் இரு திசைகளிலும் நடக்கின்றன.

நலவாழ்வு பராமரிப்பு[தொகு]

இந்த மாகாணத்தில் தூய்மையான குடிநீர் கிடைக்கக்கூடிய மக்களின் எண்ணிக்கை 2005 ஆம் ஆண்டு 43% என்ற விகிதத்தில் இருந்தது, இது 2011 ஆண்டு 8% என குறைந்துள்ளது.[7] திறமையான பிரசவ உதவியாளர் மூலமாக பிரசவம் பார்க்கும் மக்களின் விழுக்காடு 2005 ஆண்டில் 22 % என்ற எண்ணிக்கையில் இருந்து 2011 ஆண்டு 60 % என உயர்ந்தது.

கல்வி[தொகு]

நங்கர்காரி பல்கலைக்கழகமானது மாகாண தலைநகரான ஜலாலாபாத்தில் அமைந்துள்ளது. அரசு நிதியுதவியுடன் நடத்தப்படும் இப் பல்கைலக் கழகத்தில் இப்பகுதியில் இருந்து கிட்டத்தட்ட 6,000 மாணவர்கள் உயர் கல்வி பெறுகின்றனர்.

மாகாணத்தில் பல பள்ளிகள் இயங்குகின்றன, இவை மாணவ மாணவிகளுக்கு அடிப்படைக் கல்வியை அளித்து வருகின்றன. மொத்த கல்வியறிவு விகிதம் (6+ வயதுக்கு மேற்பட்டவர்களில்) 2005 ஆண்டு 29% என்று இருந்தது. 2011 இல் இது 31% என உயர்ந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

ஆப்கானித்தானின் இனக்குழுக்கள்.
நங்கர்காரி மாகாண மாவட்டங்கள்

2013 ஆம் ஆண்டு காலகட்டத்தில், மாகாணத்தின் மொத்த மக்கள் தொகை 1,436,000 ஆகும்.[2] தி இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் தி ஸ்டடி ஆஃப் வார் நிறுவனத்தின் ஆய்வின்படி, "மக்கள் தொகையில் மிகுதியானவர்கள் Pashtun; பத்து விழுக்காடுக்கும் குறைவான எண்ணிக்கையில் பசாய், தாஜிக், அரபு அல்லது பிற சிறுபான்மையினர் உள்ளனர்."[8] கடற்படை முதுநிலை பட்டப்படிப்பின்படி, மாகாணத்தின் இன குழுக்கள் பின்வருமாறு: 91.1% பஷ்டூன்; 3.6% பசாய்; 2.6% அரபு; 1.6% தாஜிக்; 2.1% பிறர் ஆவர்.[9]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Governor of eastern Afghan province sacked as security worsens" (in English). Reuters. 14 May 2018. https://www.reuters.com/article/us-afghanistan-governor/governor-of-eastern-afghan-province-sacked-as-security-worsens-idUSKCN1IF1U5. பார்த்த நாள்: 15 May 2018. 
  2. 2.0 2.1 "Settled Population of Nangargar province by Civil Division, Urban, Rural and Sex-2012-13" (PDF). Islamic Republic of Afghanistan, Central Statistics Organization. 2018-11-23 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2014-10-21 அன்று பார்க்கப்பட்டது.
  3. Chinese Travelers in Afghanistan. Alamahabibi.com. Retrieved on 2013-07-12.
  4. "AMEER NASIR-OOD-DEEN SUBOOKTUGEEN". Ferishta, History of the Rise of Mohammedan Power in India, Volume 1: Section 15. Packard Humanities Institute. 2018-12-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-12-31 அன்று பார்க்கப்பட்டது.
  5. Houtsma, Martijn Theodoor (1987). E.J. Brill's first encyclopaedia of Islam, 1913–1936. 2. BRILL. பக். 151. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:90-04-08265-4. https://books.google.com/books?id=GEl6N2tQeawC&lpg=PP1&pg=PA151#v=onepage&q&f=false. பார்த்த நாள்: 24 September 2010. 
  6. "Afghan and Afghanistan". Abdul Hai Habibi. alamahabibi.com. 1969. 2012-07-01 அன்று பார்க்கப்பட்டது.
  7. Archive, Civil Military Fusion Centre, https://www.cimicweb.org/AfghanistanProvincialMap/Pages/Nangarhar.aspx பரணிடப்பட்டது 2014-05-31 at the வந்தவழி இயந்திரம்
  8. "Nangarhar Province". Understanding War. 2014-10-21 அன்று பார்க்கப்பட்டது.
  9. "Nangarhar Province" (PDF). Program for Culture & Conflict Studies. Naval Postgraduate School. 2014-10-21 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நங்கர்கார்_மாகாணம்&oldid=3559860" இருந்து மீள்விக்கப்பட்டது