ஹெறாத் நகரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹெறாத்
هرات
மாநகரம்
Overview of Herat City
Herat International Airport
View from the Herat Citadel
A view of the Old City from the Citadel
Citadel of Herat
Friday Mosque of Herat
Musalla Complex
From top left to right: Overview of Herat City; Herat Airport; View from the Herat Citadel; A view of the Old City from the Citadel; Citadel of Herat; Friday Mosque of Herat; Musalla Complex
நாடு ஆப்கானித்தான்
மாகாணம் ஹெறாத்
ஏற்றம்920 m (3,020 ft)
மக்கள்தொகை (2013)
 • மொத்தம்4,36,300
நேர வலயம்ஆப்கானித்தான் நேரப்படி (ஒசநே+4:30)

ஹெறாத் (Herat; சொற்பொருள்:He·rat \he-ˈrät, hə-\;[1] ஆங்கிலம்: Herat; பாரசீகம்: هرات; பஷ்தோ: هرات) இது தெற்காசிய நாடான ஆப்கானித்தான் இரண்டாவது பெருநகரமாகும். ஹரி ஆற்றின் வளமான பள்ளத்தாக்கின் பகுதியில் அமைந்துள்ள மாகாணத் தலைநகரான ஹெறாத்தில், சுமார் 808.110[2] மேலாக மக்கள்தொகை கொண்டதாக அறியப்பட்டது. இந்தப் பெருநகரத்தின் ஒரு நெடுஞ்சாலை கந்தகார் பெருநகரத்துடன் இணைக்கப்பட்டள்ளது. இதன் இடைப்பட்ட தூர அளவு 572 கிலோமீட்டரும், சாலைமார்க்கப் பயணம் 9.20 நிமிடங்களும், வான் வழிப் பயணம் 4.20 நிமிடங்கள் என்றும் கண்டறியப்பட்டது. ஆப்கானித்தான் தலைநகர் காபூல் ஹெறாத்திலிருந்து 817 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சாலைவழி ஊர்திப் பயணம் 12.18 நிமிடமும், வானூர்திப் பயணம் 1.18 நிமிடங்களாக உள்ளது.

ஆட்சிகள்[தொகு]

ஹெறாத் பெருநகரில், ஹெறாத் அரண்மனை, மொசல்லா வளாகம் என பல வரலாற்றுத் தளங்கள் உள்ளன. மத்திய காலங்களில், கோர்சன் பேர்ல் எனும் நகரம், முக்கிய நகரங்களில் ஒன்றாக இருந்தது.[3] அது 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல ஆப்கானியர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்துள்ளது.[4] அவர்கள், 1717 ஆண்டுமுதல்-1736 வரையில், அப்சரிட்ஸ் நகரத்தை ஆண்டனர் பின்பு ஓடாகி படைகள் தாக்குதல் நடத்தி அந்நகரை கைப்பற்றியது. அடுத்துவந்த காலங்களில் நதீர் சா மறைவுக்குப்பின் 1747ல் அகமது சா துரானி ஆட்சியில் எழுச்சியடைந்ததால் ஆப்கானிஸ்தான் இதய பகுதியாக மாறியது.[5]மேலும், அது சில அரசியல் இடையூறுகளையும், இராணுவ நடவடிக்கைகளையும் சந்தித்தது 19 ஆம் நூற்றாண்டின் பாதியில் 1857 ஆம் ஆண்டுவாக்கில் பாரிசு உடன்படிக்கையின்படி ஆங்கிலோ-பாரசிக யுத்தம் முடிவுக்கு வந்தது.[6] ஹெறாத் 1980 களில் சோவியத் யுத்ததின் போது பரவலான பகுதிகள் அழிவுக்கு ஆட்பட்டது, ஆனாலும் ஒருசில குறிப்பிட்ட பகுதிகள் காப்பாற்றப்பட்டன.

அக அமைப்புகள்[தொகு]

ஹெறாத் நகரம், பண்டைய வர்த்தக மார்க்கமாக உள்ள மத்திய கிழக்கு, மத்திய மற்றும் தெற்கு ஆசியாவில் அமைந்துள்ளது. ஹெறாத் நகரத்திலிருந்து ஈரான், துருக்மெனிஸ்தான் ,மற்றும் ஆப்கானிஸ்தான் மற்ற பகுதிகளுக்கும் சாலை இணைப்புகள் இன்றும் முக்கியம் வாய்ந்ததாக காணபடுகின்றது. ஈரான் நுழைவாயில் என்றழைக்கப்படும், ஆப்கானித்தான் சுங்கவருவாய்துறை அதிகளவு சேகரிப்பதாக அறியப்படுகிறது.[7] இந்த தலைநகரில் ஒரு சர்வதேச வானூர்தி தளமும் இருக்கிறது.

குடியமைப்புகள்[தொகு]

ஈரான், துருக்மெனிஸ்தான், மற்றும் மேற்கு ஆப்கானிஸ்தான் அருகருகே அமைந்ததால் ஹெறாத் ஒரு மத்திய பிராந்தியமாக உள்ளது. நகரின் மையப்பகுதியில் (சுற்றி கொத்திடல்)உயர்நிலை குடியிருப்புகள் அதிகளவில் காணப்படுகிறது. எனினும் நகரின் அடுக்குமாடி குடியிருப்புகளின் பயன்பாடு (18%) சதவிகிதமும், நில குடியிருப்புகள் (21%) ம், கணக்குப்படி மொத்த வேளாண்மை நில பயன்பாடு (36%) இது அதிக சதவிகிதமாகும்.[8]

வரலாறு[தொகு]

தாலமியின் புனரமைக்கப்பட்ட வரைபடம்: (2 ஆம் நூற்றாண்டில் ஏரியா மாகாணமும், 15 ஆம் நூற்றாண்டின் அண்டை மாநிலங்களும். செருமானிய வரைபட நிபுணர் நிக்கொலஸ் செருமனசு

ஹெறாத், பண்டைய காலகட்டத்தை சேர்ந்ததாகும் ஆனாலும், அதன் ஆரம்ப வயதை இதுவரை அறியப்படவில்லை. (சிஏ 550-கிமு330) காலங்களில் அக்கீமேனிட் பேரரசு ஆண்டுள்ளனர், சுற்றியுள்ள மாவட்டங்களில் ஹரைவா (பழைய பாரசிகர்கள்) இருந்தாதாக அறியபடுகிறது. மற்றும் பாரம்பரிய மூலங்களின்படி அதையொட்டிய பிராந்தியத்தை "ஏரியா" என அழைக்கபடுகிறது. ஜோரோஸ்ட்ரியன் சமய நூலான அவெஸ்தாவில் ஹரோவியா என குறிப்பிடப்பட்டுள்ளது.[9] இந்த மாவட்டம், மற்றும் இந்நகரத்திற்கு இப்பெயர்பெற காரணம் இப்பகுதியில் ஓடும் பிரதான ஆற்றிலிருந்து தருவிக்கப்பட்டது. இம்மாவட்டத்தை கடந்து செல்கின்ற ஹரி ஆறு (Old Iranian Haryrud, "Silken Water"), தற்கால ஹெறாத் நகரிலிருந்து தெற்கே சுமார் 5 கிலோமீட்டர் (3.1 மைல்) தொலைவில் கடந்து செல்கிறது.[10]

மேற்கோள்கள்[தொகு]

உப இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹெறாத்_நகரம்&oldid=3573830" இருந்து மீள்விக்கப்பட்டது