சரத்துஸ்திர சமயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஃபர்வஹார், சரத்துஸ்திரத்தின் சின்னம்.

சரத்துஸ்தரின் தத்துவங்களை அடிப்படையாக கொண்ட சமயமே சரத்துஸ்திர சமயம் ஆகும். இச்சமயத்தினர் நெருப்பை வணங்குவர். இரண்டு இலட்சம் மட்டுமே இன்று இச்சமயத்தை பின்பற்றுகின்றனர். இந்தியாவில் இச்சமயத்தை பின்பற்றுபவர்களை பார்சிகள் என்று குறிப்பிடுகின்றனர். வரலாற்று ரீதியில் சோராசுதிரர் சமயம் ஒரு முக்கிய சமயமாகும். இதன் பிரதான நூலாகிய அவெசுதா பண்டைய பஹ்லவி மொழியில் எழுதப்பட்டது. கி.மு. ஆறாம் நூற்றாண்டளவில் இன்றைய ஈரானில் நிறுவப்பட்ட இச்சமயம் பாரசீகப் பேரரசின் அரசாங்க மதமாகப் பல நூற்றாண்டுகள் நிலைத்திருந்தது. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் பாரசீகப் பேரரசின் மீதான இஸ்லாமிய அரசின் வெற்றியைத் தொடர்ந்து இம்மதம் வலுவிழக்கத் தொடங்கியது.

இம்மதத்தைப் பின்பற்றுவோர் பண்டைக் காலத்தில் மாஜிகள் என அழைக்கப்பட்டனர். அரபியில் இவர்களை அழைக்கப் பயன்படும் மஜூசி என்ற சொல் இன்றும் அதே பொருளில் வழங்கப்படுகிறது. இவர்களின் அறிஞர்களில் மூவரே இயேசு பிறந்தபோது அவரைக் காணச் சென்றனரெனக் கருதப்படுகிறது. இவர்களின் அறிஞர்கள் பல்வேறு வித்தைகளில் தேர்ச்சிபெற்றவர்களாக இருந்தார்கள்.

இன்று சோராசுதிரர் சமயத்தைப் பின்பற்றுவோர் பல்வேறு நாடுகளிலும் சிதறி வாழ்கின்றனர். ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற சில முஸ்லிம் நாடுகளில் மிகச் சிறியளவினராக இருக்கும் இவர்கள் தங்களுடைய மதத்தை முஸ்லிம்களிடம் மறைத்தவர்களாக இருக்கிறார்கள். இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் கணிசமான தொகையினராகக் காணப்படும் இவர்கள் பார்சிகள் என்று அழைக்கப்படுகின்றார்கள். இச்சமயத்தினர் இறந்தோரைக் கழுகுக்கு இரையாகத் தரும் பழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர்.

தத்துவங்கள[தொகு]

சரத்துஸ்திர சமயத்தின் முக்தியைத் தத்துவங்கள இதே:

  • நல்லதையே நினை (Good thoughts)
  • நல்லதையே பேசு (Good words)
  • நல்லதையே செய் (Good deed)

மேற்கோள்கள்[தொகு]

  • Duncan Greenlees. The Gospel of Zarasthushtra. Chennai: Theosophical Publishing House. 

இதனையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சரத்துஸ்திர_சமயம்&oldid=1802880" இருந்து மீள்விக்கப்பட்டது