அனத்தோலியா
அனத்தோலியா அல்லது ஆசியா மைனர் என்று அழைக்கப்படும் நிலம் அல்லது நிலப்பரப்பு மேற்கு மேற்காசியாவில் தற்காலத்தில் துருக்கி என்னும் நாட்டின் பெரும்பகுதியும் அதனைச் சூழ்ந்த இடத்தையும் குறிக்கும். அனத்தோலியாவின் கிழக்கிலும், மேற்கிலும் ஏஜியன் கடலும், வடக்கே கருங்கடலும், வடகிழக்கே காக்கேசியமும், தென்கிழக்கே ஈரானிய மேட்டுநிலமும், தெற்கே நடுத்தரைக் கடலும் எல்லைகளாக கொண்டது. இவ்விடம் பல கலைப் பண்பாடுகளின் உறைவிடமாக வரலாற்றில் நெடுங்காலம் இருந்து வந்துள்ளது. அக்காடியன், அசிரியர்கள், இட்டைட்டு (Hittite), இற்றோயன் (Trojan) அல்லது இட்ரோச்சன், பிரிகியன் (Phrygian), இலிடியன் (Lydian), கிரேக்கம், அகாமனிசியப் பேரரசு (Achaemenid), ஆர்மீனியா, உரோமன், ரோமானியர், குர்து மக்கள், பைசாண்டைன், அனத்தோலியன் செல்யூக்கு (Anatolian Seljuk), ஆட்டோமன் ஆகிய பண்பாடுகள் இவ்விடத்தில் வளர்ந்து மலர்ந்தன.