அகாமனிசியப் பேரரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அகாமனிசியப் பேரரசு
هخامنشیان

 
[[புது பாபிலோனியப் பேரரசு|]]
 

 
[[எகிப்தின் இருபத்தி ஆறாம் வம்சம்|]]
கிமு 550–கிமு 330 [[செலூக்கியப் பேரரசு|]]
 
[[தாலமைக் பேரரசு|]]
 

அகாமனிசியப் பேரரசின் உயர்நிலையில் அதன் அளவு
தலைநகரம் எகபடனா, பாசர்கடீ, பெர்சப்பொலிஸ், சூசா
மொழி(கள்) பழைய பாரசீகம், ஈலமைட்டு மொழி, அக்காதியம்
அரசாங்கம் முடியாட்சி
பேரரசர்
 -  கிமு 550 –கிமு 529 முதலாம் சைரஸ்
 -  கிமு 336 –கிமு 330 மூன்றாம் டேரியஸ்
வரலாற்றுக் காலம் பண்டைய வரலாறு
 -  உருவாக்கம் கிமு 550
 -  பெர்சப்போலிசில் கட்டுமானம் தொடங்கியது கிமு 515
 -  எகிப்தை கம்பிசஸ் II கைப்பற்றுதல் கிமு 525
 -  கிரேக்க-பாரசீகப் போர்கள் கிமு 499–449
 -  வெற்றிகரமான எகிப்தியக் கலகம் எகிப்தின் விடுதலைக்கு வித்திட்டது. கி மு 404
 -  கைப்பற்றப்பட்டது கிமு 330
 -  பாக்திரியாவின் சத்ரப் பேசஸ் தாரியுஸ் III ஐக் கொன்றுவிட்டுத் தானே அரசன் ஆர்டக்சேர்க்செஸ் V ஆக முடிசூட்டிக் கொண்டான். கிமு 330
Warning: Value specified for "continent" does not comply

அகாமனிசியப் பேரரசு அல்லது அக்கீமெனிட் பேரரசு (பழைய பாரசீக மொழி: Haxâmanishiya,[1] ஹகாமனிசியப் பேரரசு, ஆங்கிலம்: Achaemenid Empire அகமனீதுப் பேரரசு, கிமு 550-330), அகன்ற அகன்ற ஈரானின் குறிப்பிடத்தக்க பகுதியை ஆண்ட முதல் பாரசீகப் பேரரசு என அழைக்கப்படுகிறது.[2] இதன் பலம் உயர்நிலையில் இருந்தபோது இது 7.5 மில்லியன் சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பைத் தன்னுள் அடக்கியிருந்தது. நிலப்பரப்பின் அடிப்படையில் செந்நெறிக்காலப் பேரரசுகளில் மிகப் பெரியது இதுவேயாகும்.

இப்பேரரசு சைரசு என்பவரால் நிறுவப்பட்டது. இது ஆப்கனிஸ்தான், பாகிஸ்தான் ஆகியவற்றின் பகுதிகள், நடு ஆசியா, சின்ன ஆசியா ஆகியவற்றின் பகுதிகள், பெரும்பாலான கருங்கடல் கரையோரப் பகுதிகள், ஈராக், வடக்கு சவூதி அரேபியா, ஜோர்தான், இஸ்ரேல், லெபனான், சிரியா, பண்டைய எகிப்து, லிபியா ஆகியவற்றை உள்ளடக்கி மூன்று கண்டங்களில் பரந்திருந்தது.

மேற்கத்திய வரலாற்றில் இப்பேரரசு, கிரேக்க-பாரசீகப் போர்களில் கிரேக்க நகர அரசுகளின் எதிரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பேரரசின் அளவும், அது நீண்டகாலம் நிலைத்திருந்ததும்; மொழி, சமயம், கட்டிடக்கலை, மெய்யியல், சட்டம், நாடுகளின் அரசுகள் ஆகியவற்றின் மீது பாரசீகச் செல்வாக்கு இன்றுவரை நிலைத்திருப்பதற்கான காரணமாகியது.

வரலாறு[தொகு]

மீடெஸ் அரசின் ஒரு சிற்றரசாகத் தொடங்கிய இவ்வரசு பின்னர் பேரரசர் சைரசு காலத்தில் மீடெசைக் கைப்பற்றி பண்டைய எகிப்து, அனதோலியா மற்றும் ஆசியா மைனர் ஆகியவற்றையும் உள்ளடக்கி விரிவாகியது. பேரரசர்கள் முதலாம் டேரியஸ் மற்றும் முதலாம் அர்தசெராக்சஸ் ஆகியோர், கிமு 499 முதல் 449 முடிய நடத்திய கிரேக்க-பாரசீகப் போர்கள் மூலம் பண்டைய கிரேகக்த்தையும் கைப்பற்றுமளவுக்கு நெருங்கியது. கிமு 330 ஆம் ஆண்டின் அக்கீமெனிட் பேரரசு பேரரசன் அலெக்சாந்தரால் தோற்கடிக்கப்படது.

அகாமனிசியப் பேரரசர்கள்[தொகு]

அகாமனிசியர்களின் காலவரிசை

பெயர் உருவம் குறிப்பு ஆட்சிக் காலம்
முதலாம் சைரஸ் Illustrerad Verldshistoria band I Ill 058.jpg அகாமனிசியப் பேரரசை நிறுவியவர் கிமு 560–530
இரண்டாம் காம்பிசெஸ் Stela Cambyses Apis closeup.jpg பாரசீகப் பேரரசர் மற்றும் எகிப்தின் பார்வோன் கிமு 530–522
பார்த்தியா / செமர்திஸ் Gaumata portrait on the Behistun inscription.jpg கிமு 522
முதலாம் டேரியஸ் Darius In Parse.JPG பாரசீகப் பேரரசர் மற்றும் எகிப்தின் பார்வோன் கிமு 522–486
முதலாம் செர்கஸ் Xerxes I relief.jpg பாரசீகப் பேரரசர் மற்றும் எகிப்தின் பார்வோன் 486–465 BC
முதலாம் அர்தசெராக்சஸ் Artaxerxes I at Naqsh-e Rostam.jpg பாரசீகப் பேரரசர் மற்றும் எகிப்தின் பார்வோன் கிமு 465–424
இரண்டாம் செராக்சஸ் பாரசீகப் பேரரசர் மற்றும் எகிப்தின் பார்வோன் கிமு 424 (45 நாட்கள்)
சோக்டியானஸ் பாரசீகப் பேரரசர் மற்றும் எகிப்தின் பார்வோன் கிமு 424–423
இரண்டாம் டேரியஸ் Darius ii.png பாரசீகப் பேரரசர் மற்றும் எகிப்தின் பார்வோன் கிமு 423–405
இரண்டாம் அர்தசெராக்சஸ் Artaxerxes II relief detail.jpg பாரசீகப் பேரரசர் கிமு 405–358
மூன்றாம் அர்தசெராக்சஸ் Artaxerxes III on his tomb relief.jpg பாரசீகப் பேரரசர் மற்றும் எகிப்தின் பார்வோன் கிமு 358–338
அர்செஸ் பாரசீகப் பேரரசர் மற்றும் எகிப்தின் பார்வோன் கிமு 338–336
மூன்றாம் டேரியஸ் Darius III of Persia.jpg இறுதி பாரசீகப் பேரரசர் மற்றும் எகிப்தின் பார்வோன் கிமு 336–330

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகாமனிசியப்_பேரரசு&oldid=3304167" இருந்து மீள்விக்கப்பட்டது