உள்ளடக்கத்துக்குச் செல்

அகுரா மஸ்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அகுரா மஸ்தா (Ahura Mazda) (/əˌhʊərə ˈmæzdə/;[1] பாரசீக சொராஷ்டிரிய சமயத்தில் அறிவு மற்றும் படைப்பிற்கு அதிபதியும், தலைமைக் கடவுளும் ஆவார்.

அகாமனிசியப் பேரரசர் முதலாம் டேரியஸ் ஆட்சிக் காலத்தில் (கிமு 522 - கிமு 486) அகுரா மஸ்தா தெய்வம் குறித்து முதன் முதலாக அறிய முடிகிறது. பேரரசர் இரண்டாம் அர்தசெராக்சஸ் ஆட்சிக் காலத்தில் (கிமு 405 - 358) அகுரா மாஸ்தா தெய்வத்தின் உருவம் அனைத்து அரச குடும்பத்தின் அனைத்து நினைவுச் சிற்பங்களில் பொறிக்கப்பட்டது.

அகழாய்வில் பேரரசர் இரண்டாம் அர்தசெராக்சஸ் உடன் அகுரா மாஸ்தா, மித்திரன் மற்றும் அனஹிதா ஆகிய முப்பெரும் தெய்வங்களுடன் கூடிய சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.

அகாமனிசியப் பேரரசு காலத்தில் படைகள் போருக்குச் செல்வதற்கு முன்னர், வெள்ளைக் குதிரைகள் பூட்டப்பட்ட ஒரு தேர் சித்திரத்தில் அகுரா மாஸ்தா தெய்வம் அமர்ந்திருப்பதாக கருதி வழிபட்டு, பின்னர் போருக்கு செல்வர். சாசானியப் பேரரசுக்குப் பின்னர், கிபி ஏழாம் நூற்றாண்டில் பாரசீகத்தில் இசுலாமின் எழுச்சியின் போது, நடைபெற்ற உருவ அழிப்பு இயக்கத்தின் போது அகுரா மாஸ்தா போன்ற கடவுளர்களின் சிற்பங்கள் சிதைக்கப்பட்டடது.

மெசொப்பொத்தேமியாவின் புது அசிரியப் பேரரசர் அசூர்பனிபால் காலத்திய ஆப்பெழுத்தில் எழுதப்பட்ட களிமண் பலகையில் அசாரா மாசாஸ் எனும் தெய்வத்தின் பெயர் குறிக்கப்பட்டுள்ளது.[2]

தெய்வத்தின் குணங்கள்

[தொகு]

பண்டைய பாரசீக சொராஷ்டிரிய சமயத்தின் நிறுவனர் ஆன சரத்துஸ்தர் (கி.மு. 1500 – 1400) ஆகுரா மஸ்தாவை உருவாக்கப்படாத ஆவி, முழு ஞானமுள்ளவர், நற்பண்புள்ளவர், நல்லவர், அதே போல் படைக்கும் தெய்வம் மற்றும் வாய்மையின் இருப்பிடம் ஆவார் எனக்கூறுகிறார். சொராட்டிரிய நெறியின் வேதமான அவெத்தாவில் அகுரா மஸ்தாவை கடவுள்களின் தலைவர் எனக்கூறுகிறது.

வரலாறு

[தொகு]

அகாமனிசியப் பேரரசில்

[தொகு]
அகாமனிசியப் பேரரசர் முதலாம் டேரியஸ் வடித்த அகுரா மஸ்தா தெய்வம் தொடர்பான சிற்பங்கள்

பிந்தைய கால அகாமனிசியப் பேரரசின் பெர்சப்பொலிஸ் நகரத்தின் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட கிரேக்க மொழிக் குறிப்புகளில் அகுரா மாஸ்தா தெய்வத்துடன் மித்திரா மற்றும் அனஹிதா போன்ற தெய்வங்களின் பெயர்களும் காணப்படுகிறது.

பண்டைய அண்மை கிழக்கின் நகரங்களான ஈலாம் மற்றும் பெர்சப்பொலிஸ் நகரங்களில் கிடைத்த துவக்க களிமண் பலகை குறிப்புகளின் படி, அகுரா மஸ்தா தெய்வத்துடன், இந்தியாவின் வேதகால தெய்வங்களான மித்திரன் மற்றும் வருணன் ஆகிய தெய்வங்களின் பெயர்களும் குறிப்பிடுகிறது. [3][4]

அகுரா மஸ்தா தெய்வத்தின் பெயர் ரிக் வேதத்தின் மந்திரங்கள் 7.86–88, 1.25, 2.27–30, 8.8, 9.73-களில் காணப்படுகிறது.[3][5]நீர், ஆறுகள் மற்றும் கடல்களுக்கும் அகுரா மஸ்தா தெய்வத்திற்கும இடையேயான தொடர்புகள் இந்து வேதங்களில் குறிக்கப்பட்டுள்ளது.[6]

பார்த்தியப் பேரரசு & சாசானியப் பேரரசில்

[தொகு]

பாரசீகத்தின் பார்த்தியப் பேரரசு காலத்தில் அகுரா மஸ்தா தெய்வத்துடன் அனஹிதா மற்றும் மித்திரன் தெய்வங்கள் வழிபடப்பட்டது. ஆனால் சாசானியப் பேரரசு ஆட்சியின் இறுதிக் காலத்தில் அகுரா மஸ்தா தெய்வ வழிபாடு மெல்ல மெல்ல மறையத் துவங்கியது.[7]

கிமு மூன்றாம் நூற்றாண்டின் சாசானியப் பேரரசர் முதலாம் அர்தசிருக்கு (இடது) அரசுரிமைக்கான மகுடம் வழங்கும் அகுரா மஸ்தா தெய்வத்தின் சிற்பம், கிமு 3-ஆம் நூற்றாண்டு

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ahura Mazda | Definition of Ahura Mazda by Merriam-Webster". Merriam-webster.com. பார்க்கப்பட்ட நாள் 2016-01-11.
  2. Boyce 1975, ப. 14.
  3. 3.0 3.1 Mariasusai Dhavamony (1982). Classical Hinduism. Gregorian. pp. 167–168 with footnotes. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-88-7652-482-0.
  4. John Gwyn Griffiths (1991). The Divine Verdict: A Study of Divine Judgement in the Ancient Religions. BRILL. pp. 132–133. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-09231-5.
  5. Adrian Snodgrass (1992). The Symbolism of the Stupa. Motilal Banarsidass. pp. 120–122 with footnotes. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0781-5.
  6. Hermann Oldenberg (1988). The Religion of the Veda. Motilal Banarsidass. p. 104. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0392-3.
  7. Boyce 1983, ப. 686.

ஆதாரநூற்பட்டியல்

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகுரா_மஸ்தா&oldid=3000710" இலிருந்து மீள்விக்கப்பட்டது