களிமண் பலகை
Appearance
களிமண் பலகைகள் (Clay tablets) பண்டைய மெசொப்பொத்தேமியாவில், கிமு 5,000 முதல் முக்கிய குறிப்புகள் எழுவதற்கு களிமண் பலகைகள் எழுது கருவியாகப் பயன்படுத்தப்பட்டது.[1][2]
பச்சை களிமண்னை, செவ்வக வடிவில் அமைத்து, அதில் எழுத்தாணியால் மருத்துவக் குறிப்புகள், வம்ச மன்னர்கள் பெயர், சுமேரிய கடவுள்கள் பெயர், போர் வெற்றிக் குறிப்புகள், சமயச் சின்னங்கள், கடவுள் உருவங்கள், அரச முத்திரைகள் பதித்து பின்னர், நீரில் கரையால் இருக்க, களிமண் பலகைகளை சூரிய ஒளியிலோ அல்லது செங்கல் சூளையிலோ இட்டு வலுப்படுத்தினர்.
பண்டைய அண்மை கிழக்கின் நகரங்களில் வாழ்ந்த சுமேரியர்களும், பின்னர் வந்த பாபிலோனியர்களும் பின்னர் மற்றவர்களும், களிமண் பலகைகளில், தங்களது குறிப்புகளை ஆப்பெழுத்தில் எழுதினர்.