மெசொப்பொத்தேமியாவின் புவியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மெசொப்பொத்தேமியாவின் புவியியல் (geography of Mesopotamia), தொன்மம் மற்றும் வரலாற்றின் படி, இரு பெரும் ஆறுகளான புறாத்து ஆறு மற்றும் டைகிரீஸ் ஆறுகளுக்கிடையே அமைந்த நிலப்பரப்பாகும்.

மெசொப்பொத்தேமியாவின் புவியியல் பகுதியில் ஈராக், ஈரான், சிரியா மற்றும் துருக்கியின் தென்கிழக்குப் பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. மெசொபொதேமியாவின் மேற்கில் சிரியப் பாலைவனமும், தெற்கில் அராபியப் பாலைவனமும், தென்கிழக்கில் பாரசீக வளைகுடாவும், கிழக்கில் சக்ரோசு மலைத்தொடர்களும், வடக்கில் காக்கேசிய மலைகளாலும் சூழப்பட்ட பகுதிகளில் பாயும் டைகிரிசு ஆறு மற்றும் யூபிரட்டீஸ் ஆறுகளின் சமவெளிகள் முழுவதையும், உள்ளடக்கியதாகும்.

மெசொப்பொதேமியா, உலகின் மிகப் பழைய சுமேரிய நாகரிகம், சாலடிய நாகரிகம் போன்ற பண்டைய நாகரிகங்கள் தழைத்தோங்கியிருந்த நிலப்பரப்பாகும்.

பண்டைய ஆவணங்களின் படி, வடக்கு மெசொப்பொத்தேமியாவில் பண்டைய அசிரியாவின் தலைநகரம் அசூர் உள்ளிட்ட முதன்மையான நகரங்களான நினிவே, நிம்ருத் மற்றும் எர்பில் முதன்மையான நகரங்கள் டைகிரீஸ் ஆற்றின் கிழக்கு கரையில் இருந்தன.

மெசொப்பொத்தேமியாவிற்கான விளக்கம்[தொகு]

பண்டைய கிரேக்க மொழியில் மெசொப்பொத்தேமியா என்பதற்கு இரு ஆறுகளுக்கு இடையே அமைந்த நிலப்பகுதி எனப்பொருள்.

கிமு 4-ஆம் நூற்றாண்டில், சிரியாவின் வடக்கில் பாயும் யூப்பிரடீஸ் ஆற்றின் கிழக்குப் பகுதிகளைக் குறிக்க மெசொப்பொத்தேமியா என்ற கிரேக்கச் சொல் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது.[1] நவீன காலத்தில் மெசொப்பொத்தேமியா எனும் சொல் யூப்பிரடீஸ் - டைகிரீஸ் ஆற்றிற்கு இடைப்பட்ட பகுதிகளான தென்கிழக்கு துருக்கி, சிரியா மற்றும் ஈராக் நாடுகளின் பகுதிகளைக் குறிக்கப்படுகிறது.[2]

யூப்ரடீஸ் ஆற்றின் மேற்கில் அமைந்த ஸ்டெப்பிப் புல்வெளிகளையும் மற்றும் சக்ரோசு மலைத்தொடரின் மேற்குப் பகுதிகளையும், மெசொப்பொத்தேமியாவின் புவியியல் பகுதியாக பரந்த அளவில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.[3][4][5]

மேலும் புவியியல் அடிப்படையில் மெசொப்பொத்தேமியாவை வடக்கு அல்லது மேல் மெசொப்பொத்தேமியா , தெற்கு அல்லது கீழ் மெசொப்பொத்தேமியா எனப் பிரிக்கப்படுகிறது.[6] பாக்தாத் வரையிலான வடக்கு அல்லது மேல் மெசொப்பொத்தேமியாவை ஜாகிரியா என்பர்.[3] பாக்தாத் முதல் பாரசீக வளைகுடா வரையிலான பகுதிகளை தெற்கு அல்லது கீழ் மெசொப்பொத்தேமியா என்பர்[6] நவீன அறிவியல் பயன்பாட்டில், மெசொப்பொத்தேமியா என்ற சொல் பெரும்பாலும் காலவரிசைச் சொற்களாகும். நவீன மேற்கத்திய வரலாற்றியல் கருத்துகளின் படி, பண்டைய காலம் முதல் இசுலாமியர்களின் துவக்க ஆக்கிரமிப்புக் காலம் (கிபி 630) வரை மெசொப்பொத்தேமியா எனும் சொல் பயன்படுத்தப்பட்டது. மத்திய கிழக்கிலும், நடு ஆசியாவிலும், இசுலாமியர்களின் (கிபி 630) படையெடுப்புகளுக்குப் பின்னர், மெசொப்பொத்தேமியாவை, அரேபியர்கள் அரபு மொழியில் ஈராக் மற்றும் ஜசிரா என ஆவணப்படுத்தினர்.[2][7]

மேல் மெசொப்பொத்தேமியா[தொகு]

துருக்கியின் தென்கிழக்கில் பாயும் முராத்து ஆறு, யூப்பிரடீஸ் ஆற்றின் துணையாறு
அல்-அசகாவிற்கு வடக்கில் அமைந்த பரந்த நிலப்பரப்பு

250 மைல் நீளம் கொண்ட பரந்த மேல் மெசொப்பொத்தேமியா சமவெளியில் சுண்ணாம்புகல் சக்ரோசு மலைத்தொடர்கள் உள்ளது.

சக்ரோசு மலைத்தொடரின் உயர்ந்த கொடுமுடிகள், அசிரியாவுடன், ஆர்மீனியா, மற்றும் குர்திஸ்தானையும் பிரிக்கிறது.

மேற்காசியாவில் அசிரிய மக்களின் பேரரசான பண்டைய அசிரியாவின் தலைநகரம், டைகிரீஸ் ஆற்றின் வலது கரையில் அமைந்த அசூர் நகரத்தின் பெயரால் பல்லாண்டு காலம் நீடித்து விளங்கியது. இறுதியில் நினிவே, நிம்ருத் போன்ற நகர இராச்சியத்தினரால் அசிரியர்கள் வீழ்த்தப்பட்டனர்.

கீழ் மெசொப்பொத்தேமியா[தொகு]

கீழ் மெசொப்பொத்தோமியாவில் சுமேரிய, நகர நாகரீகங்கள் செழிப்புடன் விளங்கியது. யூப்பிரடீஸ் மற்றும் டைகிரீஸ் ஆற்றின் வளமான வண்டல் மண் நிரம்பப் பெற்றதால் கீழ் மெசொப்பொத்மியா வேளாண்மை செழிப்புடன் விளங்கியது. மேலும் இப்பகுதியில் மக்கள்தொகை கூடியிருந்தது. கைத்தொழில்கள் நன்கு வளர்ச்சி பெற்றிருந்தது. பண்டைய சமயக் கடவுள்களுக்கான வழிப்பாட்டிங்கள் இப்பகுதியில் அதிகம் விளங்கியது. இதன் கிழக்கில் ஈலாம் மலைகளும், தெற்கில் சதுப்பு நிலங்களும், மேற்கில் பாபிலோனியா நாகரீகம் பரவியிருந்தது.

கீழ் மெசொப்பொத்தேமியாவை புகழ்பெற்ற பண்டைய பாபிலோன், ஊர், நிம்ருத், சிப்பர், நிப்பூர், லார்சா, மாரி, எப்லா போன்ற நகர இராச்சியங்கள் ஆண்டது. ஊர் நகரத்தின் கிழக்கே பண்டைய கடற்கரை துறைமுக நகரமான எரிது இருந்தது.

மக்களும், மொழிகளும்[தொகு]

பண்டைய மெசொப்பத்தோமியா புவியியற்பரப்புகளில் சுமேரிய மொழி, அக்காதியம், இட்டைட்டு மொழி, கிழக்கு செமிடிக் மொழிகள், மேற்கு செமிடிக் மொழிகள், லூவிய மொழி, அரமேயம், ஈலமைட்டு மொழி, ஆர்மீனியம் மற்றும் பாரசீக மொழிகள் பேசிய அக்காடியப் பேரரசு, அசிரியப் பேரரசு, அகாமனிசியப் பேரரசு, எப்லா, மாரி, மித்தானி, மீடியா, பாபிலோனியப் பேரரசு விளங்கியது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

ஆதார நூற்பட்டியல்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

  • Douglas Frayne, The Early Dynastic List of Geographical Names (1992).
  • Piotr Steinkeller, On the Reading and Location of the Toponyms ÚR×Ú.KI and A.ḪA.KI, Journal of Cuneiform Studies, Vol. 32, No. 1 (Jan., 1980), pp. 23–33.
  • William W. Hallo, The Road to Emar Journal of Cuneiform Studies, Vol. 18, No. 3 (1964), pp. 57–88