என்லில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
என்லில்
பாரசீக உருளை வடிவ முத்திரையில், என்லில் கடவுளின் சின்னத்தை கொம்பு முடியில் பொறித்த மன்னர், காலம் கிமு 550 - கிமு 330
அதிபதிகாற்று, சூறாவளி மற்றும் பூமி
இடம்நிப்பூர்
துணைநின்லில்
பெற்றோர்கள்அனு மற்றும் கீ
குழந்தைகள்நினுர்தா, சின், நெர்கல், நினசு மற்றும் என்பிலுலு
நிப்பூர் நகரத்தின் என்லில் கடவுளின் கோயில் சிதிலங்கள்
சுமேரியக் கடவுள் என்லில் மகன் நினுர்தா, வஜ்ராயுதம் கொண்டு அன்சு எனும் பறவை அசுரனை எதிர்த்தல் [1]

என்லில் (Enlil) பண்டைய சுமேரியாவின் நிப்பூர் போன்ற பண்டைய அண்மை கிழக்கு நகர மக்களால் வழிபட்ட காற்றின் கடவுள் ஆவார். [2][3][4] என்லில் கடவுள் காற்று, பூமி மற்றும் சூறாவளிக்கு அதிபதி ஆவார்.[5] சுமேரியக் கடவுள்களில், என்லில் கடவுள் தலைமைக் கடவுளாக இருந்தவர். என்லில் கடவுளை அக்காதியர்கள், பாபிலோனியர்கள, அசிரியர்கள், ஹுரியத் மக்கள் வழிபட்டனர்.[6]

என்லில் கடவுளின் முதன்மை வழிபாட்டுத் தலம் நிப்பூரில் இருந்தது. கிமு 24-வது நூற்றாண்டில் கடவுள் என்லில், அனைத்து சுமேரியக் கடவுள்களுக்கு தலைமைக் கடவுளாக வணங்கப்பட்டார். என்லில் கடவுள், வானத்திலிருந்து பூமியை பிரித்தன் மூலம் உலகம் தனியாக இயங்கத் துவங்கியதாக சுமேரியர்கள் கருதினர்

கிமு 1230-இல் ஈலாம் நாட்டினர் மெசொப்பொத்தேமியாவைக் கைப்பற்றிய போது, என்லில் கடவுளின் வழிபாடும், முக்கியத்துவமும் பின்னுக்குத் தள்ளப்பட்டது.

பெயர்க் காரணம்[தொகு]

பணடைய சுமேரிய மொழியில் என் (EN) என்பதற்கு கடவுள் என்றும், லில் (LÍL) என்பதற்கு காற்று எனப் பொருளாகும்.[2][3][4]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

ஆதார நூற்பட்டியல்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Enlil
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்லில்&oldid=3851129" இலிருந்து மீள்விக்கப்பட்டது