காருன் ஆறு

ஆள்கூறுகள்: 30°25′39″N 48°09′55″E / 30.4275°N 48.1653°E / 30.4275; 48.1653
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காருன் ஆறு
ஈரான் நாட்டின் கூசித்தான் மாகாணம் வழியாக பாயும் காருன் ஆறு
காருன் ஆற்றின் வரைபடம்
அமைவு
நாடுஈரான்
மாகாணம்சஹர்மகல் & பக்தியாரி மற்றும் கூசித்தான்
நகரங்கள்சுஸ்தர், அகுவாசு, கோற்றாம்சார், அபாடான்
சிறப்புக்கூறுகள்
மூலம்சார்டு குக்
 ⁃ அமைவுசக்ரோசு மலைத்தொடர், கூசித்தான்
முகத்துவாரம்அர்வந்து ரௌத்
 ⁃ அமைவு
கோட்டரம்ஷாகிர்
 ⁃ உயர ஏற்றம்
0 m (0 அடி)
நீளம்950 km (590 mi)
வடிநில அளவு65,230 km2 (25,190 sq mi)
வெளியேற்றம் 
 ⁃ அமைவுஅவாஸ்
 ⁃ சராசரி575 m3/s (20,300 cu ft/s)
 ⁃ குறைந்தபட்சம்26 m3/s (920 cu ft/s)[1]
 ⁃ அதிகபட்சம்2,995 m3/s (105,800 cu ft/s)[1]
ஈராக் நாட்டின் சாட் அல் அராப் ஆற்றுடன், ஈரான் நாட்டின் காருன் ஆறு கலக்கும் வரைபடம்
காருண் அணை எண் 3

காருன் ஆறு (Kārūn)[2] (பாரசீக மொழி: کارون‎, IPA: [kɒːˈɾuːn]) ஈரான் நாட்டில் பாயும் ஆறுகளில் சிறிய வணிகக் கப்பல் போக்குவரத்து மேற்கொள்ளப்படுவதற்கு ஏற்ற ஆறாகும். இந்த ஆறு ஈரான் நாட்டின் வடமேற்கில் உள்ள சக்ரோசு மலைத்தொடரில் அமைந்த குக்ராங் கொடுமுடியில் உற்பத்தியாகி, சஹர்மகல் & பக்தியாரி மற்றும் கூசித்தான் மாகணங்களின் சுஸ்தர், அகுவாசு, கோற்றாம்சார் மற்றும் அபாடான் நகரங்கள் வழியாக பாய்ந்து, ஈராக் நாட்டின் தெற்கு பகுதியில் பாயும் சாட் அல் அராப் ஆற்றுடன் கலக்கிறது. இந்த ஆற்றின் மொத்த நீளம் 950 km (590 mi) ஆகும். [3][4] காருன் ஆற்றின் நீர் 280,000 எக்டேர்கள் (690,000 ஏக்கர்கள்) பரப்பளவிற்கு வேளாண்மைக்கு பயன்படுகிறது.[5]

இந்த ஆற்றின் கரையில் பண்டைய ஈலாம் நாகரீகம் செழித்து விளங்கியது. மின் உற்பத்தி, வேளாண்மைக்கும், குடிநீர் ஆதாரத்திற்கும் இந்த ஆற்றின் குறுக்கே 5 அணைகள் கட்டப்பட்டுள்ளது. [6][7] [8] [9]

அடிக்குறிப்புகள்[தொகு]

 1. 1.0 1.1 "Karun River at Ahvaz". River Discharge Database. Center for Sustainability and the Global Environment. 1965–1984. Archived from the original on 2010-06-20. பார்க்கப்பட்ட நாள் 2010-03-15.
 2. இதனை காரௌன் என்றும் அழைப்பர் (Karoun).
 3. Karun River, Encyclopædia Iranica at http://www.iranicaonline.org/articles/karun
 4. "Province of Khuzestan". Cities/Provinces of Iran. Iran Chamber Society. பார்க்கப்பட்ட நாள் 2010-03-15.
 5. "Study and Executive Projects of Irrigation and Drainage Networks". Water Department. Khuzestan Water and Power Authority. Archived from the original on 2007-08-28. பார்க்கப்பட்ட நாள் 2010-03-15.
 6. Karun & Dez Development Exploitation (Map). Cartography by Iran Water & Power Resources Development Co. Masjed Soleiman Project. Archived from the original on 2011-07-22. பார்க்கப்பட்ட நாள் 2010-03-14.
 7. "Masjed Soleiman Project: Technical Info". Masjed Soleiman Project. Iran Water and Power Resources Development Co. Archived from the original on 2013-07-13. பார்க்கப்பட்ட நாள் 2010-03-14.
 8. "Karun 3 Project: Technical Info". Karun 3 Project. Iran Water and Power Resources Development Co. Archived from the original on 2010-01-30. பார்க்கப்பட்ட நாள் 2010-03-14.
 9. "Karun 4 Project: Technical Info". Karun 4 Project. Iran Water and Power Resources Development Co. Archived from the original on 2011-07-22. பார்க்கப்பட்ட நாள் 2010-03-14.

மேற்கோள்கள்[தொகு]

 • Karun-3, Dam and Hydroelectric Power Plant, History.
 • N. Jafarzadeh, S. Rostami, K. Sepehrfar, and A. Lahijanzadeh, Identification of the Water Pollutant Industries in Khuzastan Province, Iranian Journal of Environmental Health Science & Engineering, Vol. 1, No. 2, pp. 36–42 (2004). [1]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காருன்_ஆறு&oldid=3851164" இலிருந்து மீள்விக்கப்பட்டது