தொன்மவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தொன்மவியல் என்பது, ஒரு குறிப்பிட்ட பண்பாட்டினர் உண்மை என்று நம்புகின்ற நாட்டுப்புறக் கதைகள், தொன்மங்கள், செவிவழிக் கதைகள் போன்றவற்றின் தொகுதியைக் குறிக்கும். இவை பொதுவாக, இயற்கை நிகழ்வுகளையும்; மனிதன், அண்டம் ஆகியவற்றின் இயல்புகளையும் விளக்குவதற்கு இயற்கைக்கு மீறிய விடயங்களைத் துணைக் கொள்கின்றன. தொன்மவியல் என்பது, தொன்மங்களைச் சேகரித்து, அவற்றை ஆய்வு செய்து, விளக்கம் கொடுப்பதில் ஈடுபடுகின்ற ஒரு அறிவுத்துறையைக் குறிக்கவும் பயன்படுகிறது. இது சில சமயங்களில் தொன்மவரைவியல் (mythography) எனவும் குறிப்பிடப்படுவது உண்டு. பல்வேறு பண்பாடுகளுக்குரிய தொன்மங்களை ஒப்பிட்டு ஆயும் துறை ஒப்பீட்டுத் தொன்மவியல் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொன்மவியல்&oldid=1990871" இருந்து மீள்விக்கப்பட்டது