உள்ளடக்கத்துக்குச் செல்

எசுன்னா

ஆள்கூறுகள்: 33°29′3″N 44°43′42″E / 33.48417°N 44.72833°E / 33.48417; 44.72833
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


எசுன்னா இராச்சியம்
ஏறத்தாழ கிமு 3000–கிமு 1700
கிமு 1764ல் எசுன்னா இராச்சியத்தின் பரப்பளவு (வெளிர் நீல நிறம்)
கிமு 1764ல் எசுன்னா இராச்சியத்தின் பரப்பளவு (வெளிர் நீல நிறம்)
தலைநகரம்எசுன்னா
அரசாங்கம்முடியாட்சி
• கிமு 2000
அர்குதின்னா (முதல்)
• கிமு 1763
சில்லி-சின் (இறுதி)
வரலாற்று சகாப்தம்வெண்கலக் காலம்
• தொடக்கம்
ஏறத்தாழ கிமு 3000
• முடிவு
கிமு 1700
முந்தையது
பின்னையது
அபூம்
முதல் பாபிலோனிய வம்சம்
தற்போதைய பகுதிகள் ஈராக்

எசுன்னா (Eshnunna) பண்டைய அண்மை கிழக்கின் மெசொப்பொத்தேமியாவின் வடக்கில் அமைந்த சுமேரிய நகர இராச்சியங்களில் ஒன்றாகும். எசுன்னா இராச்சியம் கிமு 3000 முதல் கிமு 1763 முடிய புகழுடன் விளங்கியது.[1]

தற்போது எசுன்னா இராச்சியத்தின் தொல்லியல் களம், ஈராக் நாட்டின் தியாலா ஆளுநரகத்தில், டைகிரிஸ் ஆற்றுக்கும், சக்ரோசு மலைத்தொடருக்கு இடையே, டெல் அஸ்மர் எனும் பெயரில் சிறு ஊராக உள்ளது. மேலும் எசுன்னா எனும் டெல் அஸ்மர் எனும் தொல்லியல் நகரம், பாக்தாத் நகரத்திற்கு வடகிழக்கே 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.[2]

எல்லைகள்[தொகு]

எசுன்னா இராச்சியத்தின் வடக்கில் பண்டைய அசிரியா, கிழக்கில் ஈலாம், தெற்கில் பாபிலோன், மேற்கில் மாரி இராச்சியங்களும் எல்லைகளாக இருந்தது.

வரலாறு[தொகு]

கிமு 3000-இல் ஜெம்தேத் நசிர் காலத்தில், மெசொப்பொத்தேமியாவின் துவக்க வம்ச ஆட்சியின் போது, எசுன்னா நகரம், பண்டைய நகரங்களில் முக்கியப் பெரிய நகரமாக விளங்கியது.

மூன்றாவது ஊர் வம்சம் மற்றும் அக்காடியப் பேரரசுகளின் எழுச்சியின் போது, எசுன்னா நகர இராச்சியம், யாருக்கு ஆதரவு தருவது என்ற ஊசலாட்டம் எழுந்தது. ஏனெனில் எசுன்னா இராச்சியம், மெசொப்பொத்தேமியா மற்றும் ஈலாம் பண்பாட்டுகளின் நுழைவாயிலாக இருந்தது.

கிமு 2000 ஆயிரமாண்டில், எசுன்னா இராச்சியம், மன்னர் சாம்சி-அதாத் ஆட்சியின் போது, தன்னாட்சியுடன் ஆளப்பட்டது. மேலும் ஈலாம் இராச்சியத்தை எசுன்னா இராச்சியத்தினர் கைப்பற்றினர். பின்னர் முதல் பாபிலோனியப் பேரரசர், அம்முராபியின் ஆட்சிக் காலத்தில், கிமு 1763-இல் எசுன்னா இராச்சியத்தைக் கைப்பற்றப்பட்டு, பாபிலோனியாவுடன் இணைக்கப்பட்டது.

இதனையும் காண்க[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

 1. Eshnunna
 2. "Tell al-Asmar (ancient: Eshnunna)". Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2019-01-03.

மேற்கோள்கள்[தொகு]

 • City In the Sand (2nd Edition), Mary Chubb, Libri, 1999, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-901965-02-3
 • [1] R. M. Whiting Jr., Old Babylonian Letters from Tell Asmar, Assyriological Studies 22, Oriental Institute, 1987
 • [2] I.J. Gelb, Sargonic Texts from the Diyala Region, Materials for the Assyrian Dictionary, vol. 1, Chicago, 1961
 • Maria deJong Ellis, Notes on the Chronology of the Later Eshnunna Dynasty, Journal of Cuneiform Studies, vol. 37, no. 1, pp. 61–85, 1985
 • I. J. Gelb, A Tablet of Unusual Type from Tell Asmar, Journal of Near Eastern Studies, vol. 1, no. 2, pp. 219–226, 1942
 • Romano, Licia, Who was Worshipped in the Abu Temple at Tell Asmar?, KASKAL 7, pp. 51–65, 2010
 • [3] Pinhas Delougaz, Pottery from the Diyala Region, Oriental Institute Publications 63, Chicago: The University of Chicago Press, 1952, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-226-14233-7
 • [4] Pinhas Delougaz, Harold D. Hill, and Seton Lloyd, Private Houses and Graves in the Diyala Region, Oriental Institute Publications 88, Chicago: The University of Chicago Press, 1967
 • [5] Pinhas Delougaz and Seton Lloyd with chapters by Henri Frankfort and Thorkild Jacobsen, Pre-Sargonid Temples in the Diyala Region, Oriental Institute Publications 58, Chicago: The University of Chicago Press, 1942

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எசுன்னா&oldid=3732240" இலிருந்து மீள்விக்கப்பட்டது