உள்ளடக்கத்துக்குச் செல்

பாபிரஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாபிரஸ் எனும் நாணல் செடிகளை கூழ் செய்து தயாரிக்கப்பட்ட காகிதத்தில் எழுதப்பட்ட ஆவணம்
கிமு நான்காம் ஆயிரமாண்டில் பாபிரஸ் தாளில் எழுதப்பட்ட எகிப்து இராச்சியத்தின் கடிதங்கள்
ரைன்ட் கணிதப் பாபிரஸ் தாள்

பாபிரஸ் (Papyrus) /pəˈprəs/ பண்டைய எகிப்தில், கிமு முவாயிரம் ஆயிரமாண்டில், நைல் ஆற்றின் கழிமுகத்தின் சதுப்பு நிலத்தில் விளையும் பாபிரஸ் எனும் நாணல் போன்ற செடிகளின் தண்டுகளைப் பிழிந்தெடுத்த வெள்ளைப் பசை போன்ற கூழிலிருந்து தயாரிக்கப்படும் தடித்த காகிதம் போன்ற எழுது பொருளாகும். இந்த தடித்த காகிதத்தை எகிப்தியர்கள் பாபிரஸ் என்றழைத்தனர்.[1]

இந்த தடிமனான பாபிரசில், எகிப்திய மன்னர்களின் வரலாற்று குறிப்புகள், கணிதக் குறிப்புகள், மருத்துவக் குறிப்புகள் மற்றும் பிரமிடு குறிப்புகள் எழுதிவைத்து சேமித்தனர். பாபிரஸ் காகிதத்தில் எழுதப்பட்ட ஆவணச் சுருள்கள் சுருட்டி வைத்து பயன்படும் வகையில் இருந்தது.

எகிப்தின் துவக்க கால அரசமரபுகளில் முதன்மையான முதல் வம்சத்தினரின் ஆட்சிக் காலத்தில் (கிமு 3150 கிமு – கிமு 2686) நைல் ஆற்றின் கழிமுகத்தின் சதுப்பு நிலத்தில் விளையும் பாபிரஸ் எனும் நாணல் போன்ற செடிகளை கூழ் செய்து காகிதம், காலணிகள் தரை விரிப்பு, கயிறு மற்றும் கூடைகள் தயாரித்தனர்.[2]

பெயர்க் காரணம்

[தொகு]

எகிப்தின் பாபிரஸ் எனும் புதர்ச்செடிகளிலிருந்து, காகிதம் தயாரிக்கப்பட்டதால், காகிதத்திற்கு பாபிரஸ் எனப்பெயராயிற்று. கிரேக்க மற்றும் லத்தீன் மொழிச் சொல்லிருந்து பாபிரோஸ் (papyros) எனும் சொல் ஆங்கில மொழிக்கு வந்தது.[3]

பாபிரஸ் காகிதத்தில் ஆவணப்படுத்தவைகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Papyri
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. "Papyrus definition". Dictionary.com. பார்க்கப்பட்ட நாள் 20 November 2008.
  2. "Ebers Papyrus". Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் 8 March 2014.
  3. πάπυρος, Henry George Liddell, Robert Scott, A Greek-English Lexicon, on Perseus

மேற்கோள்கள்

[தொகு]
  • Leach, Bridget, and William John Tait. 2000. "Papyrus". In Ancient Egyptian Materials and Technology, edited by Paul T. Nicholson and Ian Shaw. Cambridge: Cambridge University Press. 227–253. Thorough technical discussion with extensive bibliography.
  • Leach, Bridget, and William John Tait. 2001. "Papyrus". In The Oxford Encyclopedia of Ancient Egypt, edited by Donald Bruce Redford. Vol. 3 of 3 vols. Oxford, New York, and Cairo: Oxford University Press and The American University in Cairo Press. 22–24.
  • Parkinson, Richard Bruce, and Stephen G. J. Quirke. 1995. Papyrus. Egyptian Bookshelf. London: British Museum Press. General overview for a popular reading audience.

மேலும் படிக்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாபிரஸ்&oldid=3575550" இலிருந்து மீள்விக்கப்பட்டது